ஆப்பிள் வளர்ந்த வரலாறு
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் வெளியாகியுள்ள இந்நிலையில், மொபைல் போன் இயக்க வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்த ஐபோன் உருவான வரலாற்றை இங்கு காணலாம். 1. ஐபோன் தொடக்கம் ஜனவரி 9, 2007: ஆண்டுதோறும் நடக்கும், மேக்வேர்ல்ட் கருத்தரங்கில், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், முற்றிலும் புதிய ஐபோன், அகலத்திரையுடன் கூடிய ஐபாட் மற்றும் இணைய இணைப்பில் புதிய வழி என மூன்று விஷயங்களை அறிமுகப்படுத்தினார். இன்றைய நிலையில் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட் போனுக்கு அன்று விதையிடப்பட்டது. இந்த போன் ஜூன் 29, 2-007ல் வெளியானது. பல மணி நேரம் காத்திருந்து மக்கள் இதனைப் பெற்றுச் சென்றனர். இது அறிமுகமாகி 74 நாட்கள் கழித்து, பத்து லட்சம் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டதாக, ஆப்பிள் அறிவித்தது. 2. ஆண்ட்ராய்ட் போட்டி: ஐபோன் அறிமுகமாகி 15 மாதங்கள் கழித்து, இதற்குப் போட்டியாக, முதல் ஆண்ட்ராய்ட் போன் அறிமுகமானது. எச்.டி.சி. ட்ரீம் என இது அழைக்கப்பட்டது. 3. பிரச்னை 2010: ஆப்பிள் நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செ...