உங்கள் மொபைல் போன்களை பராமரிக்க முத்தான 10 டிப்ஸ்கள்



எவ்வளவு தான் விலையுயர்ந்த மொபைல் போன்கள் என்றாலும் அதனை சரியாக பராமரிக்கவில்லை என்றால் அடிக்கடி சர்வீஸ் செலவு வைத்துவிடும். அதனால் உங்கள் மொபைல் போன்களை பராமரிக்க முத்தான 10 டிப்ஸ்களை வழங்குகிறோம்.

1 .  மொபைல் போனை எப்போது வலது காதில் வைத்தே பேசுங்கள். இடது காதில் வைத்து பேசினால் நமது மூளை கதிர்வீச்சு பாதிப்படையலாம். 

2 . அடிக்கடி சார்ஜ் செய்யாதீர்கள் அது பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும்.

3 . சார்ஜ் போட்டுக்கொண்டே  பேசாதீர்கள். இதனால் மின் கசிவு ஏற்ப்பட வாய்ப்புள்ளது.

4 . டிஸ்ப்ளேயை பாதுகாக்க ஸ்டிக்கர் ஒட்டி வையுங்கள். இதன் மூலம் தூசியிலிருந்து பாதுகாக்கலாம்.

5 . தரமான பவுச்சுகளை உபயோகியுங்கள். இதனால் போன் கீழே விழுந்தாலும் பாதிப்படையாது.    

6 . உங்கள் மொபைல் போனில் " மொபைல் ட்ரக்கர் "  வசதி இருந்தால் பதிந்து வைத்து விடுங்கள்.

7 .  பேட்டரியையோ, சிம் கார்டையோ எடுக்கும்போது சுவிட்ச் ஆப் செய்துவிட்டு பிறகு எடுங்கள்.

8 . ப்ளூடூத் (BlueTooth) வசதி இருந்தால் அதை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள். இல்லையெனில் சார்ஜ் சீக்கிரம் காலியாகிவிடும்.

9  . செல் போன் தண்ணீரில் விழுந்து விட்டால் உடனே ஆன் செய்யக்கூடாது. பேட்டரி, சிம் கார்டுகளை எடுத்த பிறகே ஆன் செய்ய வேண்டும். 

10 . பிறகு மெல்லிய காட்டன் துணியைக் கொண்டு நன்கு துடைக்கவும். ஈரம் நன்கு காய்ந்தது என்று தெரிந்தவுடன் பேட்டரியையும், சிம் கார்டையும் பொருத்தவும். 

அதன் பிறகும் ஆன் ஆகவில்லை என்றால் கடைக்காரரிடம் கொடுத்து சர்வீஸ் செய்யவும்

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க