சாம்சங் ஸ்மார்ட் போன்களுக்கு இலவச ஹியர் மேப்ஸ்
சென்ற ஆகஸ்ட் மாதம், ஹியர் (HERE) நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் தான் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதன் அடிப்படையில், சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன்கள், இணைய இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்தக் கூடிய வகையிலான ஹியர் மேப்ஸ் அப்ளிகேஷன் ஒன்றின் சோதனை பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. எந்த ஒரு இடத்திற்கும் செல்லும் வகையில், போக்குவரத்திற்கான வழிகாட்டுதல்களை இந்த மேப் காட்டுகிறது. விண்டோஸ் போனில் கிடைக்கும், போன் இயங்கும் இடம் சார்ந்த அனைத்து வழி காட்டுதல்களும் இதில் கிடைக்கின்றன. இதன் சிறப்பு அம்சங்கள்: இணைய இணைப்பின்றி, கார் ஓட்டும் போதும், நடந்து செல்லும் போதும், குரல் மூலம் வழி காட்டுதல், நூறு நாடுகளில் வழி காட்டும் வகையிலான வரைபடங்களை தரவிறக்கம் செய்து, அமைத்துக் கொள்ளும் வசதி மற்றும் 46 நாடுகளில், 766 நகரங்களில், பொதுத்துறை வாகனங்கள் செல்லும் வழி மற்றும் திசை காட்டும் வரைபடம் ஆகியவை ஆகும். ஆண்ட்ராய்ட் 4.1 மற்றும் அதன் பின்னர் வெளியான ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் கொண்ட சாம்சங் மொபைல் ஸ்மார்ட் போன்கள...