பாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்கள் - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை


   உலகெங்கும் இயங்கும் கம்ப்யூட்டர்களில், நான்கில் ஒன்று பாதுகாப்பற்ற நிலையில் இயங்குவதாகவும், இவற்றில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குவது மிக எளிதான ஒன்றாகும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மைக்ரோசாப்ட் நிறுவனம், கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பு குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்திட, செக்யூரிட்டி இன்டலிஜென்ஸ் அமைப்பு ஒன்றை இயக்கி வருகிறது. இதன் சமீபத்திய அறிக்கை இந்த அதிர்ச்சி தரும் தகவல்களைத் தந்துள்ளது. 
பன்னாடெங்கும் உள்ள கம்ப்யூட்டர்களில், 24 சதவீத கம்ப்யூட்டர்கள், அப்டேட் செய்யப்படாத ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களைக் கொண்டு, ஆபத்தான சூழ்நிலையில் இயங்கி வருகின்றன. 
இவை மற்றவற்றைக் காட்டிலும் 5.5 மடங்கு அதிக ஆபத்துக்களை வரவேற்கும் தன்மையுடையன.
இந்தியாவில் இயங்கும் கம்ப்யூட்டர்களில், 30 சதவீதம் பாதுகாப்பற்ற தன்மையைக் கொண்டுள்ளன. எகிப்தில் 40%, அமெரிக்காவில் 26%, கனடாவில் 23%, பிரிட்டனில் 21% மற்றும் ரஷ்யாவில் 29 சதவீதம் என இந்த அறிக்கை, பாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையைக் காட்டியுள்ளது.
சில போலியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் குறித்தும் மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது. கம்ப்யூட்டர்களை முழுமையாக இலவசமாக ஸ்கேன் செய்து தருவதாக, விளம்பரம் செய்திடும் இவை, ஸ்கேன் செய்த பின்னர், அதிக வைரஸ் இருப்பதாகவும், தொடர்ந்து பாதுகாப்பு தர பணம் செலுத்த வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றன. 
பணம் செலுத்த மறுத்தால், நம் கம்ப்யூட்டர்களின் இயக்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்று, நம்மைப் பயமுறுத்துகின்றன. இந்த வகையில் சென்ற ஆண்டு, என்னும் போலியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்று, 30 லட்சம் கம்ப்யூட்டர்களில் புகுந்து ஆட்டிப் படைத்தது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பணம் செலுத்தி வாங்க இயலாதவர்களுக்கு, Microsoft Security Essentials என்னும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை இலவசமாக வழங்கி வருவதனையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க