Install செய்த மென்பொருளை Uninstall செய்யாமல் வேறு டிரைவ்க்கு Move செய்வது எப்படி?

கணினியில் நிறைய மென்பொருள்களை பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை, C Drive - இல் மிக அதிகமான Software -களை இன்ஸ்டால் செய்துவிட்டு அது Full ஆனவுடன் என்ன செய்வது என்று திகைப்பது. இதனால் கணினி மெதுவாக இயங்க தொடங்கும். குறிப்பிட்ட Software - ஐ uninstall செய்துவிட்டு மீண்டும் வேறு டிரைவில் install செய்வார்கள் பலர். அப்படி இல்லாமல் C Drive இல் இருந்து நேரடியாக வேறு Drive க்கு மாற்ற ஒரு வசதி இருந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வசதியை பற்றி பார்ப்போம்.
இதை Windows Vista மற்றும் Windows 7 பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
முதலில் SymMover என்ற இலவச மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அதை இன்ஸ்டால் செய்த உடன், Start Menu- வில் சென்று ஓபன் செய்யவும். இப்போது கீழே உள்ளவாறு வரும்.
முதலில் SymMover என்ற இலவச மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அதை இன்ஸ்டால் செய்த உடன், Start Menu- வில் சென்று ஓபன் செய்யவும். இப்போது கீழே உள்ளவாறு வரும்.

அதில் + என்பதன் மீது கிளிக் செய்யவும். இப்போது உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்த மென்பொருட்கள் அனைத்தும் வரும்.

எத்தனை
மென்பொருட்களை Move செய்ய வேண்டுமோ அத்தனையையும் தெரிவு செய்யவும்.
ஒவ்வொன்றாகத்தான் செய்ய முடியும். இப்போது கீழே படத்தில் உள்ள பச்சை நிற
அம்புக் குறி போன்றதில் கிளிக் செய்ய வேண்டும்.

மென்பொருளின் சைஸ் பொறுத்து சில நிமிடங்களில் Move ஆகி விடும்.

இது
உங்கள் D டிரைவில் SymMover என்ற Folder-இல் இருக்கும். Destination
Folder மாற்ற விரும்பினால் கடைசியில் இருந்து இரண்டாவதாக உள்ள Settings
Icon மீது கிளிக் செய்ய வேண்டும். அதில் Add என்பதை கிளிக் செய்து புதிய
Destination தெரிவு செய்யலாம்.

Comments