எக்ஸெல்லில் ஹெடர் புட்டர் எழுத்துக்கள்..



ஷார்ட்கட் வழிகள்:

Ctrl + 1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் 
வடிவமைப்பை மாற்றலாம் 

F2: செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும். 

Ctrl + Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம்.

Ctrl + Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம். 

Ctrl + Shift + ”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும். 

Ctrl + ': இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லில் தரப்பட்டுள்ள பார்முலாவைக் காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும். 

Ctrl + R: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து வலது பக்கம் உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும். 

Ctrl + D: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து கீழே உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும். 

Ctrl + ': செல்லின் மதிப்பு மற்றும் அதன் பார்முலாக்களை மாற்றி மாற்றி காட்ட இந்த சுருக்கு வழியைப் பயன்படுத்தலாம். 

Ctrl + $: கரன்சி மதிப்பை இரண்டு தசம ஸ்தானங்களுக்கு தரும் வகையில் பார்மட் செய்திட இந்த சுருக்கு வழி பயன்படுகிறது.

காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL + [ அழுத்தவும். 

Ctrl + ] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.

ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும். 

கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக் ஷன் நீட்டிக்கப்படும். 

ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக் ஷன் நீட்டிக்கப்படும். 

கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக் ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும். 

கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக் ஷன் ஒர்க் ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும். 

என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.

ஹெடர் - புட்டர் எழுத்துக்கள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் அமைக்கப்படும் ஹெடர் மற்றும் புட்டர்களில் உள்ள டெக்ஸ்ட்டை நம் இஷ்டப்பட்ட அளவில், சாய்வாக அல்லது குறுக்குக் கோடு, கீழ்க்கோடு சேர்த்து அமைக்கும் வசதி உண்டு. இது மட்டுமின்றி ஹெடர் புட்டர்களில் அமைக்கப்படும் பல விஷயங்களை நம் விருப்பப்படி மாற்றி வடிவமைக்கும் வசதியும் எக்ஸெல் தொகுப்பில் தரப்பட்டுள்ளது. 

முதலில் டெக்ஸ்ட் என்டர் செய்திடவும். பின்னர் இந்த டயலாக் பாக்ஸில் உள்ள A என்னும் டூலில் கிளிக் செய்திடவும். உடன் கிடைக்கும் விண்டோவில் தேவையான எழுத்துவகையில் டெக்ஸ்ட்டை மாற்றலாம். குறுக்குக் கோடிடலாம், சப்ஸ்கிரிப்ட், சூப்பர் ஸ்கிரிப்ட் அமைக்கலாம். உங்களுடைய எக்ஸெல் எம்.எஸ். ஆபீஸ் 2007 வகையைச் சேர்ந்தது என்றால், வண்ணத்தையும் மாற்றலாம். 

எக்ஸெல் 97க்கு முன்பு வந்த தொகுதிகளில் இந்த கலர் மாற்றும் வசதி இருந்தது. பின் எக்ஸெல் 2007ல் தான் இது மீண்டும் தரப்பட்டது. மற்ற தொகுப்பில் உள்ள ஹெடர்களில் வண்ண எழுத்துக்கள் வேண்டுமாயின், வண்ணத்தில் எழுத்துக்கள் உள்ள கிராபிக்ஸ் அமைத்து அப்படியே பேஸ்ட் செய்திட வேண்டியதுதான். இந்த வழியை நிறுவனங்களின் இலச்சினைகள், மற்ற கிராபிக் ஆப்ஜெக்ட்களை அமைப்பவர்கள் மேற்கொள்கிறார்கள்.
நன்றி

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க