அனுப்பிய ஈமெயில் படிக்கப்பட்டு விட்டதா என்று Track செய்வது எப்படி?

தற்போது நம் வேலைகளுக்கு மின்னஞ்சல் அனுப்பும் போது ஒரு சிலர் அதை ஓபன் செய்து பார்த்துவிட்டு பதில் அனுப்பாமல் இருக்கலாம்,அல்லது பதில் அனுப்ப தாமதம் செய்யலாம். நாம் கேட்டால் மின்னஞ்சலை ஓபன் செய்யவே இல்லையே என்று சொல்லலாம். இவ்வாறு பொய் சொல்பவர்களை கண்டுபிடிக்க நாம் அனுப்பிய ஈமெயில்களை அவர்களை ஓபன் செய்தார்களா இல்லையா என்பதை கண்டுபிடிக்கும் வழி ஒன்றை இன்று பார்ப்போம்.

இதை செய்ய Right Inbox என்ற Application நமக்கு உதவி செய்கிறது. Google Chrome, Firefox, Safari பயனர்கள் இதை பயன்படுத்தலாம். இந்த வசதி தற்போது ஜிமெயில் பயனர்களுக்கு மட்டுமே.

1. முதலில் Right Inbox தளத்திற்கு சென்று "Install Now" என்பதை கிளிக் செய்யுங்கள்.

2. அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் ப்ரௌசெர்க்கு ஏற்றார் போல நீங்கள் அதை டௌன்லோட் செய்து கொள்ளுங்கள்.

3.இப்போது உங்கள் Browser - இல் Extension ஆக இது Add ஆகி விடும். ஒரு முறை உங்கள் Browser-ஐ close செய்து ஓபன் செய்யுங்கள். அல்லது ஜிமெயிலை Refresh செய்யுங்கள்.

4. இப்போது உங்கள் ஜிமெயிலில் "Right Inbox is Ready" என்று வருவதை Continue கொடுங்கள்.

5. அடுத்த பக்கத்தின் Grand Access என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmeoJV8XQRw_SAGTvSzzBD29xWU4uy4WWs3tMwwX9Jmvvut42kKFShwYDg0zZzclgbj7ZBuoQCQBajfuKFFZxF_PgQZqbqVrVGx-kqvXyTWZgstNm-LRho-hj5KceFsmRsUzB9cSruS7Q/s1600/grand+access.png


இங்கே Grand Access கொடுப்பதால் உங்கள் Password போன்ற தனிப்பட்ட தகவல்களை அவர்களால் Access செய்ய முடியாது.

5. இப்போது மீண்டும் ஜிமெயில்க்கு வருவீர்கள்.அதில் நீங்கள் உங்கள் பிளானை தெரிவு செய்ய வேண்டும். இலவசமாக ஒரு மாதத்துக்கு பத்து மின்னஞ்சல்களை மட்டுமே நீங்கள் Track செய்ய முடியும். Upgrade செய்து கொள்ள விரும்பினாலும் செய்து கொள்ளலாம். தற்காலிகமாக இலவசத்தையே தெரிவு செய்யுங்கள்.

6. இப்போது ஒரு மெயில் Compose செய்யுங்கள். அதில் சில புதிய வசதிகள் இருப்பதை காணலாம்.அதில் Track தான் நாம் பயன்படுத்தப் போகும் வசதி.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqGB62wUHceACIfaDjy355Bvd9us_dxMFb64qMRXpBhGJNM5vvINeCMRfeQQE_rugSQK8X-O_sQph0PFL22kl6yCDTpMS4V0eL5pGJkzdtRoxN0ffF_etzQ2ny7UD7mKz5BqqTTUay7io/s1600/track.png


7. ஈமெயில் Compose செய்யும் போது இதை கிளிக் செய்து விடுங்கள். தகவல்களை நிரப்பி மெயில் அனுப்பி விடுங்கள்.

8. குறிப்பிட்ட ஈமெயில் ஓபன் செய்யப்பட்ட உடன் கீழே உள்ளது போல ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு வரும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrHbuvO_BqthDuIZ4L1-dR7CdnQScDz2APnfOSGhEbjMjldsC6D45iPuBlUsJXnHjsoU6frUAa4jc6h9q2UBwaZ0hVGyf3wj5sgQIe7oCaXbAy6zJ_dyMhaHVXJWV0i3d9cqzXfA0R30E/s1600/email+opened.png

இதில் உள்ள மற்ற வசதிகளை இன்னொரு பதிவில் காணலாம்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?