வர இருக்கும் ஸ்மார்ட் போன்கள்


Latest Smartphones 2012
2012 ஆம் ஆண்டு ஸ்மார்ட் போன்களின் கொண்டாட்ட ஆண்டு என்றே சொல்லலாம். முன்பிருந்த நிலை இல்லாமல், குறைந்த விலையிலும், அதிக எண்ணிக்கையில் மாடல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிறுவனங்கள் அடுத்தடுத்து ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு, தங்கள் வாடிக்கையாளர்களைத் தங்கள் வட்டத்திலேயே வைத்துக் கொள்வது பழக்கமாகி வருகிறது. அந்த வகையில் இன்னும் சில ஸ்மார்ட்போன்கள் வர இருக்கின்றன. ஸ்மார்ட் போன் வாங்கத் திட்டமிடுபவர்கள் இவற்றிற்காகக் காத்திருக்கலாம்.

1. ஆப்பிள் ஐபோன் 5: வர இருக்கும் இந்த மாடல் குறித்து அதிகார பூர்வமாகத் தகவல்கள் பெறப்படவில்லை என்றாலும், இந்த ஸ்மார்ட் போனில் இவை எல்லாம் இருக்கும் எனப் பல அமைப்புகள் தெரிவித்துள்ளன. வழக்கமாக ஆப்பிள் நிறுவனப் போன்களில் உள்ள 3.5 அங்குல திரை இல்லாமல், இதில் பெரிய அளவில் (4 அங்குலம்) திரை இருக்கலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு LTE, 3G, EDGE/GPRS, NFC மற்றும் WiFi ஆகிய தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கும். 8 எம்பி திறனுடன் பி.எஸ்.ஐ. சென்சார், எல்.இ.டி. பிளாஷ் கொண்ட கேமராவுடன், இரண்டாவதாக ஒரு கேமராவும் இருக்கலாம். போன் நினைவகம் 16/32/64 ஜிபி என்ற மூன்று அளவுகளில் கிடைக்கும்.

2. சோனி எக்ஸ்பீரியா மின்ட் எல்.டி.30: இது எக்ஸ்பீரியா ஜி.எக்ஸ். எனவும் பெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தரப்பட இருக்கும் 13 எம்பி திறன் கொண்ட கேமரா தன் இதில் சூப்பர் ஸ்டாராக இருக்கும். 4.6 அங்குல திரை, நெட்வொர்க் இணைப்பிற்கு 3G, EDGE/GPRS மற்றும் WiFi தொழில் நுட்பங்கள், கூகுள் மேப்புடன் பயன்படுத்த அஎககு சப்போர்ட் கொண்ட ஜி.பி.எஸ்., A2DP இணைந்த புளுடூத், 13 எம்.பி. திறன் கொண்ட கேமரா, முன்புறம் ஒரு கேமரா, எப்.எம். ரேடியோ, 16 அல்லது 32 ஜிபி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரி அதிகப்படுத்து வசதி ஆகியவை கிடைக்கும். தடிமன் மற்றும் எடை குறைவாகவும் வழக்கமான ஸ்மார்ட் போன் அம்சங்களும் கொண்டதாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. சாம்சங் கேலக்ஸி நோட் 2: ஏறத்தாழ டேப்ளட் பிசி அளவில் இந்த ஸ்மார்ட் போன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரை 5.5 அங்குல அகலத்தில் வடிவமைக்கப்படும். இதுவரை அதிக பட்சமாக உள்ள காட்சி தெளிவு HD720p. இதனைத் தாண்டி, இந்த போனில் 1680 x 1050 பிக்ஸெல் ரெசல்யூசனுடன் திரை கிடைக்க இருக்கிறது. இதனால் திறன் 360ppi இருக்கப் போவதால், டெக்ஸ்ட் மற்றும் காட்சிகள் மிகத் துல்லிதமாக இருக்கப் போகின்றன. 8 அல்லது 12 எம்பி திறனில் கேமரா இருக்கும். இது ஆட்டோ போகஸ் மற்றும் டச் போகஸ் வசதி தரப்படும். எச்.டி. வீடியோ இயக்கம் பதிவு செய்திடும் வசதியுடன் கிடைக்கும். வீடியோ அழைப்பு மற்றும் சேட் வசதிக்கென முன்புறம் ஒரு கேமரா நிச்சயம் இருக்கும். 16/32 அல்லது 64 ஜிபி உள் நினைவகத்துடன் மாடல்கள் கிடைக்கும்.

மேற்கண்டவற்றுடன் மோட்டாரோலா மற்றும் அசூஸ் நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஸ்மார்ட் போன் வாங்கத் திட்டமிடுபவர்கள், கூடுதல் வசதிகளை எதிர்பார்த்தால், சற்றுக் காத்திருந்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள போன்கள் வந்த பின்னர் வாங்கலாம்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க