ஹார்ட்டிஸ்கினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க
கணினியில் இயங்குதளத்தினை நிறுவும்போதே தனித்தனி பகுதிகளாக வன்தட்டினை பிரித்திருப்போம். ஒரு சிலர் இயங்குதளத்தை நிறுவும் போது முறையாக வன்தட்டினை பிரிக்காமல் விட்டுவிடுவார்கள். அதாவது C: மட்டுமே பிரித்து வைத்திருப்பர், அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனினும் கோப்புகளை முறையாக கையாள முடியாது. எனவே வன்தட்டினை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்திருப்பதே சிறந்தது. வன்தட்டினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க நம்முடைய ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது. ஆனால் அதில் ஒரு சில வசதிகள் குறைவாக உள்ளது. வன்தட்டினை முறையாக பிரிக்கவும். பிரித்த வன்தட்டில் மாற்றங்கள் செய்யவும், இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. அதில் ஒன்றுதான் இந்த Aomei Dynamic Disk Manager.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் பதிந்து கொள்ளவும். பின் வேண்டியபடி வன்தட்டினை முறைப்படுத்தி கொள்ளவும். இந்த மென்பொருள் பீட்டா பதிப்பாகும். மேலும் இந்த மென்பொருள் மூலம் ஏற்கனவே பிரித்த பகுதியையும் மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்த பீட்டா வெர்சன் ஜீலை 31 வரை மட்டுமே. முழுபதிப்பும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments