ஸ்மார்ட் போன் ஏற்படுத்தும் பாதிப்புகள்..
நீங்கள் புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் எப்போதும் ஸ்மார்ட் போனும் கையுமாக இருந்தால் உங்கள் புத்திசாலித்தனம் மங்கும் அபாயம் இருக்கிறது.
ஸ்மார்ட் போன் தாக்கம் தொடர்பாக, கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு இப்படி எச்சரிக்கிறது.
உள்ளுணர்வின்படி முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர்கள் ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் சோம்பல் மிக்கவர்களாக மாறிவிடுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
தாங்கள் அறிந்திருக்கும் தகவல்கள் அல்லது எளிதாகக் கற்றுக்கொள்ள கூடிய விஷயங்களைக்கூட ஸ்மார்ட் போன் மூலம் தேடிப்பார்க்கும் பழக்கம்தான் இதற்குக் காரணம் என்கிறார் இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் கார்டன் பென்னிகுக்.
அதிகப்படியான ஸ்மார்ட் போன் பயன்பாடு, புத்திசாலித்தனம் குறைவது ஆகிய இரண்டுக்கும் தொடர்பு இருப்பதையும் ஆய்வு உணர்த்தியுள்ளது.
நம்முடைய அறிவாற்றலைப் பயன்படுத்த மறுப்பதால் வயோதிக காலத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
நீங்களும்கூட உங்கள் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை மனதில் நிறுத்தி இது தொடர்பாக சுய ஆய்வு மேற்கொண்டு பார்க்கலாம்..!
நன்றி
Comments