உங்கள் கணினியில் இழந்த “டேட்டா”வை மீட்க.
கணினியில் நாம் அதிக நேரம் செலவழித்து கஷ்டப்பட்டு சேகரித்து வைத்திருந்த டேட்டாக்களை இழந்த அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும். அது போன்ற நிலையில் உதவுவதற்காகவே NextBreed என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த மென்பொருள் மிக முன்னேறிய பல்வேறு வசதிகளுடன் ஆடியோ, வீடியோ, எம்எஸ் ஆபீஸ் போன்ற எந்த அமைப்பில் இருந்தாலும், NTFS, FAT12, FAT16, FAT32 போன்ற எந்த அமைப்பில் இருந்தாலும், hard Disk, USB drives (pen drives) Memory Cards, Camera Cards என்பவை போன்ற எந்த வகையான டேட்டாக்களை சேமித்து வைக்கும் சாதனத்தில் இருந்தாலும் மீட்டு கொடுக்கும்.
மேலும், System Crash, Accidental File Deletion, அன்பிளான்டு பார்மட், பார்டிஷன் டேமேஜ், லாஸ், Virus Infection, Files Lost in USB/SD cards போன்ற எந்த வகையில் டேட்டா இழப்பு ஏற்பட்டாலும் மீட்கலாம்.
JPEG,PNG, BMP.JIF,MP3,WAV,WMV,ASF.AVI.MP4.MPG,RMVB,.doc, xls, ppt, dbx, .mdb, ZIP, RAR என்பன போன்ற எந்த வகை பைலாக இருந்தாலும் மீட்க முடியும்.
இது மிக விரைவாக செயல்படக்கூடியதாகும்.
இதை http://www.nextbreed.com/product.html என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நமது கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டும்.
இதை கணினியில் நிறுவி செயல்படுத்தியவுடன் தோன்றும் திரையில் 1. Deleted Recovery, 2.Partition Recovery, 3.Format Recovery, 4. Raw Recovery ஆகிய நான்கு வகைகளின் நாம் விரும்பும் வாய்ப்பை தேர்வு செய்து அதற்கேற்ற வழிமுறைகளைப் பின்பற்றி டேட்டாவை மீட்டெடுக்க முடியும்.
உதாரணமாக, முதல் வாய்ப்புக்கான பட்டனை தேர்வு செய்து “கிளிக்” செய்தவுடன் தோன்றும் திரையில் எந்த இயக்கத்தில் உள்ள பைல் என்று தேர்வு செய்ய வேண்டும்.
உடனே நாம் தேர்வு செய்த இயக்ககம் ஸ்கேன் செய்யப்பட்டு பட்டியலாக காண்பிக்கும். அதில் எந்த Folder-ல் உள்ள File என்று தேர்வு செய்யுங்கள். அதற்குப் பதிலாக, தேடும் வாய்ப்பின் மூலம் தேவையான File இருக்கும் இயக்ககத்தையும் Folder-ரையும் தேடிப் பிடித்து தேவையான File-லை மீட்கும் ‘Recover’ என்ற பட்டனை தேர்வு செய்து “கிளிக்” செய்யலாம்.
பின்னர் தோன்றும் திரையில் நாம் மீட்டெடுக்கும் பைலை சேமித்து வைக்கும் இடத்தை தேர்வு செய்து, ‘OK’ என்ற பட்டனை கிளிக் செய்யலாம். அப்போது பைல் மீட்கப்பட்டிருக்கும். இவ்வாறே மற்ற வாய்ப்புகளையும் பயன்படுத்தி, நீக்கம் செய்யப்பட்ட தேவையான டேட்டாக்களை மீட்கலாம்.
Comments