2ஜி, 3ஜி பழசு…5ஜி இது ரொம்ப புதுசு…




நீங்கள் விரும்பும் ஒரு திரைப்படத்தை ஒரே நொடியில் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்ய முடிந்தால் எப்படி இருக்கும். இது மாதிரியான நவீன சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு எப்படி வழங்குவது என்பதைத் தான் 5ஜி சேவையை பயன்படுத்தி 2 கி.மீ., தூரத்திற்குள் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது சாம்சங் மொபைல் நிறுவனம்.


தென்கொரியாவின் தொலைதொடர்பு உபகரண ஜாம்பவனான சாம்சங் நிறுவனம், 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போனை சோதனை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஒரு வினாடிக்கு ஒரு கிகாபைட் அளவிலான தகவல்களை பறிமாறிக்கொள்ளும் திறன் 5ஜி சேவையின் சிறப்பம்சம் என தெரிவித்துள்ளது.

2020ம் ஆண்டில் தான் இந்த சேவை சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் 4ஜி சேவையை ஒப்பிடும் போது தகவல் பறிமாற்றத்தில் பல நூறு மடங்கு வேகம் படைத்தது 5ஜி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சேவையைக் கொண்டு 3டி திரைப்படங்கள், 3டி விளையாட்டுகள், அதி நவீன எச்.டி., (UHD) தரத்துடன் கூடிய ஸ்டரீமிங் ஆகியவற்றை உபயோகிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.



ஹலோ கேட்குதா..தெளிவா கேட்குதா என்று நம் தாத்தா தொலைபேசியில் பேசிய காலம் மாறிப்போய், தற்போது இளைஞர்கள் நிமிடத்துக்கு நிமிடம் தங்களைப் பற்றி சமூக வலை தளங்களில் ஸ்டேட்டஸ் போடும் காலத்தில் இருக்கிறோம். இதுவும் கடந்து போகும் காலம் விரைவில் வருகிறது 5வது தலைமுறை தொலைதொடர்பு சேவை வாயிலாக.

உலகிலேயே தென்கொரியாவில் தான் 4ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருக்கின்றனராம். சுமார் 20 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

அட்டகாசமான பத்து தமிழ் வலைத்தளங்கள்