இன்டர்நெட் பயன்பாட்டினைக் கணக்கிட புதிய மென்பொருள்
பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பு இப்போது பலரிடம் வெகுவேகமாகப் பரவி வரும்
பழக்க இணைப்பாக உள்ளது. இதனை வழங்கும் சேவை நிறுவனங்கள், இறக்கப்படும்,
ஏற்றப்படும் டேட்டா அடிப்படையில், குறிப்பிட்ட அளவு ஜிபி வரை ஒரு கட்டணம்
என்றும் அதன் பின்னர், ஒவ்வொரு எம்பி டேட்டாவிற்கும் தனியாகக் கட்டணம்
வாங்குகின்றனர்.சில நிறுவனங்களின் திட்டங்களில் நமக்கு எப்படி இந்த அளவினை
மேற்கொள்கிறார்கள் என்று காட்டப்படுவது இல்லை. இதனால், இணைய இணைப்பினைப்
பயன் படுத்தினால், ஒரு மணிக்கு இவ்வளவு என, அந்த பயன்பாட்டு நேரத்திற்குமான
கட்டணத்தினை மட்டும் செலுத்தும் திட்டத்தினைப் பலர் விரும்புகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் நம் இணைய பயன்பாட்டினை நாம் அளந்து பார்த்து அறிய
முடியாதா என்ற கேள்விக்கு விடையாகச் சில புரோகிராம்கள் இணையத்தில் உள்ளன.
அவற்றில் ஒன்று BitMeter OS ஆகும். இதனை http://codebox.org.uk/bitmeterOs என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது ஓர் ஓப்பன் சோர்ஸ் புரோகிராம். விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் ஓ.எஸ்.
ஆகிய சிஸ்டங்களில் இயங்கும் வகைகளில் கிடைக்கிறது. இலவசமாய் இணையத்தில்
கிடைக்கிறது. இதனைத் தரவிறக்கம் செய்த பின்னர், ஸிப் பைலை விரித்து,
பைல்களை ஒரு போல்டரில் வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அப்ளிகேஷன் பைலை இயக்கி, இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடவும்.
இன்ஸ்டால் செய்தவுடன், நமக்கு அது குறித்து ஒரு செய்தி கிடைக்கும். இதன்
பின்னர், நாம் அறியாமலேயே இந்த புரோகிராம், கம்ப்யூட்டரின் பின்னணியில்
இயங்கும். நீங்கள் எவ்வளவு டேட்டா அப்லோட் மற்றும் டவுண்லோட் செய்கிறீர்கள்
என்ற கணக்கை எடுத்துக் கொண்டிருக்கும்.
பிராட்பேண்ட் பயன்படுத்தும் அனை வரும் கட்டாயம் இன்ஸ்டால் செய்திட வேண்டிய புரோகிராம் இது.
Comments