ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பேக்கப் செய்வது எப்படி?

ஆண்ட்ராய்ட் கோப்புகளை பேக்கப் செய்வது எப்படி? 

(How to backup Android Application? )
ஆண்ட்ராய்ட் வகைப் போன்கள் தற்பொழுது அதிக பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஒவ்வொருவரின் கையில் ஏதாவது ஒரு மாடல் ஆண்ட்ராய்ட் மொபைல் (New Model Android Smartphone) உள்ளது. ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் தங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் வகை வகையான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கூகிள் பிளே ஸ்டோர் மூலம் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். அவற்றில் சில அப்ளிகேஷன்கள்  இலவசமாகவும், சில அப்ளிகேஷன்களை கட்டணம் செலுத்தியும் பெற்றிருக்கலாம்.. அவ்வாறு பெற்ற அப்ளிகேஷன்களை பேக்கப் செய்து பாதுகாப்பது எப்படி? ஏன் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் பேக்கப் எடுக்க வேண்டும் என்பதையும், அதனால் என்ன நன்மை என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

ஆண்ட்ராய் மொபைலில் உள்ள அப்ளிகேஷன்களை ஏன் பேக்கப் செய்ய வேண்டும்? 

(Why should do backup Android applications in mobile?)
உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு பார்மட் செய்யும்  நிலை நேரலாம். அதுபோன்ற சூழ்நிலையில் ஆண்ட்ராய்ட் போனை பார்மட் (Android phone format) செய்யும்பொழுது மொபைலில் உள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பேக்கப் செய்ய வேண்டியது வரும். அதனால் கட்டாயம் பேக்கப் எடுப்பது நல்லது. 

ஆண்ட்ராய்ட் போனில் உள்ள அப்ளிகேஷ்னகளை பேக்கப் எடுக்கவில்லை என்றால் என்ன நிகழும்? 

(What happens if you do not take the Android Phone application backup?)
ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பேக்கப் எடுக்காமல் போனை பார்மட் செய்யும்பொழுது மீண்டும் கூகிள் பிளே ஸ்டோரில் (Google Play Store) தேவையான அப்ளேகேஷன்களை ஒவ்வொன்றாக தரவிறக்க வேண்டியது வரும். இதனால் உங்களுடைய நேரம், பணம், இணையப் பயன்பாட்டுக்கான கட்டணம் ஆகியவைகளைச் செலவிட வேண்டியிருக்கும். 
இதுபோன்று மீண்டும் புதிதாக உங்கள் மொபைலில் உள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்யாமல், உங்கள் போனில் உள்ளதையே ஒரு பேக்கப் எடுத்து வைத்து மீண்டும் பயன்படுத்தலாம். அதாவது, ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை அப்படியே apk.exe கோப்புகளாக பேக்கப் எடுத்து உங்களுடைய மொபைலிலுள்ள மெமரிகார்டில் சேமித்துவைத்து, மொபைல் பார்மட் முடிந்த பிறகு மீண்டும் அவற்றை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும். 

ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பேக்கப் எடுக்க உதவும் மென்பொருள்: 

(Software for to take Android application backup:)
ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பேக்கப் எடுக்கப் பயன்படும் மென்பொருள் ES File explorer . இது ஒரு பைல்மேனேஜர் மென்பொருளாகும். உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலிலிருந்தே கூகிள் ஸ்டோர் சென்று ES File explorer மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம். 
மென்பொருளைத் தரவிறக்கம் செய்து  நிறுவிப் பயன்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய முகவரி: Download and Install  ES File explorer file manager 
மேற்கொண்ட இணைப்பை கிளிக் செய்து ES File Explorer File Manager உங்களுடைய Android Mobile-ல் நிறுவிக்கொள்ளுங்கள். 

ஆண்ட்ராய் போனில் அப்ளிகேஷன்களை பேக்கப் எடுக்கும் வழிமுறைகள். 

  •  ES File Explorer File Manager - ஐ ஆண்ட்ராய்ட் போனில் திறந்துகொள்ளுங்கள். 
  • தோன்றும் விண்டோவில் app mgr என்ற ஐகானை தொடவும். 
  • தொட்டவுடன் தோன்றும் விண்டோவில் உங்களுடைய ஆண்ட்ராய் போனில் இருக்கும் அப்ளிகேஷன்கள் தோன்றும். அதில் நீங்கள் பேக்கப் செய்ய வேண்டிய அப்ளிகேஷனை தொடர்ச்சியாக இரண்டு வினாடிகள் அழுத்தியவாறு இருங்கள். 
  • இப்பொழுது புதியதாக Operations என்ற  விண்டோ திறக்கும். அதில் select all , uninstall, backup, shortcut, detail என்ற வசதிகள் காட்டப்படும். அதில் பேக்கப் என்பதை தொடவும். 
  • இனி நீங்கள் விரும்பிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் பேக்கப் எடுக்கப்பட்டிருக்கும். 
  • அவ்வாறு பேக்கப் எடுக்கப்பட்ட அப்ளிகேஷனானது குறிப்பிட்ட அப்ளிகேஷ்ன் பெயரோடு(----------.appk was backed up successfully (/sdcard/backups/apps) )என உங்களுக்கு காண்பிக்கும். அதாவது உங்களுடைய android apps ஆனது SD கார்டில் பேக்கப்/அப்ஸ் (backup/apps) என்ற கோப்புறையில் சேமிக்கப்பட்டிருக்கும் என்ற தகவலே அது. 

இதுபோன்று உங்களுக்குத் தேவையான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் முழுவதையும் இந்த முறையில் உங்களுடைய மெமரிகார்டில் பேக்கப் எடுத்து வைக்கலாம். இவ்வாறு எடுத்து வைத்த பேக்கப் அப்ளிகேஷன்களை நிறுவ உங்களுக்கு இணைய இணைப்பு தேவையில்லை. இணையக்கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமும் ஏற்படாது. மேற்கண்ட செயல்கள் அனைத்தையும் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் மூலமே செய்துவிடலாம். 
பேக்கப் எடுத்த பைல்களை மீண்டும் நீங்கள் மீண்டும் பயன்படுத்த முடியும். மற்றவர்களுக்கு பயன்படும் என்றால் அந்த பேக்கப் பைல்களை அவர்களுக்கும் கொடுத்து உதவலாம். தேவைப்படும்பொழுதெல்லாம் வேண்டிய அப்ளிகேஷன்கள் உங்களுடைய மெமரி கார்டிலிருந்தே நிறுவிக்கொள்ள முடியும்.  
இனி நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலை தயக்கமின்றி பார்மட் செய்யலாம். 
நன்றி. 
இம்மென்பொருளைப் பயன்படுத்தும் வழிமுறைகளை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்....................

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க