எம்.எஸ் பவர்பாயின்ட்டில் ஃபேஸ்புக்கும், ட்விட்டரும்..!

பவர்பாயின்ட்டில் நாம் தயாரிக்கும் பிரசன்டேஷன்களை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்துகொள்ளும் வசதியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதையும் பவர்பாயின்ட்டில் இருந்தே நேரடியாக செய்யமுடியும் என்பதுதான் ஹைலைட்.

ஃபேஸ்புக்கில் பகிர…
  • பவர்பாயின்ட் ஸ்லைடில் தேவையான பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து புகைப்படமாக பகிர்ந்து கொள்ளலாம்.
  • பவர்பாயின்ட் பிரசன்டேஷனில் உள்ள எல்லா ஸ்லைடுகளையும் புகைப்பட ஆல்பம்போல பகிர்ந்துகொள்ளலாம்.
  • பவர்பாயின்ட் ஸ்லைடுகளை வீடியோவாக பகிர்ந்துகொள்ளலாம்.
ட்விட்டரில் பகிர…

பவர்பாயின்ட் ஸ்லைடுகளில் தேவையான பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து புகைப்படமாக பகிர்ந்து கொள்ளலாம்.



இதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ‘சோஷியல் ஷேர்’ (Social Share) என்கின்ற ‘பிளக் இன்’ (Plug in) வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பிளக் இன்னை டவுன்லோட் செய்துகொண்டு இன்ஸ்டால் செய்தால் அது ஏற்கெனவே நாம் இன்ஸ்டால் செய்துள்ள பவர்பாயின்ட் சாஃப்ட்வேரில் ஒரு ‘டேபாக’ (மெனுவாக) உருவாகி இணைந்துவிடும்.

‘சோஷியர் ஷேர்’ - டவுன்லோட் செய்யும் முறை


1. மைக்ரோசாஃப்ட்டின் வெப்சைட்டில் இருந்து ‘சோஷியல் ஷேர்’ என்ற பிளக் இன்னை டவுன்லோட் செய்துகொள்ள https://officesocialshare.azurewebsites.net/# என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
2. இப்போது ‘Share from Powerpoint to Facebook and Twitter’ என்ற தலைப்பில் வெப் பக்கம் வெளிப்படும். இதில் Get Social Share என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.


3. உடனடியாக Download Social Share என்ற தலைப்பில் விண்டோ ஒன்று கிடைக்கும். அதில் Accept and Download என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

4. இப்போது Setup.exe என்ற ஃபைல் டவுன்லோட் ஆகி டெஸ்க்டாப்பில் பதிவாகிவிடும்.

‘சோஷியர் ஷேர்’ - இன்ஸ்டால் செய்யும் முறை


5. Setup.exe என்ற ஃபைலை கிளிக் செய்து சோஷியல் ஷேர் பிளக் இன்னை இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும். நாம் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்துள்ள மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் சரியாக இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என பரிசோதனை செய்து அதன் பிறகு இன்ஸ்டால் ஆகும்.

இன்ஸ்டால் ஆன பிறகு பவர்பாயின்ட் இயங்கி முகப்புத்திரை வெளிப்படும். இதின் ரிப்பன் பகுதியில் கடைசியாக Social Share என்ற மெனு உருவாகி இருப்பதை கவனிக்கவும்.

‘சோஷியல் ஷேர்’ – பயன்படுத்தும் முறை
முதலில் விருப்பம்போல பவர்பாயின்ட் பிரசன்டேஷனை வடிவமைத்துக்கொள்ளலாம். பிறகு, ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல பவர்பாயின்ட் ஸ்லைடில் தேவையான பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து புகைப்படமாக பகிரலாம், எல்லா ஸ்லைடுகளையும் புகைப்பட ஆல்பமாக்கிப் பகிரலாம், பிரசன்டேஷனை வீடியோவாகவும் பகிர்ந்துகொள்ளலாம்.

ஏற்கெனவே ஃபேஸ்புக் அக்கவுன்ட்டில் நாம் சைன் இன் செய்திருந்தால் நாம் பகிர்வது ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்படும் அல்லது ஃபேஸ்புக்கின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்துகொள்ளும் திரை வெளிப்படும்.


இதற்கு பவர்பாயின்ட் ரிப்பன் பகுதியில் Social Share என்ற டேபை(மெனுவை) கிளிக் செய்துகொள்ள வேண்டும். இப்போது Facebook POST, Twitter Tweet, View என்ற கட்டளைத் தொகுப்புகள் வெளிப்படும். இதில் POST என்ற கட்டளைத் தொகுப்பை கிளிக் செய்தால் கீழ்க்காணுமாறு மூன்று விவரங்கள் வெளிப்படும்.

  • Share Screen Clip as Photo – தேவையான பகுதியை மட்டும் புகைப்படமாக பகிர உதவுகிறது.
  • Share Slides as Photo Album – பிரசன்டேஷனை ஆல்பமாக்கிப் பகிர உதவுகிறது.
  • Share Slides as Video – பிரசன்டேஷனை வீடியோவாக்கிப் பகிர உதவுகிறது.

பவர்பாயின்ட் ஸ்லைடில் தேவையான பகுதியை மட்டும் புகைப்படமாக்கி பகிரும் முறை


1. ஃபேஸ்புக்கில் பகிர தேவையான ஸ்லைடுக்குச் செல்ல வேண்டும். அடுத்து, Social Share > Facebook POST > Share Screen Clip as Photo என்ற மெனுவிவரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு மவுசால் ஸ்லைடில் தேவையான பகுதியை வரைந்துகொள்ள வேண்டும். பிறகு DONE என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.


(2 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

2. உடனடியாக Post On Facebook என்ற தலைப்பில் விண்டோ கிடைக்கும்

  • இதில் ஸ்லைடில் நாம் தேர்ந்தெடுத்த பகுதி புகைப்படமாக இணைந்திருக்கும்.‘Say Something about this photo’ என்ற பகுதியில் தேவைப்பட்டால் இந்த புகைப்படத்தைக் குறித்து தகவலை டைப் செய்துகொள்ளலாம்.
  • இந்த புகைப்படத்தை யார் யாருடன் ஷேர் செய்யலாம் என்பதை Public, Friends, Friends of Friends, Only me என்ற பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
  • இறுதியில் POST என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

3. உடனடியாக Post on Facebook என்ற தலைப்பில் திரை வெளிப்படும். இதில் Success என்ற விவரத்தின்கீழ் வெளிப்பட்டுள்ள Done என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.


4. உடனடியாக, பவர்பாயின்ட்டில் திரையின் வலப்புறம் Social Activity என்ற தலைப்பின் கீழ் நம் பார்வைக்கு பகிரப்படுவதைக் காணலாம்.

5. மேலும், ஸ்லைட் புகைப்படமாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளப்படும்.

பவர்பாயின்ட் ஸ்லைடுகளை புகைப்பட ஆல்பமாக்கி பகிரும் முறை


1. பவர்பாயின்ட் ஸ்லைடுகளை புகைப்பட ஆல்பமாக ஃபேஸ்புக்கில் பகிர, Social Share > Facebook POST > Share Slides as Photo Album என்ற மெனுவிவரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். உடனடியாக Post On Facebook என்ற தலைப்பில் விண்டோ கிடைக்கும்

  • இதில் பவர்பாயிண்ட்டில் உள்ள ஸ்லைடுகள் அனைத்தும் புகைப்படங்களாக இணைக்கப்படும்.
  • இந்த இடத்தில் புகைப்படத் தொகுப்பிற்கான தலைப்பை டைப் செய்துகொள்ளலாம்.
  • இந்த இடத்தில் புகைப்பட ஆல்பத்தைப் பற்றி சிறு குறிப்பை டைப் செய்துகொள்ளலாம்.
  • புகைப்படத்தை யார் யாருடன் ஷேர் செய்யலாம் என்பதை Public, Friends, Friends of Friends, Only me என்ற பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
  • இறுதியில் POST என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.


2. உடனடியாக, புகைப்பட ஆல்பம் பவர்பாயின்ட்டில் திரையின் வலப்புறம் Social Activity என்ற தலைப்பின் கீழ் நம் பார்வைக்கு பகிரப்படுவதைக் காணலாம்.

3. மேலும், பவர்பாயின்ட் பிரசண்டேஷன் ஆல்பம் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளப்படும்.

பவர்பாயின்ட் ஸ்லைடுகளை வீடியோவாக பகிரும் முறை


  • பவர்பாயின்ட் ஸ்லைடுகளை வீடியோவாக ஃபேஸ்புக்கில் பகிர, Social Share > Facebook POST > Share Slides as Video என்ற மெனுவிவரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். உடனடியாக Post On Facebook என்ற தலைப்பில் விண்டோ கிடைக்கும்.
  • இதில் பவர்பாயின்ட்டில் உள்ள ஸ்லைடுகள் வீடியோவாக மாற்றப்படும். ஸ்லைடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீடியோவாக மாற்ற எடுத்துக்கொள்ளப்படும் நேரம் வேறுபடும்.
  • இந்த இடத்தில் வீடியோவிற்கான தலைப்பை டைப் செய்துகொள்ளலாம்.
  • புகைப்படத்தை யார் யாருடன் ஷேர் செய்யலாம் என்பதை Public, Friends, Friends of Friends, Only me என்ற பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
  • இறுதியில் POST என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • உடனடியாக, வீடியோ பவர்பாயின்ட்டில் திரையின் வலப்புறம் Social Activity என்ற தலைப்பின் கீழ் நம் பார்வைக்கு பகிரப்படும். மேலும், ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்துகொள்ளப்படும்.
குறிப்பு:
இன்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே ‘சோஷியல் ஷேர்’ என்ற பிளக் இன் வசதி மூலம் பவர்பாயின்ட் ஸ்லைடுகளை பவர்பாயின்ட்டில் இருந்தே ஃபேஸ்புக், டிவிட்டரில் ஷேர் செய்துகொள்ள முடியும். அதுபோல ஃபேஸ்புக், டிவிட்டரில் நம் ஸ்லைடுகளுக்கு வருகின்ற லைக் மற்றும் கமென்ட்டுகளையும் பவர்பாயின்ட்டிலேயே பார்வையிட முடியும்.

Disclaimer:
இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
நன்றி
-காம்கேர் கே. புவனேஸ்வரி

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க