Posts

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்..

Image
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதற்கு புதியதாக ஆன்ட்ராய்ட் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆப்'ல் மின் கட்டணம் செலுத்துதல், மின் உபயோகத்தை தெரிந்துகொள்ளுதல், பயன்படுத்தபட்ட மின் அளவை உள்ளிட்டு மின் கட்டணத்தை தெரிந்துகொள்ளுதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.. மிக எளிமையான கட்டமைப்பினைப் பெற்றுள்ளது. அதனால் பயன்படுத்துவது எளிது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் Android App Download செய்ய..

பேஸ்புக் உட்பட சமூக வலைதளங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க டிப்ஸ்

Image
இன்றைக்கு பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருவது பேஸ்புக்கில் தான். பெண்கள் பேஸ்புக் ரோமியோக்களிடம் இருந்து தப்பிக்க  என்ன வழிகளை பின்பற்றலாம் என்று பார்க்கலாம். இன்றைக்கு பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருவது பேஸ்புக்கில் தான். இதில் நடக்கும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. காலையில் பேப்பரை திறந்தால் நிச்சயம் அதில் பேஸ்புக் நண்பரிடம் கற்பை இழந்த மாணவி, பேஸ்புக் காதலால் வந்த விபரீதம் அப்படி இப்படின்னு நிறைய செய்திகளை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். இவையனைத்துக்கும் முக்கிய காரணம் பெண்கள் தமக்கு அறியாத நபர்களின் Friend Requests யை ஏற்றுக்கொள்வது தான். இப்படி பெண்கள் ஏற்றுக் கொண்டவுடன் உடனே பெண்களின் இன்பாக்ஸூக்கு போய் Hi.. அப்படின்னு ஆரம்பிப்பாங்க அந்த ஆண்கள், அதுல இருந்து தான் தங்களது வேலையை இவுங்க ஆரம்பிப்பாங்க. இதோ அவுங்க என்னவெல்லாம் செஞ்சி பெண்களை கவுக்கறாங்கன்னு பாக்கலாம் வாங்க..... இன்பாக்ஸ்ல போய் Good morning, Good night சொல்லி ஜொல்லு ஊத்துவாங்க இவுங்ககிட்ட கொஞ்சம் கவனமா இருக்கணும் தப்பி தவறி அவுங்களுக்கு ரிப்ளே பண்ண...

Zoobe Cartoon - Voice நம்ம குரல்லையே அனிமேஷன் கேரக்டர்ஸ்ஸ ஈஸியா பேச வைக்கலாம்..

Image
நம்ம குரல்லையே அனிமேஷன் கேரக்டர்ஸ்ஸ ஈஸியா பேச வைக்கலாம்.. உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல்ல ப்ளேஸ்டோர்'ல போய்  Zoobe Cartoon - Voice' ன்ற அப்ளிகேஷன இன்ஸ்டால் பண்ணிக்கோங்க.. அதோட லிங்க் . இன்ஸ்டால் பண்ணிட்டு.. உங்களுக்குன்னு ஒரு ஓன் அக்கௌன்ட் இந்த  Zoobe Cartoon - Voice ஆப்'ல துவங்கிக்கோங்க.. அப்புறம் எந்த கார்ட்டூன் அனிமேஷன் கேரக்டர் புடிச்சிருக்கோ அதா கிளிக் பண்ணி.. உங்க குரலை பதிவு செய்ங்க.. அப்புறம் ஆட்டோமேட்டிக்கா உங்களோட குரலுக்கு தகுந்தாற் போல அந்த கார்ட்டூன் அனிமேஷன் கேரக்டர் தனது முக பாவங்களை வீடியோவாக வெளியிடும்.. அதனை நம் கேலரியிலும் சேமித்து கொள்ள முடியும்.. ஷேர் என்ற பட்டனை தொடர்ந்து பல சமூக வலைத்தளமான பேஸ்புக், ட்வீட்டர், இன்ஸ்டா, வாட்ஸப், பேஸ்புக் மெஸங்ஜர், போன்ற அனைத்திலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழலாம் நண்பர்களே..!! குறிப்பு : சில கார்ட்டூன் அனிமேஷன் கேரக்டர்களின் டெம்ப்ளட்டுகள் குறைந்தபட்சம் Rs.80.00'ஐ செலுத்தினால் மட்டுமே நாம் அந்த கார்ட்டூன் அனிமேஷன் கேரக்டரை பெறமுடியும்..!! உங்கள்- கௌரிசங்கர் குணசேகரன் 

இலவசமாக கிடைக்கும் ஆன்ட்டி வைரஸ் ஒரு பார்வை

Image
AV Test Institute என்ற இந்நிறுவனம் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்டி வைரஸ் செயலிகளை அதன் தரம், செயல்படும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் இயங்கும் முதல் 5 தரமான ஆன்ட்டி வைரஸ் செயலிகள் பட்டியலிட்டுள்ளது. இந்த செயலிகள் மால்வேர்களை தடுப்பது, வைரஸ் இணையத்தளங்களை சுட்டிக்காட்டுவது, புதிய வைரஸ்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை கம்ப்யூட்டருக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுப்பது போன்ற அருமையான செயல்களை செய்யவல்லவை. கட்டணம் கொடுத்துப் பெறப்படும் அனைத்து வசதிகளும் இந்த இலவச ஆன்ட்டி வைரஸ் செயலியில் இருப்பதுதான் அதன் சிறப்பம்சம். 1. கொமோட ஆன்ட்டி வைரஸ். 2. இசெட் என்.ஓ.டி. 32 3. பிட் டிபண்டர் 4. பண்டா ஆண்ட்டி வைரஸ் 5. அவிரா கொமடோ ஆண்ட்டி வைரஸ் இந்த (Comodo's free antivirus) செயலியைப் பொறுத்தவரை, கட்டணம் செலுத்திப் பெறும் தொகுப்பில் என்ன அம்சங்கள் உள்ளனவோ, அதே அம்சங்கள், இலவசமாகத் தரப்படும் பதிப்பிலும் தரப்பட்டுள்ளன. எனவே, பெரும் பாலோனவர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் தரப்பட்டுள்ள இரு தொழில் நுட்பங்கள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. அவை, Host ...

ப்ளாக்கரில் புது தீம்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.. New Theme Templates on Google Blogger..

Image
ப்ளாக்கர் தளத்தில் புதிய வசதிகள் அவ்வப்பொழுது ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ப்ளாக்கர் தளங்களுக்கான புதிய டெம்ப்ளேட்களை ப்ளாக்கர்வெளியிட்டுள்ளது. மூன்றாம் நபர் டெம்ப்ளேட்கள் பயன்படுத்தும்பொழுது, மால்வேர், வைரஸ் போன்ற பிரச்னைகள் வருவதற்கு சாத்தியம் உள்ளது. ஆனால் ப்ளாக்கர் தளத்தில் உள்ள டெம்ப்ளேட்களில் அதுபோன்ற எந்த ஒரு நிரல்களும் இல்லை. பயன்படுத்துவதும் சுலபம். புதிய தீம்களை பயன்படுத்துவது எப்படி? ப்ளாக்கர் தளத்தில் லாகின் செய்துகொள்ளுங்கள்.  தீம்ஸ் என்பதை கிளிக் செய்து பாருங்கள். அதில் Contempo, Soho, Emporio, Notable என்ற நான்கு வகைகளில் தீம்கள் வெளியிடப்பட்டிருக்கும். அவற்றில் பிடித்தமான தீமை செலக்ட் செய்து அப்ளை செய்துகொள்ளலாம்.  நவீன வசதிகளுடன், மிக எளிமையான தீம்களை வடிவமைத்துள்ளனர், பார்ப்பதற்கும் அற்புதமாக உள்ளது. குறிப்பு: புதிய தீம் அப்ளை செய்யும் முன்பு, உங்களுடைய பழைய தீமை(டெம்ப்ளேட்டை) ஒரு முறை டவுன்லோட் செய்துகொள்வது நல்லது. புதிய தீம் மாற்ற முயற்சிக்கும்பொழுது, பழைய டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்யவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட...

கணினி பாதிப்பிலிருந்து கண் தப்பிக்க பாதுகாப்பு பயிற்சிகள்..

Image
கணினி ரேடியசனிலிருந்து கண்களை பாதுகாத்திட உதவும் கண்பாதுகாப்பு பயற்சிகள்: தொடர்ந்து கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் கண்களுக்கு போதுமான ஓய்வு அளிப்பதில்லை. இதனால் வெகு விரைவில் கண்கள் பாதிக்கப்பட்டுவிடும். இதைத் தவிர்க்க போதுமான இடைவெளியில் கண்களை கம்ப்யூட்டர் திரையிலிருந்து விலக்கி வேறு திசைக்கு பார்வையை செலுத்த வேண்டும். இதற்கு 20-20 பார்முலா உதவும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களை தூரத்திலிருக்கும் பொருளின் மீது பார்வையை செலுத்த வேண்டும். அது மட்டுமின்றி, உடலுக்கு பயிற்சி அளிப்பது போல கண்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இதனால் கண்கள் தேவையான புத்துணர்வு பெறுகிறது. கண்களுக்கு பயிற்சி அளிப்பது எப்படி? கண்களை இரு புறமும் பக்கவாட்டில் (கிடைமட்டம்) முடிந்த அளவிற்கு கடைசி வரைக்கும் பார்வையை செலுத்துதல் கண்களை மேலும் கீழும் அசைத்து (செங்குத்தாக) பார்வையை செலுத்துதல் கண்களை வலது புற தோள்பட்டையிலிருந்து இடதுபுற கால் பட்டையை நோக்கி மேலிருந்து கீழாக செலுத்துதல். கண்களை இடது புற தோள்பட்டையிலிருந்து வலதுபுற கால் பட்டையை நோக்கி மேலிருந்து கீழாக செலுத்துதல். கண...

அதிரடி சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் ப்ளான் வெளியீடு..!!

Image
ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சேவைக்கு வாடிக்கையாளர்கள் இன்று முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை பதிவு செய்ய முடியும். மார்ச் 31-ஆம் தேதியுடன் ஆர் ஜியோவின் இலவச சேவைகள் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு நிறுவனத்தின் புதிய ப்ரைம் சந்தா வெளியிடப்பட்டது. அதாவது, ஆண்டுதோறும் ரூ.99/- என்ற ப்ரைம் மெம்பர்ஷிப் கட்டணம் தவிர்த்து ரூ.303/- என்ற மாதக் கட்டண திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் மூலம் வழக்கமான அதே சேவைகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மேலும் இரண்டு மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சேவை பற்றி நிறுவனத்தின் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் பிரைம் இல்லா வாடிக்கையாளர்களுக்கும் அதே விலையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் சலுகைகள் வேறு வகைகளில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாள் திட்டமாக, பிரைம் சந்தாதாரர்கள் ரூ.19க்கு 200ஜிபி டேடாவை உபயோகிக்கலாம் என்றால், பிர...

வாட்சப்பில் வந்துள்ள புதிய ஸ்டேடஸ் வசதியை எவ்வாறு பயன்படுத்துவது..??

Image
உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப், 'ஸ்டேட்டஸ்' என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், எமோஜிக்கள் மற்றும் GIF படங்களை நமது ஸ்டேட்டஸாக வைத்துக்கொள்ள முடியும். இந்த புதிய ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்துக்கு ஆக்டிவாக இருக்கும்.  இவற்றுக்கும் குறுஞ்செய்திகளுக்கு இருப்பது போல என்கிரிப்ஷன் வசதி உள்ளது. இவ்வசதி ஐஓஸ் மற்றும் ஆண்டிராய்டு செயலிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  எப்படி இந்த வசதியைப் பெறுவது?  இந்த புதிய வசதியைப் பெற கூகிள் ப்ளே ஸ்டோரில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்தால் போதும். வாட்ஸ் அப்பில் தானாகவே 'சாட்ஸ்' மற்றும் 'கால்ஸ்' ஐகான்களுக்கு நடுவே 'ஸ்டேட்டஸ்' உண்டாகி இருக்கும்.  எல்லாவற்றுக்கும் முன்னதாக இடப்பக்கத்தில் கேமரா வசதியும் உருவாகி இருக்கும். இதில் புகைப்படங்கள், செல்ஃபி, வீடியோக்களை எடுத்து ஸ்டேட்டஸாக வைக்கலாம். புகைப்படத்தில் எமோஜிக்கள் வைக்க முடியும். எழுதவும் வசதி செய்யப்பட்டுள்ளது.  உங்களுக்குத் தேவையான ஸ்டேட்டஸ் உருவானவுடன் அதைச் சேமித்து, விருப்பமிருந்தால்...

கணிதத்தில் சிறந்து விளங்க இதோ பயனுள்ள இணைய தளங்கள்..

கணிதத்தில் உங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு..! கணிதத்தில் சிறந்து விளங்க இதோ பயனுள்ள இணைய தளங்கள் வெற்றி நிச்சயம். பயன்படுத்தி பலனடையுங்கள் கணிதம் கற்க சிற...

உங்கள் கணினியில் இழந்த “டேட்டா”வை மீட்க.

கணினியில் நாம் அதிக நேரம் செலவழித்து கஷ்டப்பட்டு சேகரித்து வைத்திருந்த டேட்டாக்களை இழந்த அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும். அது போன்ற நிலையில் உதவுவதற்காகவே NextBreed என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மென்பொருள் மிக முன்னேறிய பல்வேறு வசதிகளுடன் ஆடியோ, வீடியோ, எம்எஸ் ஆபீஸ் போன்ற எந்த அமைப்பில் இருந்தாலும், NTFS, FAT12, FAT16, FAT32 போன்ற எந்த அமைப்பில் இருந்தாலும், hard Disk, USB drives (pen drives) Memory Cards, Camera Cards என்பவை போன்ற எந்த வகையான டேட்டாக்களை சேமித்து வைக்கும் சாதனத்தில் இருந்தாலும் மீட்டு கொடுக்கும். மேலும், System Crash, Accidental File Deletion, அன்பிளான்டு பார்மட், பார்டிஷன் டேமேஜ், லாஸ், Virus Infection, Files Lost in USB/SD cards போன்ற எந்த வகையில் டேட்டா இழப்பு ஏற்பட்டாலும் மீட்கலாம். JPEG,PNG, BMP.JIF,MP3,WAV,WMV,ASF.AVI.MP4.MPG,RMVB,.doc, xls, ppt, dbx, .mdb, ZIP, RAR என்பன போன்ற எந்த வகை பைலாக இருந்தாலும் மீட்க முடியும். இது மிக விரைவாக செயல்படக்கூடியதாகும். இதை http://www.nextbreed.com/product.html என்ற இணையதளத்தில் இருந்...

இனி இன்டர்நெட் இல்லாமலே கூகுளிடம் வழி கேட்கலாம்..!!

Image
எல்லாருடைய கைகளிலும் ஸ்மார்ட்ஃபோன் தவழும் இன்றைய தேதியில், கிட்டத்தட்ட எல்லா ஆப்ஸ்களுமே இணைய வசதி இருந்தால் மட்டுமே இயங்கக்கூடியதாக இருக்கின்றன. ஆனால் தங்கு தட...

ஆன்ட்ராய்ட் மொபைலை ட்யூனிங் செய்வது எப்படி..??

Image
டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் சேரும் தேவையற்றவற்றை நீக்குவது போல, ஆன்ட்ராய்ட் போனிலும் அது போன்ற சுத்தப்படுத்தும் வேலைகளை மேற்கொள்ள இயலுமா? அப்படியானல் அவை என்ன? என்று கூறவும் என வேண்டுகோள் தந்தனர். அந்த நோக்கில் சிந்திக்கையில், தென்பட்ட சில முக்கியமான செயல்பாடுகள் இங்கே தரப்பட்டுள்ளன. இவற்றை மேற்கொண்டால், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், அதிக பட்ச பயன்களை, எந்தவிதமான சிக்கல்கள் இன்றிப் பெறலாம். இதோ அவை: இங்கு தரப்படும் டிப்ஸ் மற்றும் குறிப்புகள் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களுக்கும் பொதுவானவையாகும். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் எந்த பதிப்பை உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வந்தாலும், இவற்றைப் பயன்படுத்தலாம். எந்த நாட்டில், இடத்தில் இவை இயக்கப்பட்டாலும், இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். அது மட்டுமின்றி, எந்த நிலையில் ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவராக ஒரு பயனாளர் இருந்தாலும், அவர் இவற்றைப் பயன்படுத்தலாம். அதிக ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய உதவிக் குறிப்புகள் இவை இல்லை.  தேவையற்றதை நீக்குக: இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள சிறிது கூடு...

ஹேக்கர்களின் புதிய இலக்குகள் ஒரு பார்வை..!!

Image
கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மேக் அபி நிறுவனப் பிரிவு, இந்த ஆண்டில் அடோப் பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் தொகுப்புகளை வைரஸ் மற்றும் பிற நாசவேலை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்த சைபர் கிரிமினல்கள் இதுவரை மைக்ரோசாப்ட் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களைத்தான் தங்கள் இலக்காக வைத்துச் செயல்பட்டு வந்தனர். அதில் உள்ள பிரச்னைக்குரிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் வைரஸ் களையும், மால்வேர்களையும் அனுப்பி நாசவேலைகளை மேற்கொண்டு வந்தனர். ஏனென்றால் இவைதான் கம்ப்யூட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இப்போது பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுவதால், இவர்களின் கவனம் இவற்றின் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தொகுப்புகளைச் சரியான பாதுகாப்பு வளையத்தில் அமைத்து வருகிறது.   அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மீது ஹேக்கர்களின் கவனம் திரும்பி இருப்பதனையும், பலர் புதிய மால்வேர் புரோகிராம்கள் மூலம் தங்கள் ...

எம்.எஸ் பவர்பாயின்ட்டில் ஃபேஸ்புக்கும், ட்விட்டரும்..!

Image
பவர்பாயின்ட்டில் நாம் தயாரிக்கும் பிரசன்டேஷன்களை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்துகொள்ளும் வசதியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதையும் பவர்பாயின்ட்டில் இருந்தே நேரடியாக செய்யமுடியும் என்பதுதான் ஹைலைட். ஃபேஸ்புக்கில் பகிர… பவர்பாயின்ட் ஸ்லைடில் தேவையான பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து புகைப்படமாக பகிர்ந்து கொள்ளலாம். பவர்பாயின்ட் பிரசன்டேஷனில் உள்ள எல்லா ஸ்லைடுகளையும் புகைப்பட ஆல்பம்போல பகிர்ந்துகொள்ளலாம். பவர்பாயின்ட் ஸ்லைடுகளை வீடியோவாக பகிர்ந்துகொள்ளலாம். ட்விட்டரில் பகிர… பவர்பாயின்ட் ஸ்லைடுகளில் தேவையான பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து புகைப்படமாக பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ‘சோஷியல் ஷேர்’ (Social Share) என்கின்ற ‘பிளக் இன்’ (Plug in) வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பிளக் இன்னை டவுன்லோட் செய்துகொண்டு இன்ஸ்டால் செய்தால் அது ஏற்கெனவே நாம் இன்ஸ்டால் செய்துள்ள பவர்பாயின்ட் சாஃப்ட்வேரில் ஒரு ‘டேபாக’ (மெனுவாக) உருவாகி இணைந்துவிடும். ‘சோஷியர் ஷேர்’ - டவுன்லோட் செய்யும் முறை 1. மைக்ரோசாஃப்ட்டின் வெப்சைட்டில் இருந்து ‘சோஷியல் ஷேர...

புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் பெயர் 'மார்ஷ்மல்லோ'..

Image
ஆன்ட்ராய்டு புதிய பதிப்பின் பெயர் 'மார்ஷ்மல்லோ' (Marsh Mallow) கூகுள் நிறுவனம் அறிவிப்பு. விரைவில் வெளியாகவுள்ள ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய பதிப்பிற்கு மார்ஷ்மல்லோ என பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் கூகுளின் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இதுவரை ஐஸ்கிரீம் சான்ட்விச் (4.0), ஜெல்லி பீன் (4.1), கிட்காட் (4.4), லாலிபப் (5.0) ஆகிய பதிப்புகள் அதிக வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில், அடுத்ததாக பல புதிய நவீன வசதிகளுடன் வெளிவரும் புதிய பதிப்பிற்கு மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது கூகுள்.  இந்த புதிய வெர்ஷனில் கைரேகையை பதிவு செய்யும் சென்சார்கள், அப்டேட் செய்யப்பட்ட பவர் சேவிங் மோடு, ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்யவும், அப்கிரேடு செய்யவும், பெர்மிஷன்களை ஸ்டிரீம்லைனில் காட்டும் புதிய வசதியும் உண்டு.  சில ஆப்ஸ்களை இன்ட்ஸ்டால் செய்யும் போது பர்மிஷன்களை வாங்க வேண்டியிருக்கும். புதிய பதிப்பில் முதலில் இன்ஸ்டால் செய்துவிட்டு தேவைப்படும்போது பர்மிஷன்களுக்கு ரெக்வெஸ்ட் கொடுக்கலாம்.  உலகம் முழுவதும் 80 சதவீத ஸ்மார்ட்போ...

விண்டோஸ் 10ல் நீக்கப்பட்ட அம்சங்கள்..

Image
  ஜூலை 29ல் அறிமுகம் செய்யப்பட்ட மைரோசப்டின் விண்டோஸ் 10-ல் இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்பட்ட சில அம்சங்கள் இதில் தவிர்க்கப்பட்டுள்ளன என்ற தகவல் சற்று ஏமாற்றத்தினைத் தரலாம். அவை எவை என்று இங்கு பார்க்கலாம். 1. விண்டோஸ் மீடியா சென்டர்: விண்டோஸ் 10லிருந்து நீக்கப்படும் மிகப் பெரிய வசதி விண்டோஸ் மீடியா சென்டர். மைக்ரோசாப்ட் தன் வலைமனையில் இதனை அறிவித்துள்ளது. விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், விண்டோஸ் 7 புரபஷனல், விண்டோஸ் அல்ட்டிமேட், விண்டோஸ் 8 ப்ரோ, விண்டோஸ் 8.1 ப்ரோ ஆகிய சிஸ்டம் தொகுப்புகளிலிருந்து, விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்து கொண்டால், அவற்றில், விண்டோஸ் மீடியா சென்டர் இருக்காது. அப்டேட் செய்யப்படுகையில் இந்த அப்ளிகேஷன் நீக்கப்படும். 2. டிவிடி இயக்கும் செயலி: விண்டோஸ் மீடியா சென்டர் வழியாக, டிவிடிக்களை இயக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கும். மீடியா சென்டர் நீக்கப்படுவதால், டிவிடிக்களை இயக்க தனியான ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ள வேண்டும். 3. விண்டோஸ் 7 டெஸ்க்டாப்பில் நாம் இயக்கிக் கொண்டிருக்கும் செயலிகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன. 4. வ...

4ஜி அதிவேக சேவை - இந்தியாவில் போட்டியிடும் நிறுவனங்கள்

Image
அதிவேகமாக இணையத்தைத் தரும் 4ஜி தொழில் நுட்ப சேவையினை வழங்க, மொபைல் சேவை நிறுவனங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் இந்த சேவையைத் தரும் முன்னர், முந்திக் கொண்டு தர, ஏர்டெல் முயற்சித்து வருகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி டேட்டா சேவை தற்போது 20 நகரங்களில் வழங்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பருக்குள் இது 44 நகரங்களில் வழங்கப்பட உள்ளது. மற்ற சில நகரங்களில், சோதனை முயற்சியில் உள்ளது. இப்போது இயக்கத்தில் உள்ள நகரங்களில் உள்ள பயனாளர்கள் தரும் பின்னூட்டத்தின் அடிப்படையில், மாற்றங்களை ஏற்படுத்தி, மற்ற நகரங்களில் இந்த சேவையை வழங்க இருக்கிறது. இந்த அதிவேக வயர்லெஸ் இன்டர்நெட் சேவைக்கான கட்டணம், தற்போது 3ஜி சேவைக்கு வாங்கப்படுவதைப் போலவே இருக்கும். 1 ஜி.பி.டேட்டா ரூ.250, 2 ஜி.பி. டேட்டா ரூ.450 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நன்றி தெரிந்துகொள்ளலாம்  

விண்டோஸ் 10 க்கு மாறும் முன் யோசிக்க வேண்டியவை

Image
2015 ஆம் ஆண்டின் மிகப் பெரிய தொழில் நுட்ப சாதனமாக இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக இருக்கும், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம்,  அனைத்து தனிநபர் பயன்பாட்டிற்கும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டத்தினை, காசு கொடுத்து வாங்கியிருந்தாலும், திருட்டுத்தனமாக நகலெடுத்துப் பதிந்து இயக்கி வந்தாலும், அவர்கள் விண்டோஸ் 10 சிஸ்டத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் மேலும் ஒரு தெளிவினை மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் 10 சிஸ்டத்தினை ஒரே முயற்சியில் தங்களுடைய கம்ப்யூட்டர்களில் அப்கிரேட் செய்திட, விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் அதன் எஸ்.பி. பேக்கேஜ் 1 மற்றும் விண்டோஸ் 8.1 கொண்டிருக்க வேண்டும். இவர்கள் ஒரே முயற்சியில், விண்டோஸ் 10 சிஸ்டத்தினைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் இறக்கிப் பதிவு செய்து கொள்ளலாம். அப்படியானால், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டத்தினை அப்படியே முதல் முறை பெற்ற நிலையில் இன்னும் வைத்து இயக்கிக் கொண்டிருப்பவர்கள் என்ன செய்திட வேண்டும்? என்ற கேள்வி எழலாம். இவர்கள் முதலில், விண்டோஸ் 7 சிஸ்டத்தை...

அடுத்தவரின் செல்போனுக்கு அனுப்பிய செய்திகளை அழிக்க உதவும் புதிய ஆப்(App) அறிமுகம்..

Image
ஏதோ ஒரு கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு, அது சென்ட் ஆன அடுத்த நொடியே " அவசரப்பட்டு அனுப்பி விட்டோமே..! " என்று வருத்தப்படுவது, செல்போன் உபயோகிக்கும் அனைவரும் ஒரு முறையாவது அனுபவித்திருக்கும் வேதனை. அந்த வேதனையை போக்க ' ராகெம் ' என்ற நிறுவனம் ஒரு புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த புதிய அப்ளிகேஷன் பற்றி, நியூயார்க்கில் உள்ள இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராகெடு கூறுகையில் “இதன் மூலம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் அனுப்பிய தேவையில்லாத செய்திகளை, ஒரே நேரத்தில் தங்களுடைய மற்றும் தாங்கள் அனுப்பிய நண்பருடைய செல்போனிலிருந்தும் நீக்க முடியும். பாதுகாப்பு தோல்விகள், தினசரி தலைப்பு செய்தியில் இடம் பெறும் அளவிற்கு இருப்பதால், மக்கள் தங்களுடைய தொடர்புகளும், அந்தரங்கமும் பாதுகாக்கப்பட வேண்டுமென விரும்புகின்றனர்.“ என்றார். செய்திகளை அழிக்கும் வசதி மட்டுமின்றி, ராகெம் (RakEM) தரவுகள், புகைப்படம், வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களில் வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்கிறது. கூகிள் ப்ளே ஸ்டோரில் ராகேம் (RakEM) App...

மைக்ரோசாப்ட்டின் புத்தம் புது Foldable கீ போர்ட்..

Image
தன்னுடைய லூமியா 640 மற்றும் லூமியா 640 எக்ஸ்.எல். மொபைல் போன்களின் அறிமுகத்துடன், வேறு சில அறிவிப்புகளையும் வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். முதன் முதலாக மடித்து வைத்து எடுத்துச் சென்று, பின் விரித்து வைத்து செயல்படுத்தக் கூடிய கீ போர்ட் ஒன்றை, அண்மையில் பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் கருத்தரங்கில் அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் இயக்க முறைமைகளில் இதனை இயக்கலாம். இது விண்டோஸ் 10 சிஸ்டத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுடனும் இயங்கும். இது ஒரு வயர்லெஸ் கீ போர்ட். புளுடூத் இணைப்பில் இயங்கும். மொபைல் போனில் இயங்கும் விண்டோஸ் 10 இயக்கத்திலும் இதனை இயக்கலாம். இது எப்போது விற்பனைக்கு வரும் என்றும் அதன் விலை குறித்தும் மைக்ரோசாப்ட் இதுவரை அறிவிக்கவில்லை. இந்த ஆண்டு, விண்டோஸ் 8.1 சிஸ்டம் பயன்படுத்தும் அனைவருக்கும், விண்டோஸ் 10 இலவசமாக அப்டேட் செய்திட வழங்கப்படும் என அறிவித்தது. விண்டோஸ் 10 சிஸ்டத்தின் சில அம்சங்கள், அது பயன்படுத்தப்படும் ஹார்ட்வேர் அமைப்பினைப் பொறுத்து வேறுபடும்.  ஏறத்தாழ 20 லட்சம் பேர் விண்டோஸ் இன்ஸைடர் புரோகிராமில் பதி...