ஸ்டோரேஜ் டிவைசின் மெம்மரி யூனிட் ரேஞ்..
பிட், பைட் என்ற அளவு குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். பெரிய அளவுகளில் டேட்டாக்கள் அடையும் போது, அவற்றின் அலகுச் சொற்கள் என்னவென்று, சட் என நமக்கு நினைவிற்கு வராது. சிடி ராம், ஹார்ட் ட்ரைவ், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ், டிவிடி ராம், புளு ரே டிஸ்க் ஆகியவற்றின் அளவுகளைக் குறிக்கையில் இந்த அலகு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கிலோ பைட் (KB), கிகா பைட் (GB), டெரா பைட் (TB) அளவில் நாம் ஓரளவு இவற்றை உணர்கிறோம். அதற்கும் மேலாகவும் அலகுச் சொற்கள் வந்து பல மாதங்கள் ஆகின்றன. எனவே நான் அறிந்த அவற்றை இங்கு காணலாம்.
௦ அல்லது 1 = 1 பிட் (b),
8 பிட்ஸ் (b) = 1 பைட் (B) ,
1,024 பைட்ஸ் (B) = 1 (KB) கிலோ பைட்,
1,024 கிலோ பைட்ஸ் (KB) = 1 (MB) மெகா பைட்,
1,024 மெகா பைட்ஸ் (MB) = 1 (GB) கிகா பைட்,
1, 024 கிகா பைட்ஸ் (GB) = 1 (TB) டெரா பைட்,
1,024 டெரா பைட்ஸ் (TB) = 1 (PB) பெட்டா பைட்,
1,024 பெட்டா பைட்ஸ் (PB) = 1 (EB) எக்ஸா பைட்,
1,024 எக்ஸா பைட்ஸ் (EB) = 1 (ZB) ஸெட்டா பைட்,
1,024 ஸெட்டா பைட்ஸ் (ZB) = 1 (YB) யோட்டா பைட்.
கம்ப்யூட்டர் கணக்கில் ஒரு கிலோ என்பது 2 டு த பவர் ஆப் 10 (2^10) அதனால் தான் 1,024 எனக் கிடைக்கிறது. ஒரு சிலர் இதனை 10 டு த பவர் ஆப் 3 (10^3) என எடுத்துக் கொள்கிறார்கள். ட்ரைவ்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் கூட இது போல சமயங்களில் எடுத்துக் கொள்வதால் தான், நமக்கு 1,024 க்குப் பதிலாக 1,000 கிடைக்கிறது.
Comments