ஜிமெயில், பேஸ்புக், யாஹூ இவை மூன்றிலும் ஒரே நேரத்தில் Chatting செய்ய
பிரபல தளங்களின் உதவியுடன் நாம் நமது நண்பர்களுடன் அரட்டை அடித்து மகிழ்கிறோம். இந்த சேவையை பல தளங்கள் வழங்கினாலும் ஜிமெயில்,பேஸ்புக் மற்றும் யாகூ இவை மூன்றும் தான் மிகப்பிரபலமான தளங்கள். இந்த தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடித்து மகிழ்ந்தாலும் இந்த மூன்று தளத்திலும் ஒரே நேரத்தில் Chatting செய்ய முடியவில்லை என்பது வருத்தமே. ஏனென்றால் ஒவ்வொரு தளத்திற்கும் நன் நண்பர்களின் வட்டம் மாறும் ஜிமெயிலில் யாருடனாவது பேசி கொண்டிருந்தால் பேஸ்புக் நண்பர்களிடம் Chatting செய்ய முடியாது பேஸ்புக்கில் Chatting செய்து கொண்டிருந்தால் ஜிமெயில்,யாஹூ நண்பர்களிடம் அரட்டை அடிக்க முடியாது. இந்த பிரச்சினை இனி இல்லை ஜிமெயில்,பேஸ்புக்,யாஹூ என மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் Chatting செய்து கொள்ளலாம்.
- இந்த தளத்திற்கு சென்று புதியதாக உறுப்பினர் ஆகி கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை ஏற்கனவே நமக்கு உள்ள பேஸ்புக் ஐடி மூலம் உறுப்பினர் ஆகி கொள்ளும் வசதி உள்ளது.
- ஏதாவது ஒரு முறையில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். உறுப்பினர் ஆகிய உடன் உங்கள் விண்டோவில் வலது பக்கத்தின் கீழே ஒரு மெனுபார் போன்று இருக்கும்.
- Chat with என்ற பகுதியில் Gmail, Yahoo, Facebook மற்றும் ibibo போன்ற ஐகான்கள் இருக்கும்.
- அதில் அதில் ஒவ்வொன்றிலும் கிளிக் செய்து உங்கள் கணக்குகளில் நுழைந்தால் ஆன்லைனில் உள்ள நண்பர்களின் பட்டியல் உங்களுக்கு காட்டப்படும்.
- அந்த நண்பர்களுக்கு நேராக அவர்கள் எந்த தளத்தில் ஆன்லைனில் உள்ளார்கள் என கண்டறிய ஏதுவாக அவர்களின் பெயருக்கு நேரே அதற்க்கான லோகோக்களும் காண்பிக்க படும்.
- இதில் உங்களுக்கு தேவையான நண்பரின் மீது கிளிக் செய்தால் Chat window திறக்கும் அதில் அவருடன் நீங்கள் அரட்டை அடித்து கொள்ளலாம்.
- மேலும் ஆன்லைனில் இருப்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்கவும் இதில் வசதியை கொடுத்து இருக்கின்றனர்.
- இதில் உள்ள Go offline என்பதை கிளிக் செய்தால் நீங்கள் ஆன்லைனில் இருப்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்து கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு செல்ல - Gmail-facebook-yahoo
டுடே லொள்ளு
எவ்ளோ வேகமா ஓடினாலும் எங்கிட்ட இருந்து தப்ப முடியாது கண்ணா
Comments