புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் பெயர் 'மார்ஷ்மல்லோ'..

ஆன்ட்ராய்டு புதிய பதிப்பின் பெயர் 'மார்ஷ்மல்லோ' (Marsh Mallow) கூகுள் நிறுவனம் அறிவிப்பு.


விரைவில் வெளியாகவுள்ள ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய பதிப்பிற்கு மார்ஷ்மல்லோ என பெயரிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் கூகுளின் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இதுவரை ஐஸ்கிரீம் சான்ட்விச் (4.0), ஜெல்லி பீன் (4.1), கிட்காட் (4.4), லாலிபப் (5.0) ஆகிய பதிப்புகள் அதிக வரவேற்பை பெற்றிருந்தன.

இந்நிலையில், அடுத்ததாக பல புதிய நவீன வசதிகளுடன் வெளிவரும் புதிய பதிப்பிற்கு மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது கூகுள். 

இந்த புதிய வெர்ஷனில் கைரேகையை பதிவு செய்யும் சென்சார்கள், அப்டேட் செய்யப்பட்ட பவர் சேவிங் மோடு, ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்யவும், அப்கிரேடு செய்யவும், பெர்மிஷன்களை ஸ்டிரீம்லைனில் காட்டும் புதிய வசதியும் உண்டு. 

சில ஆப்ஸ்களை இன்ட்ஸ்டால் செய்யும் போது பர்மிஷன்களை வாங்க வேண்டியிருக்கும். புதிய பதிப்பில் முதலில் இன்ஸ்டால் செய்துவிட்டு தேவைப்படும்போது பர்மிஷன்களுக்கு ரெக்வெஸ்ட் கொடுக்கலாம். 

உலகம் முழுவதும் 80 சதவீத ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு இயங்குதளம் உள்ளது. பல கருவிகளில் பழைய வெர்ஷன்கள் இருந்தாலும், அப்கிரேட் செய்ய முடியாத நிலை இருந்தாலும் இன்றளவும் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது ஆன்ட்ராய்டு மட்டுமே..!!

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

ஓவியம் வரையப் பயன்படும் இலவச மென்பொருள்

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க