நண்பர்கள் பலரும் அலைபேசியில் அழைக்கும் போது, என்ன மாதிரி கணினி வாங்கலாம் என்று ஒரு கேள்வி கேட்கின்றார்கள். நன்றாக கணினியில் இயங்கும் நண்பர்கள் என்ற போதும், நிறைய நண்பர்களுக்கு கணினி Configuration எனப்படும் ஒன்று தெறிவது இல்லை. அவற்றைப் பற்றி இன்று விரிவாக காண்போம். இதில் ஒரு புதிய கணினி, மடிக்கணினி நீங்கள் வாங்கும் போது இவற்றை தான் கட்டாயம் பார்க்க வேண்டும். Monitor என்ற ஒன்றை தவிர மேசை கணினிக்கும், மடிக் கணினிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே கூறும் அனைத்தும் இரண்டுக்கும் சேர்த்தே. இவை அனைத்தும் இன்றைய நிலைக்கு (ஜூலை 2013) க்கு சிறந்தவை. நீங்கள் இதை படிக்கும் நேரத்தில் புதியதாக மார்க்கெட்டில் என்ன உள்ளது என்று பார்த்து வாங்கவும். 1. Processor இது தான் உங்கள் கணினியின் மூளை போன்றது. நீங்கள் செய்யும் அத்தனை விசயங்களையும் இயக்குவது இது தான். இது இல்லை என்றால் எதுவுமே இல்லை. புதியதாக கணினி வாங்கும் நண்பர்கள், இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய நிலையில் எது புதியதாக வந்து உள்ளது என்று பார்த்து ...
Comments