விண்டோஸ் 7ல் பூட்டிங் திரையை மாற்றம் செய்ய

விண்டோஸ்7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் பூட் ஆகும் திரையை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கிறன அதில் ஒன்றுதான் இந்த Boot Updater மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் பூட்டிங் திரையை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். மேலும் கணினி தொடங்கும் திரையையும், கணினிமூடும் திரையையும் வேறுபடுத்தி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன், பூட் ஆகும் திரையின் பின்புறத்தின் கலர், எழுத்து மற்றும் எழுத்தினுடைய அளவு போன்றவற்றை மாற்றியமைத்துக்கொள்ள  முடியும். மென்பொருளின் உதவியுடன் பின்புறத்தில் படத்தினையும் கொண்டுவர முடியும். வேண்டுமெனில் அனிமேஷன் பைலையும் திரையில் கொண்டுவர முடியும். படத்தை வேண்டிய இடத்தில் வைத்துக்கொள்ளவும் இந்த மென்பொருளில் வசதி உள்ளது.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் அந்த மென்பொருளின் மீது வலதுகிளிக் செய்து தோன்றும் வரிசையில் Run as administrator என்னும் தேர்வினை தேர்வு செய்யவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்கள் விருப்பபடி தேர்வுகளை தேர்வு செய்து கொள்ளவும். பின் Apply என்னும் பொத்தானை அழுத்தி சேமித்துக்கொள்ளவும். பின் உங்களுடைய கணினியை மறுதொடக்கம் செய்யவும். இப்போது தோன்றும் விண்டோவில் நீங்கள் செய்ய மாற்றங்களுடன் பூட்டிங் திரையானது தோன்றும்.


அவ்வளவு தான் இப்போது நீங்கள் விரும்பியவாறு பூட்டிங் திரையானது தோன்றும். ஒரு முக்கியான விஷயம் என்னவெனில் இந்த செயலை செய்யும் போது கவனமாக செய்யவும். இல்லையெனில் கணினி பூட் ஆகுவதிலேயே சிக்கலாகிவிடும். கவனமாக இந்த செயலை செய்யவும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 7 (32, 64) பிட்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். மேலும் விண்டோஸ்7 SP1(32,64) பிட்களிலும் வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். 

பூட்டிங் திரையினுடைய கலர், எழுத்து, படம், அனிமேஷன் மற்றும் எழுத்தின் அளவு போன்றவற்றை மாற்றம் செய்ய இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாகும். பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் பதிலை கூறவும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க