வெளியானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 5
வெகுநாட்களாக
எதிர்பார்த்திருந்த புதிய ஐபோன் சில வாரங்களுக்கு முன் வெளியானது.
முற்றிலுமாக அதிக மாற்றங்கள் எதுவுமின்றி, ஒரு சில நகாசு வேலைகளுடனும் வசதி
களுடன் இந்த ஐபோன் 5 வெளியாகியுள்ளது.
இந்தியாவில்
இதன் அதிக பட்ச விலை ரூ.59.500 என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு வந்த
ஐபோன்களைக் காட்டிலும் இதன் தடிமன் மேலும் குறைவாக (7.6 மிமீ) உள்ளது. எடை
112 கிராம். இதன் டிஸ்பிளே திரையும் சற்றே கூடுதலாக 4 அங்குல அகலத்தில்
உள்ளது.
ரெடினா
டிஸ்பிளே 640 x 1136 பிக்ஸெல்களுடன் உள்ளது. oleophobic என்று
அழைக்கப்படுகின்ற பூச்சு உள்ளதால், கைரேகைகள் இதில் படியாது. மொத்தத்தில்,
இது ஐபோன் 4 மற்றும் 4 எஸ் போலத்தான் தோற்றமளிக்கிறது. ஆப்பிள்
நிறுவனத்திற் குரிய தோற்றம் மற்றும் வடிவமைப்பு சற்றும் மாறாமல் உள்ளது.
இதிலும் நானோ சிம் எனப்படும் மினி சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே
தங்களிடம் உள்ள வழக்கமான சிம்மினை, கூடுமானவரை அதனை வழங்கிய நிறுவனத் திடம்
கொடுத்து, சிறிய சிம்மாக மாற்றிப் பெறுவது நல்லது.
ரூ.50 முதல் ரூ.100 வரை பெற்றுக் கொண்டு இதனை மாற்றித் தருகிறார்கள். ஐபோன்
5ல், ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐ.ஓ.எஸ். 6 ஆப்பரேட்டிங்
சிஸ்டம் உள்ளது.
இதில் தரப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ6 (A6) சிப், டூயல் கோர் வகையைச்
சார்ந்தது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். ஐபோன் 4 எஸ் வகை சிப் 1
கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் தன்மை கொண்டது என்பது இங்கு
குறிப்பிடத்தக்கது.
இதனால், ஐபோன் 5 முந்தைய போன்களைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில்
இயங்கினாலும், இதனைப் பயன்படுத்துபவர்களில் ஒரு சிலரே இதனை உணர முடிகிறது.
இதன் சிறப்பம்சங்கள்: 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்குகளில் இயங்கும்.
இதன் பரிமாணம் 123.8 x 58.6 x 7.6 மிமீ. எல்.இ.டி. பேக் லைட் எல்.சி.டி.
கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், மல்ட்டி டச், கார்னிங் கொரில்லா கிளாஸ், லவுட்
ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 16/32/64 ஜிபி கொள்ளளவு, 1 ஜிபி ராம்,
ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் தொழில் நுட்பம், வைபி ஹாட் ஸ்பாட், A2DP இணைந்த
புளுடூத், யு.எஸ்.பி., 8 எம்.பி திறனுடன், ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி.
பிளாஷ் கொண்ட பின்புற கேமரா, எச்.டி. வீடியோ மற்றும் இமேஜ் ரெகார்டிங், டச்
போகஸ், ஜியோ டேக்கிங், முகம் அறிந்து படம் எடுக்கும் வசதி, 1.2 எம்பி
திறனுடன் கூடிய முன்புற கேமரா, ஐ.ஓ.எஸ்.6 ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆப்பிள் ஏ 6
சிப்செட், டூயல் கோர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் சிரி வாய்ஸ் கட்டளை ஆகிய தொழில்
நுட்ப வசதிகள் உள்ளன.
கூடுதல் இயக்க வசதிகள்: ஐக்ளவுட் சேவை, ட்விட்டர் மற்றும் பேஸ்புக்
ஒருங்கிணைப்பு, டி.வி. அவுட்புட் இணைப்பு, மேப்ஸ், ஐ புக் பி.டி.எப்.
ரீடர், ஆடியோ வீடியோ பிளேயர் மற்றும் எடிட்டர், ஆர்கனைசர், டாகுமெண்ட்
வியூவர், இமேஜ் வியூவர் மற்றும் எடிட்டர், வாய்ஸ் மெமோ, டயல் கட்டளை
ஆகியவற்றைக் கூடுதல் வசதிகளாக கூறலாம். எடுக்க இயலாத 1440 mAh திறன் கொண்ட
பேட்டரி தரப்பட்டுள்ளது.
தொடர்ந்து 8 மணி நேரம் பேசும் திறனை அளிக்கிறது. 40 மணி நேரம் இசையினைத்
தொடர்ந்து கேட்க இயலும். இதன் கதிர்வீச்சு 0.95 W/kg என்ற அளவில் உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அறிவிக்கப்பட்ட சில்லரை விலை 64 ஜிபி ரூ. 59,500, 32 ஜிபி ரூ. 52,500,
16 ஜிபி ரூ. 45,500. இந்த விலை டீலர்களுக்குள் மாறுபடலாம். உடன் தரப்படும்
இலவச உபரி சாதனங்களும் வேறுபடலாம்.
Comments