பில் கேட்சின் ஐந்து ரகசியங்கள் :அவரே சொன்னது

பில் கேட்ஸ் சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனது பெர்சனல் தகவல்களை வெளியிட்டுள்ளார் .அதில் குறிப்பிடத்தக்க ஐந்து தகவல்கள் .
ரகசியம் 1: அவருடைய மூன்று குழந்தைகள் தலா 15,12,9 வயதுடையவர்கள் .அடிக்கடி அவரை பார்த்து பில்லியனர் என்ற Travie McCoy ன் பாடலை பாடி கேலி செய்கிறார்களாம் .

அடிஷனல் ரகசியம்  : இதற்க்கு பதிலடியாக யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்ற பாடலை பாட பயிற்சி செய்து வருவதாக ஒரு தகவல் உள்ளது

ரகசியம் 2 : இது வரை பல்வேறு திட்டங்களுக்காக 12 ,000 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்

அடிஷனல் ரகசியம்  : அடுத்த எலெக்ஷன்ல செலவழிக்க நன்கொடை குடுத்தா ஆட்சிக்கு  வந்ததும் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் ,கலியுக கர்ணன் பட்டமும்  கொடுத்து  கவுரவிக்க விருப்பதாக தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவரின் வாரிசு தெரிவித்துள்ளார் .


ரகசியம் 3 : ஒரே ஒரு twitter  account  உள்ளது. இருக்கின்ற ஒரே ஒரு Facebook  account  ல் நண்பர் வேண்டுதல்கள் எல்லை மீறி போய்விட்டதால் சரியாக வேலை செய்வதில்லை

அடிஷனல் ரகசியம் : தமிழ் நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பதிவர் மட்டும் ஆயிரம் அழைப்புகளை அனுப்பி பில் கேட்சை வெறுப்படைய வைத்துவிட்டாராம்


ரகசியம் 4 : புற்று நோய்க்கு உதவ பல அமைப்புகள் இருப்பதால் மலேரியாவை ஒழிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்

அடிஷனல் ரகசியம் : மருத்துவக்காபீட்டுத் திட்டத்துக்கும் உதவ கேட்க அமெரிக்காவிற்கு விரைவில் அம்மா ஆள் அனுப்புள்ளதாக அம்மாவின் உண்மை விசுவாசி தெரிவித்துள்ளார்


ரகசியம் 5 : சில முக்கியமான நபர்கள் கூட நான் யார் என்பதை சரிவரத்தெரியாமல் இருக்கிறார்கள் .சமீபத்தில் இந்தியாவில் ஒரு முதலமைச்சர் தம்மை அவருடைய நண்பர்களுக்கு இவர் எனது வெள்ளை கார நண்பர் என்று மட்டும் சொல்லி அறிமுகப்படுத்தினாராம் .

அடிஷனல் ரகசியம் :குறிப்பிட்ட ஒரு ஒப்பந்தத்திற்கு கமிஷன் வழங்க மறுத்ததாலேயே அவரை அவ்வாறு கூற நேரிட்டது என்று அந்த முன்னாள் முதல்வரின் முன்னாள் உதவியாளர் தெரிவித்துள்ளார்

Comments