உங்கள் வங்கிக் கணக்கை கொள்ளையடிக்கு வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!

Bank money predatory new virus-warning
வணக்கம் நண்பர்களே..!
கடந்த காலங்களில் பல்வேறுப்பட்ட வைரஸ்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கணினியில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி,கணினியில் உள்ள  தகவல்களை தானாகவே சேகரித்து, வைரஸ் அனுப்பியவரின் கணினிக்கு தகவல்களைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும். அதனால் அவற்றைத் தவிர்க்க, அழிக்க ஒரு சில ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களையும் பயன்படுத்தியிருப்பீர்கள் அல்லது பயன்டுத்திக் கொண்டிருப்பீர்கள்.   
Bank money predatory new virus warning

புதிய வைரஸ் எச்சரிக்கை: 

அந்த வகையில் தற்பொழுது புதிய வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விரைவாக பரவி, தகவல்களைத் திருடிய win32/Ramnit என்ற பயங்கரமான வைரசின் வாரிசாக உள்ளது என இந்திய இணையவெளியில் நடக்கும் திருட்டுக்களை கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response Teamindia -CERTIn) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

என்ன செய்யும் இந்த வைரஸ்? 

இந்த வைரசானது தான் நுழைந்த கணினியில் உள்ள EXE, DLL அல்லது html ஆகிய கோப்புகளைக் கண்டறிந்து அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைத்து, இணைய செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கி கணக்குகளுக்கான User Name மற்றும் Password ஆகியவற்றைத் திருடுகிறது.
கம்ப்யூட்டரில் இணைத்துப் பயன்படுத்தும் Flash Drive போன்ற சாதனங்களிலும் இது எளிதாக பரவிவிடுவதாக தகவல்கள்தெறிவிக்கிறது.
உங்கள் கணினியில் உள்ள வலைஉலவி அமைப்புகளை (Browser Settings) , டவுன்லோட் செட்டிங்ஸ் (Download settings) ஆகியவற்றை தானாகவே மாற்றி அமைத்துவிடுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த வைரசானது உங்கள் கணினியில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து தன்னை முழுமையாக மறைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், நீங்கள் எந்த ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராம் (Anti virus Programe) பயன்படுத்தினாலும் உங்கள் கணினியில் எளிதாக வந்திறங்கி பாதித்துவிடும்.
கணினியில் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவைகளை (Email - service) தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மின்னஞ்சலை தன் வசமாக்கிவிடுகிறது.
கணினியில் பொருத்தி பயன்படுத்தும் அனைத்து வகையான சாதனைகளிலும்  (External Device) உள்ள கோப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.
கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள சர்வர்கள் (Computer servers), இணையம் மூலம் தொடர்பு கொள்ளும் அனைத்து கம்ப்யூட்டர்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வந்துவிடும். இதனால் கணினி மற்றும் நெட்வொர்க் சர்வர்களின் பாதுகாப்பும் (network server protection) கேள்விகுறியாகிவிடுகிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்: 

(Security activities)
இந்த வைரசிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்க சி.இ.ஆர்.டி.இன் குழு பரிந்துரைக்கும் எச்சரிக்கை நடவடிக்கைகள்:
முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் (spam mails) மற்றும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்திட வேண்டாம். அதுபோன்ற மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதே நல்லது.
நமக்குத் தெரிந்த நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் இணைப்புகளை கூட கிளிக் செய்வதற்கு முன்பு, அவர்களிடம் கேட்டுப் பிறகே அவற்றை பயன்படுத்த வேண்டும். காரணம் அவர்களுடைய மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டு, அதன் மூலம் கூட உங்களுக்கு மின்னஞ்சல் வந்திருக்கும்.
கம்ப்யூட்டர்களில் உள்ள ஃபயர்வால் செட்டிங்ஸை ஆனில் (Firewall settings) வைத்திருக்க வேண்டும். அதே போல அதிகம் பயன்படுத்தாத, தேவையில்லாத Port களை Disable செய்து வைத்திருப்பது நல்லது.
குறிப்பாக இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக கிராக் மென்பொருள்களை (Cracked software) தரவிறக்கம் செய்து பயன்படுத்த கூடாது. இதுபோன்ற தரவிறக்க இணைப்புகளிலிருந்து விருந்தாளியாக ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ்கள் (Virus) கூட உங்கள் கணினியில் வந்தமர்ந்து கொள்ளும். இதனால் கணனி மட்டுமல்ல.. உங்களுடைய மிகப் பாதுகாப்பான தகவல்களான வங்கித் தொடர்புடைய தகவல்களும் கூட திருடப்படும் வாய்ப்பு அதிகம். இதனால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வைரஸ் அனுப்பியவர் எடுத்துக்கொள்ள, பயன்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
Operating System, மற்றும் Anti Virus software களை அவ்வப்பொழுது அப்டேட் செய்வது மிகச்சிறந்த பாதுகாப்பை அளிக்கும். கணினியில் ஆட்டோமேட்டிக் அப்டேட்டினை செயல்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
Win32/Ramnit is a family of multi-component malware that spreads to removable drives, steals sensitive information such as saved banking and FTP credentials and browser cookies. The malware may also open a backdoor to await instructions from a remote attacker.

Win32/Ramnit may make lasting changes to your computer that make it difficult for you to download, install, run, or update your virus protection. For specific recovery information, please see the Additional recovery instructions below.

To detect and remove this threat and other malicious software that may be installed on your computer, run a full-system scan with an appropriate, up-to-date, security solution.

இந்த
source: dinamalar & microsoft 

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க