பைல் சுருக்கத்திற்கான தொழில் நுட்பம்

கம்ப்யூட்டரில் பைல்களைக் கையாள்கையில், அவற்றைச் சுருக்குகிறோம். இதனால் அவற்றின் தன்மை கெடாமல், டிஸ்க்கில் அது பதிவதற்கான இடம் குறைவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இதனால் பைல் ஒன்றை மின்னஞ்சலில் அனுப்புவது, பிளாஷ் ட்ரைவில் பதிவதும் எளிதாகிறது. பைல்களைச் சுருக்கி அமைப்பதில் பலவகைத் தொழில் நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன.

இவற்றில் பயனாளர்களிடையே பிரபலமாக இருப்பவை விண்ஸிப், விண் ஆர்.ஏ.ஆர் மற்றும் 7-ஸிப் (WinZip, WinRAR, 7Zip) ஆகியவைதான். இவற்றில் எது, எந்த வகையில் சிறப்பானது எனப் பார்க்கலாம்.

ஒரே பைலை, இந்த மூன்று தொழில் நுட்பத்திலும் பயன்படுத்திச் சுருக்கிப் பார்த்தால், இவற்றின் செயல் வேறுபாடு தெரியும். அப்படிப் பார்க்கும் போது, விண்ஸிப் மிக வேகமாக பைல்களைச் சுருக்குகிறது. இந்த ஒப்பிடும் பணியில் அடுத்து வந்த தொழில் நுட்பத்தினைக் காட்டிலும் இரு மடங்கு குறைவான நேரத்தில் விண்ஸிப் பைலைச் சுருக்குகிறது.

மீடியா பைல் ஒன்றை, விண்ஸிப் 86 நொடிகளில் சுருக்கியது. அதே பைலைச் சுருக்கித் தர விண் ஆர்.ஏ.ஆர் தொழில் நுட்பம் 181 விநாடிகள் எடுத்துக் கொண்டது. 7 ஸிப் 427 நொடிகள் பயன்படுத்தியது. இதே பைலை விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் தரப்பட்டுள்ள ஸிப் வசதியைப் பயன்படுத்திய போது 152 விநாடிகள் ஆனது.

இதில் விண்டோஸ் சுருக்கும் வசதியான ஸிப் சுருக்கம், இரண்டாவது இடத்தில் இருந்தாலும், சில சிறப்பு குறியீடுகள் உள்ள பைலைச் சுருக்க இது மறுக்கிறது. எனவே அத்தகைய பைல்களைக் கொண்டு இதன் செயல்பாட்டினை ஒப்பிட இயலவில்லை.

சுருக்கப்படும் பைல்களின் அளவினை ஒப்பிட்டுப் பார்க்கையில், WinZip, WinRAR, ஆகியவற்றைக் காட்டிலும் 7Zip மிகக் குறைந்த அளவில் பைல்களைச் சுருக்குகிறது. ஆனால், அதிக நேரம் எடுப்பதால், WinRAR தொழில் நுட்பத்தையே பலரும் நாடுகின்றனர்.

மேலே கூறப்பட்ட நான்கு தொழில் நுட்பங்களும், பைல்களைச் சிறப்பாக ஒரே மாதிரியாகச் சுருக்கித் தந்தாலும், சுருக்குவதற்கான வழிமுறைகளைத் தரும் இன்டர்பேஸ் அமைத்திருப்பதில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இந்த வகையில் விண்டோஸ் இயக்கத்துடன் கிடைக்கும் சுருக்கும் வழி, மிக எளிதான வகையில் இன்டர்பேஸ் தருகிறது. பைல் அல்லது பைல்களைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், நமக்குத் தேவையானதைக் கிளிக் செய்தால், சுருக்கப்பட்ட பைல் விரைவாகக் கிடைக்கிறது.

அடுத்ததாக, விண்ஸிப். இது ஒரு தொகுக்கப்பட்டு இணைக்கப்பட்ட புரோகிராம் போல நம்மைச் சந்திக்கிறது. பெயின்ட் மற்றும் வேர்ட் புரோகிராம் போல இன்டர்பேஸ் தருகிறது. ஆனால், முழுமையான புரோகிராம் பெற கட்டணம் செலுத்த வேண்டும் (29.95 டாலர்).

அடுத்ததாக விண் ஆர்.ஏ.ஆர் மற்றும் 7 ஸிப். இவை இரண்டின் இன்டர்பேஸ்களும் சிறப்பாக பெரிய ஐகான்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. இன்டர்பேஸ் என்ற வகையில் விண்ஸிப் அதிக சிறப்புகளைக் கொண்டுள்ளது. அதிக அளவில், தொடர் நிகழ்வாக பைல்களை ஸிப் செய்பவர்களுக்கு, இதன் இன்டர்பேஸ் எளிமையான வழியைக் கொண்டுள்ளது.

பைல்களைச் சுருக்கி அமைப்பதில், பயனாளர்கள் இன்டர்பேஸ் அம்சத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் தருவதில்லை. இவை அனைத்துமே, ரைட் கிளிக் செய்து சுருக்க வழி தருகின்றன.

டபுள் கிளிக் செய்து விரித்துப் பெற வசதி தருகின்றன. இருப்பினும் சுருக்குதல் மற்றும் விரித்தல் என மொத்தமாகப் பார்க்கையில் விண்ஸிப் முதல் இடம் பெறுகிறது. மிகக் குறைந்த அளவில் பைல்களைச் சுருக்க வேண்டும் எனத் திட்டமிடுபவர்கள் 7 ஸிப் பயன்படுத்தலாம்.

அதே போல விண் ஆர்.ஏ.ஆர். இந்த தொழில் நுட்பம் சற்று கூடுதலான நேரத்தை எடுத்துக் கொண்டாலும், சுருக்கப்படும் பைல் அளவு மற்றவற்றைக் காட்டிலும் அதிகமாக இருந்தாலும், பலர் இதன் எளிமையான செயல்பாட்டினால், தொடர்ந்து இதனையே பயன்படுத்தி வருகின்றனர். எனவே நீங்களும் இதனை விரும்பிப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், இதனையே தொடரலாம்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க