பேஸ்மேக்கர் - இதயம் - ஹெட்போன் - எச்சரிக்கை செய்தி...!!
பேஸ்மேக்கர் என்பது இதய துடிப்பை சீராக வைக்கும் கருவி.
ஹெட்போன்:(headphone)
பாடல்கள் கேட்கவும், செல்போனிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுப் பேசவும் பயன்படும் கருவி.
சரி.. இரண்டிற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?
இதயபலகீனம் உள்ளவர், தங்களின் இதய துடிப்பை சீரமைக்க பொருத்திக்கொள்வதுதான்
பேஸ்மேக்கர். பேஸ்மேக்கர் இரண்டு வகைகளில் பொருத்தியிருப்பார்கள்.
- ஒன்று உடம்பிற்கு உள்ளே வைத்து பயன்படுத்துவது.
- மற்றொன்று வெளியிலிருந்து இதயத்திற்கு இணைப்பு கொடுத்து பயன்படுத்துவது.
இவ்வாறு பேஸ்மேக்கர் (pacemaker) சாதனத்தைப் பயன்படுத்துபவர்கள் ஹெட்போனை
பயன்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்கள்
அறிவித்துள்ளனர்.
ஆம். ஹெட்போனில் பயன்படுத்தப்படுவது டைமியம் என்ற ஒரு வகை காந்தம். டைமியம்
பொருத்தப்பட்ட Head Phone-ஐ பேஸ்மேக்கர் கருவி அருகே மூன்று சென்டிமீட்டர்
இடைவெளிக்குள் கொண்டு செல்லும்போது பேஸ்மேக்கர் கருவி, தானாகவே இயங்கி,
இதயத்திற்கு தேவையில்லாத நேரத்திலும் சிக்னல்களை அனுப்பி குழப்பமடையச்
செய்கிறது. இதனால் இதய பலஹீனம் உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாக
நேரிடுகிறது.
பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட இதய நோயாளிகள் (cardiac pacemaker fitted
Patients) கண்டிப்பாக ஹெட்போன், ஐபோன் போன்ற எலக்ட்ரானிக் வகையறாக்களை
அதிகம் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.
நன்றி.
Comments