விண்டோஸ் 8ல் யு.இ.எப்.ஐ. (UEFI)
UEFI
என்பதனை United Extensible Firmware Interface என விரிக்கலாம்.
கம்ப்யூட்டர் ஒன்றின் இயக்கத் தொடக்க நிலைகளில் ஒன்று என இதனைக் கூறலாம்.
பூட்
அல்லது பூட்டிங் என்று சொல்லப்படுகிற, கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்
நிலை என்பது, கம்ப்யூட்டர் இயங்குவதற்கென வரிசையாக மேற்கொள்ளப்படுகிற
செயல்பாடுகளாகும். பவர் பட்டன் அழுத்தி, கம்ப்யூட்டரை இயக்கிவிட்டு நாம்
அதன் முன் அமர்ந்து கொள்கிறோம்.
ஸ்டார்ட்
ஸ்கிரீன் வரும் முன், கம்ப்யூட்டரின் பூட் இயக்கம் நமக்குப் பல திரைகளைக்
காட்டுகிறது. இதில் பல தொழில் நுட்ப தகவல்கள் காட்டப்படுகின்றன. இவற்றில்
பல நமக்குப் புரியாத, பெரும்பாலான நேரங்களில் தேவைப்படாத தகவல்களாகவே
இருக்கின்றன.
இதற்குச் சிறிது நேரத்திற்குப் பின்னர், ஆப்பரேட்டிங் சிஸ்டம்
கம்ப்யூட்டரில் லோட் ஆவதைக் காணலாம். இதனை சில பாக்ஸ் மூலமாகவோ, அல்லது
வேறு ஏதேனும் எல்.இ.டி. விளக்குகள், மூலம் தெரிந்து கொள்ளலாம். இறுதியாக
லாக் இன் திரை அல்லது ஸ்டார்ட் திரை நமக்குக் காட்டப்படும். இதுதான்
கம்ப்யூட்டர் பூட்டிங் செயல்பாடாகும்.
பவர் பட்டன் இயக்கி, ஆப்பரேட்டிங் சிஸ்டம் லோட் ஆகி கம்ப்யூட்டரின்
கட்டுப்பாட்டினைத் தன் வசம் எடுத்துக் கொள்ளும் முன், கம்ப்யூட்டரின் செயல்
பாட்டினைக் கட்டுப்படுத்தி இயக்க, ஒரு செயல்முறை தேவைப்படுகிறது. அதுவே
பயாஸ் (BIOS) எனப்படும் இயக்க முறை தேவைப்படுகிறது. இதுவும் ஒரு குழப்பமான
செயல் முறை என்றாலும், இதனைத் தெரிந்து கொள்வது நல்லது.
BIOS என்பது Basic Input Output System ஆகும். இது முதன் முதலில்
வடிவமைக்கப்பட்ட போது, கம்ப்யூட்டர் பவர் பட்டனை இயக்கியவுடன்,
செயல்பாட்டிற்கு வரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும், அதனுடன் இணைக்கப்பட்ட
பல்வேறு சாதனங்களுக்கும் இடையே (ஹார்ட் டிஸ்க், வீடியோ கார்ட், கீ போர்ட்,
மவுஸ் போன்றவை)மேற்கொள்ளப்படும் டேட்டா பரிமாற்றத்தினை BIOS
நிர்வகிக்கிறது.
இது இயங்கத் தொடங்கியவுடன், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை லோட் செய்து இயக்கும்
முன்னர், கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்டுள்ள அனைத்து சாதனங்களும், சரியான
முறையில் அதனதன் தன்மைக்கேற்றபடி இணைக்கப்பட்டு இயங்குகிறதா என்பதனைச் சரி
பார்க்கிறது.
ஏதாவது ஒரு சாதனம் சரியாக இணைக்கப்பட்டு இயங்கவில்லை எனில், அதனை ஒரு
பிழைச் செய்தியாக அறிவித்து, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை லோட் செய்திடாமல்
நிறுத்துகிறது.
கம்ப்யூட்டரின் பயாஸ் புரோகிராமிற்குப் பதிலாக UEFI இல்லை. அதற்குப்
பதிலாக, பயாஸ் புரோகிராமின் இயக்கத்திற்குத் துணை போவதாய், அதன் மேலாகவே
அமர்ந்து கொள்கிறது.
பயாஸ் நிலையாகவும் எளிதாகவும் இயங்க உதவி செய்கிறது. பயாஸ் எப்போதும்
கம்ப்யூட்டரில் இயங்கும் ப்ராசசருக்கேற்ற வகையிலேயே அமைக்கப்படுகிறது.
கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்டுள்ள சில சாதனங்கள், பயாஸ் அமைப்புடன்
ஒத்துப் போகாத நிலையில் இருக்கலாம்.
அப்போது பயாஸ் புரோகிராமினை இணைந்து செயல்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கிக்
கொடுக்கிறது. அதாவது, இணைக்கப்பட்டுள்ள சாதனங்களின் வடிவமைப்புக்கும்,
பயாஸ் அமைப்பிற்கும் இசைவான சூழ்நிலை இல்லை என்றாலும், அதனை அமைத்துக்
கொடுக்கும் வழியை UEFI தருகிறது.
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மட்டுமே UEFI தரப்பட்டுள்ளது. இது
எதனைக் குறிக்கிறது? விண்டோஸ் 8 எந்தச் சூழ்நிலையிலும், உங்கள்
கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் எத்தன்மையுடையனவாக
இருந்தாலும், கம்ப்யூட்டர் பூட் செய்யப்பட்டு, விண்டோஸ் 8 இயங்கி, நீங்கள்
இயக்கத் தயாராக இருக்கும்.
அடிப்படையில், சிஸ்டத்தின் பூட்டிங் திறனை UEFI செறிவாக்கி, பூட் ஆகும்போது எந்த பிரச்னையும் எழாமல் பார்த்துக் கொள்கிறது.
Comments