டெஸ்க்டாப் ஐகான்கள் மறைந்துவிட்டதா?

உங்களுடைய கணினி திரையில் desktop--ல் உள்ள icon கள் திடீரென மறைந்துவிட்டதா?

உடனே நீங்கள் பதற வேண்டாம்.

டெக்ஸ்டாப்பில் உள்ள ஐகான்கள் மறைந்துவிடுவதற்கு இரண்டு
காரணங்கள் உள்ளன.

1. நீங்களாகவே உங்களை அறியாமல் டெஸ்க் டாப் ஐகான்களை மறைத்துவிடுவது.
2. InfraRecorder என்று சொல்லப்படும் ரெக்கார்டிங் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வதால் ஏற்படும் பிரச்னை.

InfraRecorder என்று சொல்லப்படும் CD/DVD ரெக்கார்டிங் அப்ளிகேசனை நிறுவும்பொழுது விண்டோஸ் 7 -ல் தானாகவே Show Desktop Icon என்பது அன்செலக்ட் ஆகிவிடும். இதனால் உங்களுடைய டெஸ்க்டாப்பில் எந்த ஐகானும் இல்லாமல் வெறும் டெஸ்க்டாப் வால்பேப்பர் மட்டுமே தெரியும்.

நீங்களாகவே மறைப்பது எப்படி என்றால் உங்களை அறியாமல் நீங்கள் டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து Show Desktop Icons என்பதில் டிக் மார்க்கை எடுத்திருப்பீர்கள்.

இந்த இரண்டு பிரச்னைக்கும் எளிய தீர்வு இதுதான்.. 

  • உங்கள் கணினியில் டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து , View==>Show Desktop Icons என்பதில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள்.
  • இப்பொழுது உங்களுடைய டெஸ்க்டாப்பில் மறைக்கப்பட்டிருந்து அனைத்து ஐகான்களும் மீண்டும் தோற்றமளிக்கும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?