ஆன்ட்ராய்ட் மொபைலை ட்யூனிங் செய்வது எப்படி..??
டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் சேரும் தேவையற்றவற்றை நீக்குவது போல, ஆன்ட்ராய்ட் போனிலும் அது போன்ற சுத்தப்படுத்தும் வேலைகளை மேற்கொள்ள இயலுமா? அப்படியானல் அவை என்ன? என்று கூறவும் என வேண்டுகோள் தந்தனர்.
அந்த நோக்கில் சிந்திக்கையில், தென்பட்ட சில முக்கியமான செயல்பாடுகள் இங்கே தரப்பட்டுள்ளன. இவற்றை மேற்கொண்டால், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், அதிக பட்ச பயன்களை, எந்தவிதமான சிக்கல்கள் இன்றிப் பெறலாம். இதோ அவை:

இங்கு தரப்படும் டிப்ஸ் மற்றும் குறிப்புகள் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களுக்கும் பொதுவானவையாகும். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் எந்த பதிப்பை உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வந்தாலும், இவற்றைப் பயன்படுத்தலாம். எந்த நாட்டில், இடத்தில் இவை இயக்கப்பட்டாலும், இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். அது மட்டுமின்றி, எந்த நிலையில் ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவராக ஒரு பயனாளர் இருந்தாலும், அவர் இவற்றைப் பயன்படுத்தலாம். அதிக ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய உதவிக் குறிப்புகள் இவை இல்லை.
தேவையற்றதை நீக்குக: இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள சிறிது கூடுதலான நேரம் தேவை. ஆனால், இதனை மேற்கொண்ட பின்னர், உங்கள் மொபைல் போன் பயன்பாட்டில் ஒரு மாறுதலை நீங்கள் உணரலாம். அது மட்டுமின்றி, உங்கள் ஆண்ட்ராய்ட் போனைக் கையாள்வது மிக மிக எளிதாக மாறும். உங்கள் ஆண்ட்ராய்ட் போன் பயன்பாட்டு காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாக சில அப்ளிகேஷன்களைத் தெரிந்து கொண்டு அவற்றை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். சிலவற்றை அவற்றின் பயன்களுக்காக அமைத்திருப்பீர்கள். சிலவற்றை நண்பர்கள் அல்லது போன் குறித்து தகவல்களைத் தரும் இதழ்களில் கிடைக்கும் .
குறிப்புகளின் அடிப்படையில் பெற்று இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். இவ்வாறு இன்ஸ்டால் செய்யப்பட்ட அனைத்து அப்ளிகேஷன்களும், உங்கள் போனின் அப்ளிகேஷன் பெட்டியில் (app drawer) இருக்கும். இந்த பெட்டியில், எத்தனை அளவிற்கு அதிகமான எண்ணிக்கையில் அப்ளிகேஷன்கள் உள்ளனவோ, அந்த அளவிற்கு, இவற்றைத் தேடிப் பெறும் நேரமும் அதிகமாகும்.
எனவே, உங்களுக்கு நீங்களே உதவி செய்திடும் வகையில், நீங்கள் பயன்படுத்தாத, அல்லது அதிகம் பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை, போனில் இருந்து அறவே நீக்கிவிடுங்கள். இதன் மூலம், மற்ற தேவையான அப்ளிகேஷன்களை நீங்கள் எளிதில் விரைவாகப் பெற்றுப் பயன்படுத்த முடியும். மேலும், உங்கள் போனில் தேக்கநிலைக்கான இடம் கிடைக்கும். இதில், இன்னும் சில தேவையான அப்ளிகேஷன்களை அமைக்கலாம். அல்லது நீங்கள் உருவாக்கும் பைல்களை, போட்டோ மற்றும் ஆடியோ, வீடியோ பைல்களைத் தேக்கி வைக்கலாம்.

இந்த சுத்தப்படுத்துதலை உங்கள் தொடர்புகள் பட்டியலிலும் மேற்கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தைப் பொறுத்தவரை, நீங்கள் பயன்படுத்தும் பலவிதமான சேவைகளிலில் உள்ள தொடர்புகளை ஒருங்கிணைத்து வைத்துக் கொள்ளும் வசதியினைத் தருகிறது.
கூகுள், பேஸ்புக் மற்றும் பிற தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களில் பயன்படுத்தும் தொடர்புகள் பட்டியலில் உள்ளவற்றையும், மொபைல் போனில் இணைத்துக் கொள்ளலாம்.
அவை போன் எண்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மின் அஞ்சல் முகவரிகளாகவும் இருக்கலாம். இதனால், உங்கள் சமூக இணைய தளங்களில் உள்ள உங்கள் தொடர்புகளைப் பொறுத்து, போனில் உள்ள காண்டாக்ட்ஸ் எனப்படும் முகவரித் தொகுதி பெரிதாக இடம் கொள்ளும் ஒன்றாகிவிடும்.
இது, போனின் மற்ற செயல்பாடுகளை வேகமாக மேற்கொள்ள விடாமல் பாதிக்கும் ஒன்றாக மாறிவிடும். எனவே, போன் மூலம் நீங்கள் பயன்படுத்தாத முகவரிகளை நீக்கிவிடுவதே நல்லது. இதற்குக் கீழ்க்கண்ட செயல்முறைகளை மேற்கொள்ளவும்.

1. முதலில் Contacts அல்லது People (உங்கள் போனுக்கேற்றபடி) என்பதைத் திறக்கவும்.
2. மெனு பட்டனைத் தட்டவும். பின்னர், Contacts மீது டேப் செய்து, அதன் பட்டியலைப் பெறவும்.
3. இதில் எந்த தொடர்புகள் எல்லாம் நீக்கப்பட வேண்டுமோ, அவற்றை நீக்கிவிடவும்.
4. பேஸ்புக் மெசஞ்சர் போன்றவற்றில், தொடர்புகளை போனில் இணைக்கும் செயல்பாட்டினை நீக்குவதற்கான வழிகளை, அந்த அப்ளிகேஷனிலேயே தந்திருப்பார்கள். இவற்றை கூகுள் தரும் அனைத்து அப்ளிகேஷன்களிலும், கூகுள் மெயில், கூகுள் நவ் போன்றவை, இணைக்கும் வழியினை முடக்கி வைக்கவும்.
மாறா நிலையில் கூகுள் டூல்ஸ்: ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், ஒவ்வொரு அப்ளிகேஷன் அல்லது டாஸ்க் சாதனத்திற்கு, பல அப்ளிகேஷன்கள் இணைந்து செயலாற்றத் தயாராய் இருப்பதனைக் காணலாம். இதற்கு, கூகுள் தரும் மாறா நிலையில் உள்ள அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்தத் தயாராய் இருக்க வேண்டும். ஏனென்றால், இவ்வாறு கூகுள் அப்ளிகேஷன்களுக் கிடையே இணைப்பு ஏற்படுகையில் மட்டுமே, ஆண்ட்ராய்ட் இயக்கம் முழுமையிலும், அதிக பட்ச பயன் கிடைக்கும்.
எடுத்துக் காட்டாக, Ever note டூலுக்குப் பதிலாக, கூகுள் கீப் (Google Keep) டூலைப் பயன்படுத்துவது, உங்களுக்கு 'ஜிமெயில்' மற்றும் 'கூகுள் நவ்' அப்ளிகேஷன்களின் பயன்பாட்டையும் எடுத்துத் தரும்.
எடுத்துக் காட்டாக, Ever note டூலுக்குப் பதிலாக, கூகுள் கீப் (Google Keep) டூலைப் பயன்படுத்துவது, உங்களுக்கு 'ஜிமெயில்' மற்றும் 'கூகுள் நவ்' அப்ளிகேஷன்களின் பயன்பாட்டையும் எடுத்துத் தரும்.
கூகுள் தொடர்ந்து தன் Google Now டூலின் வசதிகளை மேம்படுத்தி வருவதால், கூகுள் தேடல் உட்பட அனைத்து அப்ளிகேஷன்களுடனும், மொபைல் போனுக்கு தொடர்பு ஏற்பட்டு, பயன்பாடுகள் அதிகமாகும்.
கூகுள் நவ் அப்ளிகேஷனை உங்கள் வயப்படுத்துக: கூகுள் தரும் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில், கூகுள் நவ், ஒரு சக்திவாய்ந்த டூலாகப் பயன்படுகிறது. நீங்கள் செல்லும் இடங்கள் குறித்த தகவல்களைத் திரட்டித் தருகிறது; நீங்கள் விரும்பிப் பார்க்கும் விளையாட்டுகளின் ஸ்கோர்கள், ஆர்வப்படும் பங்கு விலைகள் ஆகியவற்றைத் தரும். மின் அஞ்சல் அனுப்ப, மெசேஜ் அனுப்ப, தேடல் மேற்கொள்ள, கைகளைப் பயன்படுத்தாமல் இயங்க உதவி செய்திடும்.
இங்கு என்ன முக்கியம் என்றால், நீங்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், அதனை உங்கள் மொபைல் போனின் அன்றாட இயக்கங்களில் ஒன்றாக ஆக்குவதற்கு விருப்பப்படுவீர்கள். ஏனென்றால், அப்போதுதான் அதன் முழுமையான பயன்களை, குறைவில்லாமல் உங்களால் அனுபவிக்க முடியும். எந்த அளவிற்கு இதன் மூலம் தேடலை மேற்கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் தேடல்கள் நினைவில் வைத்துக் கொள்ளப்பட்டு, போனில் உங்களுக்கான தகவல்கள் வந்து கொண்டே இருக்கும்.
தேவைகளுக்கேற்ற ஹோம் ஸ்கிரீன் இயக்கம்: ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் கிடைக்கும் ஒவ்வொரு ஹோம் ஸ்கிரீன் இயக்கமும், ஒரே மாதிரியாக, இணையாக உருவாக்கப்படவில்லை. சில கண்களுக்கு விருந்தளிப்பதாக இருக்கும். சில திறமையாக நாம் பயன்படுத்தும் வகையில் இருக்கும். இதனால், பலர், தங்கள் மொபைல் போன் திரையில் கிடைக்கும் முழு இடத்தையும் இதன் பயன்களை அனுபவிக்கும் வகையில் இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.
சிலரோ, அவர்கள் செயல்படுகையில், கண்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் காட்சி இருக்க வேண்டும் என விரும்புவார்கள். இவர்கள், தாங்கள் விரும்பும் வகையில், ஹோம் ஸ்கிரீன் லாஞ்சர் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்வது நல்லது. இதனால், அவர்கள் பெறும் பயன்கள் அதிகமாகும். எடுத்துக் காட்டாக, எனக்கு நோவா லாஞ்சர் ப்ரைம் (Nova Launcher Prime கிடைக்கும் தள முகவரி: கிளிக்) தேர்ந்தெடுத்து அமைத்துள்ளேன்.
ஏனென்றால், இது நம் விரல் அசைவுகளுக்கேற்ப செயல்படும் வசதி கொண்டது. சற்றுக் கூடுதலான அசைவுகள் மூலம், என் இன்பாக்ஸை நான் இரு விரல் செயல் மூலம் திறக்க முடியும். அதே போல, மின் அஞ்சல் அப்ளிகேஷனை இயக்க முடியும்.

அது மட்டுமின்றி, அப்ளிகேஷன் ட்ராயரில் உள்ள மற்ற அப்ளிகேஷன்களை மறைத்து வைத்து, பயன் தருபவற்றை மட்டும் இயக்கும் வகையில் அமைக்க முடியும்.
பல்வேறு ஸ்கிரீன் லாஞ்சர்கள் இணையத்தில், கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன. இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, இயக்கிப் பார்த்து, உங்களுப் பிரியமானதைத் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளலாம்.
மொபைல் போனில் காப்பி அண்ட் பேஸ்ட்: கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நாம் அதிகம் பயன்படுத்துவது காப்பி அண்ட் பேஸ்ட் டூல் தான். ஆனால், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் இதனைப் பயன்படுத்துவது போல, மொபைல் போனில் எளிதாகப் பயன்படுத்த முடியாது. ஆனால், பயன்கள் அதிகமாகவே போனிலும் இருக்கும்.
எனவே, இந்த டூலை மொபைல் போனில் அடிக்கடி பயன்படுத்திப் பார்த்து பழகிக் கொள்ள வேண்டும். இதற்கென சற்று நேரம் ஒதுக்கிக் கற்றுக் கொள்வதும் நல்லதே. அல்லது கிளிப்பர் (Clipper) போன்ற தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் இதற்குப் பயன்படுத்தலாம். இந்த புரோகிராம், கிளிப் போர்ட் மேனேஜர் போலச் செயல்படுகிறது. இந்த டூல் பயன்படுத்தத் தெரிந்து கொண்டு, தொடர்ந்து பயன்படுத்தினால், நிறைய நேரம் மிச்சமாகும்.
குறிப்பாக, ஒன்றுக்கு மேற்பட்டவற்றை காப்பி அண்ட் பேஸ்ட் செய்திடுகையில், நம் உழைப்பும் நேரமும் நல்ல விதத்தில் மிச்சப்படும். மேலே சொல்லப்பட்டவை மட்டுமின்றி, ஆண்ட்ராய்ட் போனைப் பயன்படுத்துகையில், நீங்களும் சில வழிகளை அவசியமாக மேற்கொள்ள வேண்டும் என உணர்வீர்கள். அவற்றை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Comments