பத்து ஆண்டுகளைக் கடந்த ஜிமெயில்..
ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுவது பல நாடுகளில் வழக்கமாக உள்ளது. அதனால் தான், பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 1 அன்று, ஒரு ஜிபி சர்வர் இடத்துடன், இலவச மின் அஞ்சல் சேவையினை அனைவருக்கும் வழங்க இருப்பதாக, கூகுள் அறிவித்த போது, எல்லாரும் அதனை முட்டாள் தினச் செய்தியாக எடுத்துக் கொண்டனர். அப்போது மின் அஞ்சல் சேவையில் கொடி கட்டிப் பறந்த ஹாட் மெயில் தந்து வந்த இடத்தைக் காட்டிலும் 500 மடங்கு அதிகமான இடம் என்பதாலேயே இந்த சந்தேகம் அனைவருக்கும் வந்தது. 2004 ஆம் ஆண்டில், ஒவ்வொருவருக்கும் 1 ஜிபி இடம் என்பது, மிகப் பெரிய நம்பமுடியாத செய்தியாகும். ஆன்லைனில் 2 எம்.பி. ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைப்பதே பெரிய விஷயமாக அப்போது பேசப்பட்டு வந்தது. எனவே தான் கூகுள் அறிவித்த 1 கிகா பைட் இடம் என்பது முற்றிலும் கற்பனையான ஒன்று என அனைவரும் எண்ணினார்கள். ஆனால், அது முற்றிலும் உண்மையான ஓர் அறிவிப்பு எனத் தெரிய வந்தபோது, இணைய உலகில் மாபெரும் புரட்சியாக கருதப்பட்டது. அதுவே தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக, கூகுள் சாம்ராஜ்ஜியத்தை மற்றவர்கள் அணுக முடியாத வகையில் நி...