சென்ற வாரம், செவ்வாய் அன்று, தன்னுடைய புதிதாக வடிவமைக்கப்பட்ட 12 அங்குல திரை கொண்ட, 13.1 மிமீ தடிமன் கொண்ட மேக் புக் கம்ப்யூட்டரை, ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. தொடக்க நிலையில் உள்ள ஆப்பிள் மேக் புக் ஏர் மற்றும் உயர் நிலையில் உள்ள, ஆப்பிள் மேக் புக் ப்ரோ ஆகியவற்றிற்கு இடையே இது இடம் பெறுகிறது. இதன் சிறப்பம்சங்களாக, 13 மிமீ அளவிலான இதன் அடிப்பாகம், 907 கிராம் எடை, நாள் முழுவதும் மின் சக்தி தரக்கூடிய பேட்டரி ஆகியவற்றைக் கூறலாம். இன்டெல் கோர் எம் ப்ராசசர் மற்றும் பேட்டரியால், குறைந்த தடிமனில் கம்ப்யூட்டர் அமைந்துள்ளது. இந்த ப்ராசசர், உள்ளாக வெப்பத்தை வெளியேற்றும் மின்விசிறி தேவையை நீக்குகிறது. எனவே கம்ப்யூட்டரின் எடை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த மேக் புக் கம்ப்யூட்டரில் தான், ஆப்பிள் முதல் முறையாக, யு.எஸ்.பி. /சி போர்ட்டினைத் தந்துள்ளது. இது பவர், விடியோ அவுட்புட் மற்றும் டேட்டா ஆகிய அனைத்திற்கும் ஒன்றாக, ரிவர்ஸ் அமைப்பில் உள்ளது. இந்த மேக் புக் கம்ப்யூட்டர் மூன்று வண்ணங்களில், சில்வர், கிரே மற்றும் தங்க நிற வண்ணங்களில், வடிவமைக்கப்பட்டு கி...