Posts

Showing posts from May, 2013

தேவையில்லாத மற்றும் ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி?

Image
  நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி Google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் . முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, Password கொடுத்து Login செய்யுங்கள். பிறகு Settings தேர்வு செய்து Search Settings Click செய்யுங்கள். அல்லது இந்த லிங்க் ஐ ஓபன் பண்ணுங்கள்.. Safe Search Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள்,  அடுத்து Safe Search Filtering கீழே உள்ள Lock Safe Search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும், பிறகு Safe Search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள். அவ்வளவுதான் இனி தேவையில்லாத மற்றும் ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது. இதன் பிறகு Google Search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும்.    நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search Setting சென்று Unlock என்று மாற்றிவிடுங்கள்.   Google எவ்...

Web Development Language- களை இலவசமாக படிக்க ஆசையா.?

Image
Web Development குறித்து படிக்க விரும்பும் நண்பர்கள் நிறைய பேருக்கு அது குறித்த அறிவு இருந்த போதும் நேரமின்மை மற்றும் சில காரணங்களினால் வெளியே எங்கும் சென்று படிக்க முடியாத நிலை இருக்கும். ஆனால் இணையத்தில் இருந்தால் எளிதாக அவர்கள் படிக்க முடியும் என்று நினைப்பார்கள். அத்தகைய வசதியை இலவசமாக பெற முடிந்தால்?  ஆம் Web Development மொழிகளை இலவசமாக கற்க உதவும் தளங்களை பற்றி பார்க்கலாம் . Web Development Language என்ன ? இவற்றின் மூலம் தான் எந்த ஒரு தளமும் இயங்குகிறது. ஒரு தளத்தை உருவாக்க, நடத்த, மேம்படுத்த இவை அவசியம் ஆகிறது. 1. W3Schools -  மிக அதிகமான தகவல்களை கொண்டுள்ள இந்த தளம் Web Development க்கு தேவையான அனைத்தையும் இலவசமாகவே சொல்லித் தருகிறது. மிக எளிமையாக கற்று தரும் இந்த தளத்தின் மூலம் Web Development குறித்த அடிப்படை அறிவே இல்லாதவர் கூட விரைவில் அவற்றை கற்றுக் கொள்ளலாம். Certificate வேண்டும் என்பவர்கள் 95$ கட்டி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அந்த குறிப்பிட்ட மொழியில் உங்களுக்கு Knowledge இருக்க வேண்டும். 2. Hscripts - இந்த தளமும் மேலே உள்ளதை போல எளிமைய...

பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் எச்சரிக்கும் மைக்ரோஸாப்ட்

Image
பேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. 'Trojan:JS/Febipos' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தன்னியக்கமாக Like, Comment மற்றும் Share செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. தற்போது பிரேஸில் மொழியில் பிரேசில் நாட்டில் அதிகளவில் வியாபித்துள்ள இந்த வைரஸ் ஐரோப்பா நாடுகளுக்கும் விரைவில் ஆங்கில மொழியிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  Firefox, Chrom போன்ற இணைய உலாவிகளின் Plug-ins என்ற போர்வையிலேயே இந்த வைரஸ் பரவுவதாகவும் குறித்த வைரஸ் தாக்கிய கணனியின் மூலம் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் அதிலிருந்து ஓரளவு தப்பிக்கவும் சில வழிகளைக் கூறியுள்ளது. அதாவது தரவேற்றம் செய்யக் கூறி புதிதாக Firefox, Chrom ஊடாக வரும் Plug-insகளை தவிர்த்தல் மேலும் பேஸ்புக்கினைப் பயன்படுத்திவிட்டு முறைப்படி அதிலிருந்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. இதேவேளை இந்த வைரஸ் விரைவில் பிரேஸில் த...

இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் மென்பொருள்..!

Image
நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையதளங்களில் தேவையில்லாமல் விளம்பரங்கள் குறுக்கீடு செய்யும். ஒரு முக்கியமான செய்தியைப் படித்துக்கொண்டிருக்கும்போது இடையிடையே விளம்பரங்கள் தோன்றி அந்த செய்தியை படிப்பதிலிருந்து மறைக்கும்.  இந்த முறையில் விளம்பரங்கள் வைத்து அதன் மூலம் அதிக வருமானத்தை, அதிக கிளிக்குகள் பெற முடியும் என்ற எண்ணத்தில் அந்த இணையத்தளங்கள் அவ்வாறு விளம்பரங்கள் தோன்ற நிரல்களை எழுதியிருப்பர்.  இதுபோன்ற செயல்களால் தளத்தைப் பார்வையிடுபவர்களுக்கு அதிக சிரமத்தையும், சில நேரங்களில் எரிச்சலடையச் செய்யும். அதே போன்று உலகில் பல்வேறு தரப்பட்ட மனிதர்கள், தங்களுக்கு விருப்பமான வீடியோக்களை யூடியூப்  தளத்தின் மூலம் கண்டு களிக்கின்றனர். விளையாட்டுச் செய்திகள் முதல், அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் வரை எந்த ஒரு நிகழ்வாகட்டும் உடனுக்குடன் யூடியூபில் வீடியோவாக தரவேற்றப்படுகிறது.  ஒரே நாளில் பல லட்சக்கணக்கான வீடியோக்கள் தரவேற்றப்படும் யூடியூப் தளத்தில் இல்லாத வீடியோக்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு பயன்மிக்க வீடியோக்களும் அதில் அடங்கியுள்ளன.  இவ்வா...

ஒன்றுக்கும் மேற்பட்ட ஆப்ரெடிங்க் சிஸ்டம்களை ஒரே யுஎஸ்பி ட்ரைவில் இருந்து நிறுவ

Image
கணினி வல்லுனர் என்றால் கணிப்பொறி பற்றி முழுவதும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். நாளுக்கு நாள் புதுப்புது வளர்ச்சியை கணினிதுறை கண்டு வருகிறது. கணினி கண்டுபிடிக்க பட்ட காலத்திலிருந்து இன்று வரை பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்துவிட்டது. அந்த வகையில் ஒரு கணினி வல்லுனர் என்றால் நிச்சயம் இயங்குதளம் நிறுவ கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டும். இயங்குதளம் நிறுவுதல் என்றால் சாதாரணமாக விண்டோஸ், லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவுதல் மட்டுமே ஆகும். அதிலும் லினக்ஸ் இயங்குதளம் முன்பு நிறுவுதலை காட்டிலும் சற்று எளிதாக வந்துவிட்டது. விண்டோஸ் இயங்குதளம் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. கணினிக்கு புதியவராக இருந்தாலும் ஒரு மென்பொருளை நிறுவுதல் போன்று விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிவிட முடியும். அந்த அளவுக்கு எளிதாக வந்துவிட்டது நான் கூற வந்தது இயங்குதளம் நிறுவுதல் பற்றி அல்ல. ஒரே யுஎஸ்பி ட்ரைவில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை பூட் செய்வது எப்படி என்றுதான்.  இது எப்படி சாத்தியம் என்று பலருக்கும் சந்தேகம் வரும், கண்டிப்பாக முடியும் ஒரே யுஎஸ்பி ட்ரைவில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட ...

இந்தியாவில் அறிமுகமானது Google Nexus 4 போன் – [Specifications and Price]

Image
கூகுள் நிறுவனம் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து வெளியிடும் மொபைல்கள் Nexus என்ற பெயரில் வெளிவருவதுண்டு. iPhone போல இந்த போன்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு உண்டு. இதுவரை Nexus போன்கள் இந்தியாவில் வெளியாகவில்லை. ஆனால் LG நிறுவனம் Nexus 4 ஐ வெளியிடும் போது இது இந்தியாவிலும் வரும் என்று அறிவித்தது. சொன்னபடியே இந்தியாவில் முதல் Nexus போனை  ரூபாய் 25990 க்கு வெளியிட்டு உள்ளார்கள் தற்போது.  Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.2 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது, புது Android Version வரும் போதெல்லாம் Update செய்யும் வசதி கிடைக்கும். தமிழ் படிக்கும் வசதி உள்ளது. 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 1.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். இது 4.7 Inch HD TFT LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்...

வைரஸ்களால் மறைந்து போன கோப்புகளை யுஎஸ்பி மற்றும் ஹார்டிஸ்கிலிருந்து மீட்டெடுக்க ...

Image
கணினிகளுக்கிடைய டேட்டாகளை பரிமாற்றம் செய்ய நாம் யுஎஸ்பி ட்ரைவினை அதிகம் பயன்படுத்துவோம். அவ்வாறு ஒரு கணினியில் இருந்து கோப்புகளை வேறொரு கணினிக்கு மாற்றம் செய்யும் போது யுஎஸ்பி ட்ரைவில் உள்ள போல்டர்கள் யாவும் ஸ்டார்கட் ஆக மாறி இருக்கும். ஆனால் நம்முடைய கோப்புகள் யாவும் அந்த யுஎஸ்பி பெண்ட்ரைவில் இருக்கும். ஆனால் அதனை திறந்தால் ஸ்டார்கட்டாக மட்டுமே இருக்கும். இது வைரஸ் பாதிப்பால் ஏற்படும். இந்த ஸ்டார்கட் கோப்பினை திறந்தால் நம்முடைய கோப்புகள் இருக்கும். ஆனால் அவ்வாறு செய்யும் போது நம்முடைய கணினிக்கும் அந்த ஸ்டார்கட் வைரஸ் வந்துவிடும். இந்த ஸ்டார்ட்கட் வைரஸால் நம் கணினிக்கு எந்த வித பாதிப்பும் வராமலும் , கோப்புகளுக்கு எந்த வித சேதாரம் இல்லாமலும் மீட்டெடுக்க முடியும். இதனை நாம் எந்த வித மென்பொருள் துணையும் இன்றி விண்டோஸ் இயங்குதளத்தின் உதவியுடன் செய்ய முடியும். ஸ்டார்கட் வைரஸ் பாதிக்கப்பட்ட பின் இது போல் ட்ரைவுகள் காட்சியளிக்கும். பாதிக்கப்பட்ட யுஎஸ்பி ட்ரைவினை கணினியில் பொறுத்திவிட்டு, பின் மைகம்ப்யூட்டரை ஒப்பன் செய்து எந்த ட்ரைவ் என குறித்துவைத்துக்கொள்ளவும். பின் கமான்...

பார்கோட் ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா...?

Image
இன்று நாம் கடைகளில் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் பார்கோட்(Barcode) இருப்பதை பார்த்திருப்போம். எதற்காக இந்த பார்கோட், இவற்றுள் இருக்கும் தகவல்கள் என்ன என்பதை பார்போம். நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக சீனா பொருட்களை நாம் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஏனென்றால் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பார்க்க ஆரம்பித்திருக்கிறது. சரி! நாம் எப்படி சீன, தைவான் பொருட்களை தான் நாம் வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது பார்கோடின் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும். மற்ற நாடுகளின் பார்கோடுகளும் கீழே தரப்பட்டுள்ளது,இதை வைத்து நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் 00-13: USA & Canada 20-29: In-Store Functions 30-37: France 40-44: Germany 45: Japan (also 49) 46: Russian Federation 471: Taiwan 474: Estonia 475: Latvia. 477...

ஜிமெயில் சேவை சில நிமிடங்களாக பாதிப்பு

Image
இணையதள தேடுபொறியான கூகுள் நிறுவனத்தின் சேவைகளில் ஒன்றான ஜிமெயில் மின்னஞ்சல் சேவை சிலநிமிடங்களாக தடங்கலானது. gmail.com திறக்கும்போது, கீழ்காணும் பிழை செய்தியை காண்பித்ததால், பிரதான மின்னஞ்சல் பரிவர்த்தனைக்காக ஜிமெயிலை பயன்படுத்துவோர் சிரமப்பட்டனர்.   இதுப்போன்று, கடந்த 2-ந்தேதி மற்றும் 8-ந்தேதி ஜிமெயில் சேவை தடைப்பட்டிருந்தது. மீண்டும் இதே பிரச்னை இன்று நேர்ந்திருப்பதால் இணைய பயனாளர்கள் அதிருப்திக்குள்ளாகினர்.

2ஜி, 3ஜி பழசு…5ஜி இது ரொம்ப புதுசு…

Image
நீங்கள் விரும்பும் ஒரு திரைப்படத்தை ஒரே நொடியில் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்ய முடிந்தால் எப்படி இருக்கும். இது மாதிரியான நவீன சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு எப்படி வழங்குவது என்பதைத் தான் 5ஜி சேவையை பயன்படுத்தி 2 கி.மீ., தூரத்திற்குள் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது சாம்சங் மொபைல் நிறுவனம். தென்கொரியாவின் தொலைதொடர்பு உபகரண ஜாம்பவனான சாம்சங் நிறுவனம், 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போனை சோதனை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஒரு வினாடிக்கு ஒரு கிகாபைட் அளவிலான தகவல்களை பறிமாறிக்கொள்ளும் திறன் 5ஜி சேவையின் சிறப்பம்சம் என தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் தான் இந்த சேவை சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் 4ஜி சேவையை ஒப்பிடும் போது தகவல் பறிமாற்றத்தில் பல நூறு மடங்கு வேகம் படைத்தது 5ஜி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சேவையைக் கொண்டு 3டி திரைப்படங்கள், 3டி விளையாட்டுகள், அதி நவீன எச்.டி., (UHD) தரத்துடன் கூடிய ஸ்டரீமிங் ஆகியவற்றை உபயோகிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. ஹலோ கேட்குதா..தெளிவா கேட்குதா என்று நம் தாத்தா தொலைபேசி...

கணினியை மால்வேர் தாக்குதலிருந்து பாதுகாக்க மைக்ரோசாஃப்டின் System Sweeper!

Image
தினமும் புதிய  புதிய வைரஸ்களும், மால்வேர்களும் உருவாக்கப்பட்டு இணையம் கணினிகளைத் தாக்கி, கணினிகளின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்குகிறது.  ஹேக்கர்கள் என அழைக்கப்படும் இணைய வழி நுட்ப திருடர்களின் வேலை இது. ஏதாவது ஒரு இணைப்பின் (Link) மூலமாகவோ அல்லது தரவிறக்கம் மேற்கொள்ளும்பொழுது (Download) அதனுடன் இணைந்து இந்த தீங்கிழைக்கும் மென்பொருளும் கணினியில் நுழைந்துவிடுகிறது.  இது நம்முடைய கண்ணுக்குத் தெரியாது. இதனை ஆண்டி வைரஸ் மென்பொருள்களின் மூலமே கண்டறிய முடியும். சில சமயம் இந்த ஆண்டி வைரஸ் மென்பொருள் தொகுப்பையும் (Anti virus sofware) மீறி சில மால்வேர்கள் கணினியில் தம்முடைய வேலையைக் காட்டத் தொடங்கிவிடும். இத்தகைய மால்வேர்களை கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் ஆண்டி வைரஸ் மென்பொருளால் கண்டறிந்து அழிக்க முடியாது. அதுபோன்ற சமயங்களில் மால்வேர் தொகுப்புகளை கண்டறிந்து நீக்குவதற்காகவே மைக்ரோசாப்ட் நிறுவனம் System Sweeper என்ற மென்பொருளை வழங்குகிறது. இது முற்றிலும் இலவசமே.. இந்த மென்பொருளை உங்களுடைய கணினியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் பதிந்திருந்தாலு...

பி.டி.எப் பைல்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்குமா?

Image
இணையத்தில் ஏதேனும் ஒரு தளத்திலிருந்து, பி.டி.எப். பைல் ஒன்றை தரவிறக்கம் செய்திடுகையில், குரோம் பிரவுசர், இந்த பைல் உங்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்கும்.  இதனைத் தக்க வைக்கவா? அல்லது இறக்குவதை நிராகரிக்கட்டுமா? என்று கேட்கிறது. மற்ற பிரவுசர்கள் இந்த கேள்வியைக் கேட்பதில்லை. குரோம் மட்டும் ஏன் கேட்கிறது? உண்மையிலேயே பி.டி.எப். பைல்கள், கம்ப்யூட்டரைக் கெடுக்குமா? சற்று விரிவாக இங்கு பார்க்கலாம். முதலில் பி.டி.எப். பைல் என்பது, டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் கொண்ட ஒரு பைல் மட்டுமே. இது எப்படி கம்ப்யூட்டரைக் கெடுக்கும் அளவிற்கு அபாயத் தன்மை கொண்டதாக இருக்க முடியும்? என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. ஆனால், இந்தக் கேள்வி பொருளற்றது என, இதனைச் சற்று ஆய்வு செய்திடுகையில் தெரிகிறது. அதனை இங்கு காணலாம்.  கடந்த சில ஆண்டுகளாகவே, பி.டி.எப். பைல்களைப் படிக்க நாம் பயன்படுத்தும் அடோப் ரீடர் போன்ற புரோகிராம்கள், இணையத்தில் வைரஸ்கள் எளிதாகத் தாக்குவதற்கான நிலையில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், பி.டி.எப். பைல்கள் வெறும் டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் மட்டும் கொண்டதல்ல.  ...

போட்டோக்களை அழகூட்ட XnRetro

Image
செல்போன் மற்றும் டிஜிட்டல் கேமிரா மூலமாக எடுக்கும் படங்கள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்காது, அதனை எடிட் செய்த பின்பே படங்கள் வண்ணமயமாக இருக்கும். படங்களை எடிட் செய்ய செல்போன்களுக்கு பல்வேறு இலவச அப்ளிகேஷன்கள் உள்ளது. அதுவும் ஆன்ட்ராய்ட் சாதனங்களுக்கு என்றால் போட்டோக்களை எடிட் செய்ய பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் கணினிக்கு விண்டோஸ் இயங்குதளத்திற்கு அவ்வாறு மென்பொருள்கள் இல்லை. ஏதோ ஒரிரண்டு மென்பொருள்கள் மட்டுமே உள்ளது, அதில் ஒன்றுதான் XnRetro. மென்பொருளை தரவிறக்க சுட்டி சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் XnRetro அப்ளிகேஷனை ஒப்பன் செய்து குறிப்பிட்ட படத்தை ஒப்பன் செய்யவும். பின் வேண்டிய எடிட்டிங் வேலைகளை செய்துவிட்டு பின் படத்தை சேமித்துக்கொள்ளவும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளில் எடிட் செய்துவிட்டு நேரிடையாக சோஷியல் தளங்களில் பதிவேற்றம் செய்து கொள்ளவும் முடியும்.

விண்டோஸ் 8 ஐ Safe Mode ல் பூட் செய்ய முடியுமா?

Image
முடியும்... விண்டோஸ் எக்ஸ்பி, ஏழு இயங்குதளத்தில் சாதாரணமாக பூட் ஆகும் போதே F8 கீயை அழுத்தினால் Safe Mode போவதற்கான வழி கிடைக்கும். ஆனால் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் அவ்வாறு இல்லை, விண்டோஸ் 8 F8 அழுத்தினால் எந்த வித மாறுதலும் இல்லாமல் சாதாரணமாக பூட் ஆகும். எனினும் விண்டோஸ்8 இயங்குதளத்தை Safe Mode ல் பூட் செய்யவும் வழி இருக்கிறது. இந்த Safe Mode ல் பூட் செய்வதற்கான அவசியம் என்ன, ஒரு வேலை அழியாத கோப்புகளை அழிக்க வேண்டுமெனில் Safe Mode சென்று முழுமையாக அழித்துவிட முடியும். இயங்குதளம் பூட் ஆகாமல் கோளாரு செய்தாலும் Safe Mode சென்று சரி செய்து கொள்ள முடியும். இது போல் பல்வேறு பிரச்சினைகளை Safe Mode சென்று சரி செய்து கொள்ள முடியும். விண்டோஸ் 8 ல் Safe Mode செல்ல , முதலில்  விண்டோஸ்கீ மற்றும் R பொத்தான்களை ஒருசேர அழுத்தி ரன் விண்டோவை ஒப்பன் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் msconfig என்று தட்டச்சு செய்து OK பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Boot என்னும் டேப்பினை தேர்வு செய்து பின் விண்டோஸ் 8 இயங்குதளத்தை தேர்வு செய்து Set as default என்னும் பொ...

மாதத் தவணையில் நோக்கியா போன்கள்

மொபைல் போன் விற்பனைச் சந்தையில், தன் இடத்தைத் தக்க வைக்க, நோக்கியா நிறுவனம் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், விண்டோஸ் போன் 8 சிஸ்டம் இயங்கும் லூமியா வரிசை போன்களுக்கு புதிய சலுகை விற்பனை திட்டம் ஒன்றை சென்ற வாரம் சென்னையில் அறிவித்துள்ளது. லூமியா 920, லூமியா 720, லூமியா 620 மற்றும் லூமியா 520 போன்கள் உட்பட, புதிய லூமியா வரிசை போன்கள் அனைத்தும் இந்த வகையில் பெற்றுக் கொள்ளலாம். இவற்றின் தொடக்க விலை ரூ.10,499. இவற்றை, மாதந்தோறும் தவணை முறையில் பணம் செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வட்டி எதுவும் இல்லை. இந்த திட்டத்தில் பெற, விண்ணப்ப பரிசீலனைக் கட்டணமும் இல்லை. இந்த திட்டம், இந்தியாவில் 12 நகரங்களில், நோக்கியாவின் 200 விற்பனை மையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு மாதத் தவணைகளில், இந்த போன்களுக்கான விலையைச் செலுத்தலாம். ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., சிட்டி வங்கி உட்பட பல வங்கிகளின் மூலமாக தவணைப் பணத்தினைச் செலுத்தலாம். இவற்றிற்கு, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மூலமாக, இன்ஷூரன்ஸ் வசதியும் தரப்படுகிறது. பிரிமியமாக ரூ.50 அல்லது போனின் விலையில...

பாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்கள் - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

Image
   உலகெங்கும் இயங்கும் கம்ப்யூட்டர்களில், நான்கில் ஒன்று பாதுகாப்பற்ற நிலையில் இயங்குவதாகவும், இவற்றில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குவது மிக எளிதான ஒன்றாகும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.  மைக்ரோசாப்ட் நிறுவனம், கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பு குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்திட, செக்யூரிட்டி இன்டலிஜென்ஸ் அமைப்பு ஒன்றை இயக்கி வருகிறது. இதன் சமீபத்திய அறிக்கை இந்த அதிர்ச்சி தரும் தகவல்களைத் தந்துள்ளது.  பன்னாடெங்கும் உள்ள கம்ப்யூட்டர்களில், 24 சதவீத கம்ப்யூட்டர்கள், அப்டேட் செய்யப்படாத ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களைக் கொண்டு, ஆபத்தான சூழ்நிலையில் இயங்கி வருகின்றன.  இவை மற்றவற்றைக் காட்டிலும் 5.5 மடங்கு அதிக ஆபத்துக்களை வரவேற்கும் தன்மையுடையன. இந்தியாவில் இயங்கும் கம்ப்யூட்டர்களில், 30 சதவீதம் பாதுகாப்பற்ற தன்மையைக் கொண்டுள்ளன. எகிப்தில் 40%, அமெரிக்காவில் 26%, கனடாவில் 23%, பிரிட்டனில் 21% மற்றும் ரஷ்யாவில் 29 சதவீதம் என இந்த அறிக்கை, பாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையைக் காட்டியுள்ளது. ச...

மைக்ரோமேக்ஸ் நிஞ்சா ஏ91

Image
சஹோலிக் (Saholic) இணைய தளத்தில், மைக்ரோமேக்ஸ் நிஞ்சா ஏ-91 மொபைல் ஸ்மார்ட் போன் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 8,499.  இது ஒரு புதிய டூயல் சிம் ஆண்ட்ராய்ட் இயக்க போனாகும். 4.5 அங்குல தொடுதிரை இயக்கம் தரப்பட்டுள்ளது. டி.எப்.டி. எல்.சி.டி திரையாக இது தரப்பட்டுள்ளது.  ஒரு கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 (ஐஸ்கிரீம் சாண்ட்விச்) சிஸ்டம் செயல்படுகிறது. 5 எம்.பி திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா ஒன்றும், முன்புறமாக 0.3 எம்பி திறன் கொண்ட போன் வீடியோ அழைப்புகளுக்காகவும் தரப்பட்டுள்ளன.  நெட் வொர்க் இணைப்பிற்கு, 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ் தொழில் நுட்பங்கள் இயக்கத்தில் உள்ளன. ராம் மெமரி 512 எம்பி ஆகவும், ஸ்டோரேஜ் 4 ஜிபி ஆகவும் தரப்பட்டுள்ளது.  ஸ்டோரேஜ் மெமரியினை 32 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்தலாம். எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் நம் மியூசிக் ஆர்வத்திற்கு உதவுகின்றன. 1,800 mAh திறன் கொண்ட பேட்டரி கிடைக்கிறது.

எல்.ஜி. நிறுவனத்தின் புதிய மொபைல் பி 715

Image
எல்.ஜி. நிறுவனம், சென்ற பிப்ரவரியில் அறிவித்த தன் 3ஜி மொபைல் போனை, தற்போது விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. பி 715 என அழைக்கப்படும் இந்த போனின் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 14,999.  நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 122.2 x 66.6x9.7 மிமீ. எடை 115.5 கிராம். பார் டைப் வடிவில் அமைந்துள்ள இதில், எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது.  இதன் திரை 4.3 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மல்ட்டி டச் செயல்பாட்டினை ஏற்றுக் கொள்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 768 எம்பி ராம், 4 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும்.  நெட்வொர்க் இணைப்பிற்கு, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, வை-பி, A2DP இணைந்த புளுடூத் ஆகிய தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 8 எம்.பி.கேமரா இயங்குகிறது.  வீடியோ பதிவு நல்ல வேகத்தில் கிடைக்கிறது. டூயல் கோர் கோர்டெக்ஸ் ஏ 5 சிப் 1 கிகா ...

வேர்ட் பைலினை ஆடியோ பைலாக கன்வெர்ட் செய்ய

Image
அலுவலங்கள் மற்றும் கணினி மையங்களில் கோப்புகளை உருவாக்க பெரும்பாலும் தற்போதைய காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் தொகுப்பான வேர்ட் கொண்டோ உருவாக்கப்படுகிறது. ஆப்பிஸ் தொகுப்பை கொண்டு  உருவாக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் எழுத்து வடிவில் மட்டுமே இருக்கும். இந்த வேர்ட் தொகுப்பை பயன்படுத்தி உருவாக்கப்படும் கோப்புகள் மிகச்சிறியதாகவும். அளவில் பல பக்கங்களை உள்ளட்டக்கியதாகவும், அதிகமான பக்கங்களை கொண்ட டாக்குமெண்ட்களை எளிதில் படித்துவிட முடியாது. இதனால் காலம் தாமதம் மட்டுமே ஆகும். இதற்கு பதிலாக எழுத்து வடிவில் உருவாக்கப்படும் கோப்புகளை ஒலி வடிவில்மாற்றம் செய்ய இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது. மென்பொருளை தரவிறக்க சுட்டி  மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளை கணினியில் நிறுவ வேண்டுமெனில் டாட்நெட் ப்ரேம்வோர்க் அன்மைய பதிப்பு கணினியில் நிறுவியிருக்க வேண்டும். இல்லையெனில் டாட்நெட் ப்ரேம் வோர்க் மென்பொருள் நீங்கள் பதிவிறக்கிய கோப்பில் இருக்கும் அதை கணினியில் நிறுவிக்கொள்ளவும்.  ...

LibreOffice - எம்.எஸ். ஆபிஸ் தொகுப்புக்கு மாற்று மென்பொருள் 4.0.3

Image
  இந்த ஆபிஸ் மென்பொருள் தொகுப்பானது ஸ்டார் ஆபிஸ் தொகுப்பை போன்றே உள்ளது. இந்த LibreOffice தொகுப்பானது இலவச மென்பொருள் (OpenSource) ஆகும். அதன் காரணமாக இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் பிறரிடம் உரிமம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.    ஆபிஸ் என்றாலே மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய எம்.எஸ்.ஆபிஸ் தொகுப்பு மட்டுமே உள்ளது என இன்னும் நிறைய கணினி பயனாளர்கள் நினைத்துக்கொண்டு உள்ளனர். அதைவிட சிறப்பானதாக நிறைய ஆபிஸ் தொகுப்புகள் இருந்தும் அவையாவும் வெளியே வராமல் உள்ளது. எம்.எஸ். ஆபிஸ் தொகுப்பை போல அனைத்து வகையான சிறப்பான மென்பொருள் என்றால் அது LibreOffice மட்டுமே ஆகும். இயங்குதளம்: விண்டோஸ் 9x/ME/NT/2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா /7/8

உங்கள் வங்கிக் கணக்கை கொள்ளையடிக்கு வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!

Image
Bank money predatory new virus-warning வணக்கம் நண்பர்களே..! கடந்த காலங்களில் பல்வேறுப்பட்ட வைரஸ்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கணினியில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி,கணினியில் உள்ள  தகவல்களை தானாகவே சேகரித்து, வைரஸ் அனுப்பியவரின் கணினிக்கு தகவல்களைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும். அதனால் அவற்றைத் தவிர்க்க, அழிக்க ஒரு சில ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களையும் பயன்படுத்தியிருப்பீர்கள் அல்லது பயன்டுத்திக் கொண்டிருப்பீர்கள்.    புதிய வைரஸ் எச்சரிக்கை:  அந்த வகையில் தற்பொழுது புதிய வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விரைவாக பரவி, தகவல்களைத் திருடிய win32/Ramnit என்ற பயங்கரமான வைரசின் வாரிசாக உள்ளது என இந்திய இணையவெளியில் நடக்கும் திருட்டுக்களை கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response Teamindia -CERTIn) எச்சரிக்கை விடுத்துள்ளனர். என்ன செய்யும் இந்த வைரஸ்?  இந்த வைரசானது தான் நுழைந்த கணினியில் உள்ள EXE, DLL அல்லது html ஆகிய கோப்புகளைக் கண்டறிந்து அ...

பேஸ்மேக்கர் - இதயம் - ஹெட்போன் - எச்சரிக்கை செய்தி...!!

Image
பேஸ்மேக்கர்: (Pacemaker) பேஸ்மேக்கர் என்பது இதய துடிப்பை சீராக வைக்கும் கருவி.  ஹெட்போன்:(headphone) பாடல்கள் கேட்கவும், செல்போனிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுப் பேசவும் பயன்படும் கருவி.  சரி.. இரண்டிற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?  இதயபலகீனம் உள்ளவர், தங்களின் இதய துடிப்பை சீரமைக்க பொருத்திக்கொள்வதுதான் பேஸ்மேக்கர். பேஸ்மேக்கர் இரண்டு வகைகளில் பொருத்தியிருப்பார்கள்.  ஒன்று உடம்பிற்கு உள்ளே வைத்து பயன்படுத்துவது.  மற்றொன்று வெளியிலிருந்து இதயத்திற்கு இணைப்பு கொடுத்து பயன்படுத்துவது.  இவ்வாறு பேஸ்மேக்கர் (pacemaker) சாதனத்தைப் பயன்படுத்துபவர்கள் ஹெட்போனை பயன்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவித்துள்ளனர்.  ஆம். ஹெட்போனில் பயன்படுத்தப்படுவது டைமியம் என்ற ஒரு வகை காந்தம். டைமியம் பொருத்தப்பட்ட Head Phone-ஐ பேஸ்மேக்கர் கருவி அருகே மூன்று சென்டிமீட்டர் இடைவெளிக்குள் கொண்டு செல்லும்போது பேஸ்மேக்கர் கருவி, தானாகவே இயங்கி, இதயத்திற்கு தேவையில்லாத நேர...

WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

கம்பியில்லா இணைய இணைப்பை சாத்தியமாக்கி WiFi தொழில்நுட்பத்தில் உள்ள அபாயங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அதற்கு முன்பு வைஃபை(WiFi) என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.  WiFi என்பது wireless fidelity என்பதின் சுருக்கம். இது ஒரு wireless local area network  ஆகும். கணினி - இணையதள இணைப்புகளுக்கும், நெட்வொர்க்குகளுக்கும் இணைப்புகளை ஏற்படுத்திய கம்பிவட தொழில்நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக வளர்ந்துள்ள புதிய பரிணாம வளர்ச்சியே வைஃபை என்று சொல்லக்கூடிய கம்பியில்லா இணைய இணைப்பு தொழில்நுட்பம் ஆகும்.  வைஃபை நெட்வொர்க்கில் உள்ள குறைகள்:  (Imperfections in the WiFi network:) Wi-Fi நுட்பத்தின் மூலம் கணினி, மொபைல், டேப்ளட் பிசி போன்ற சாதனங்களில் இணைய இணைப்பு எந்த இடத்திலிருந்தும் பெற முடியும் என்றாலும் முறையான தடுப்பு, பாதுகாப்பு வசதிகளைப் பயன்படுத்தாத பொழுது இது பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது.  அதாவது, இணைய இணைப்பை வான்வழி சிக்னல்களாக அனுப்பி பெற்றுப் பயன்படுத்துவதால் இடையில் வேறு யாரேனும் அதில் குறுக்கிட்டுப் பயன்படுத்த சாத்...

இணையத்தை மாற்றிய அறிவியலாளர்கள்

Image
சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், சாப்பிடும் உணவு போல இணையம், இன்றைய உலகையும் நம்மையும் கட்டிப் போட்டுள்ளது. இணையம் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து பார்க்க இயலவில்லை.  நம் வாழ்க்கை விரக்தியின் எல்லைக்கே சென்று விடும். இணையம் நமக்கு தகவல்களைத் தருகிறது; நாம் வாழும் சமூகத்தை நம்முடன் இணைக்கிறது. வர்த்தகத்தையும், நம் அன்றாடப் பணிகளையும் மேற்கொள்ள அடிப்படைக் கட்ட மைப்பாய் இயங்குகிறது.  நாம் மகிழ்வாக இருக்க, பொழுதினைப் பொறுப்போடும், ரசிப்புத் தன்மையுடனும் கழிக்கத் தேவையானவற்றைத் தருகிறது. இப்படி இன்னும் இந்த பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லலாம்.  இது போல இணையத்தினை வடிவமைத்துத் தந்ததன் பின்னணியில் பல்லாயிரக் கணக்கானவர்கள் இருக்கலாம். இருப்பினும், தலைமைப் பொறுப்பில் இருந்து இந்த மாற்றங்களை அவ்வப்போது கொண்டு வந்தது சிலரே. அவர்களை இங்கு காணலாம். 1. விண்ட் செர்ப் மற்றும் பாப் கான் (Robert Elliot “Bob” Kahn and Vinton G. Cerf): இணையத்தின் தந்தையர்கள் என்று அழைக்கப்படுபவர்கள். இவர்கள் தான் இணையத்தினை முதன்முதலில் வடிவமைத்தவர்கள். அமெரிக்காவில் இ...