ஆடியோ, வீடியோ கோப்புகளை பார்மேட் மாற்ற மென்பொருள்
வீடியோ கோப்புகளையும்(Video Files), ஆடியோ கோப்புகளையும்(Audio files) பார்மேட்(Format) மாற்ற ஒரே மென்பொருள்..
Video Files, Audio Files ஆகிய இரண்டு கோப்புகளையும் ஒரு மென்பொருளைப்
பயன்படுத்தி எளிதாக வேண்டிய பார்மட்டிற்கு(கோப்பு
முறைக்கு)மாற்றிக்கொள்ளலாம்.
முதலில் இந்த இணைப்பில் சென்று இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்..
தரவிறக்கச்சுட்டி
மென்பொருளைப் பயன்படுத்தும் முறை:
- மென்பொருளைத் தரவிறக்கி நிறுவியவுடன்(Download and Install), மென்பொருளைத் திறந்துகொள்ளுங்கள். (Open software)
- இதில் நீங்கள் எந்த வகையான கோப்பை பார்மட் மாற்றுகிறீர்களோ அந்த வீடியோ அல்லது ஆடியோ கோப்பா என்பதை தீர்மானித்து, அதற்குரிய Option கிளிக் செய்யுங்கள்.
- இந்த ஆப்சன் Target Board க்கு மேலே இருக்கும்.
- பிறகு இதிலிலுள்ள + குறியைக் கிளிக் செய்து தேவையான கோப்பைத் தேர்வு செய்யுங்கள். (Choose a file to convert. )
- பிறகு அதில் மாற்றக்கூடிய பார்மட்கள் இருக்கும். அதில் உங்களுக்கு எந்த பார்மட்டில் கோப்பு மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுங்கள்.
- பிறகு மாற்றிய கோப்பு எங்கு சேமிக்கப்பட வேண்டும் என்பதை தேர்ந்தெடுங்கள்.(Choose File Format to Convert)
- இறுதியில் Convert என்பதைக் கிளிக் செய்து உங்களுக்குத் தேவையான பார்மட்டிற்கு மாற்றிவிடுங்கள்.(Click on Convert button)
- இப்போது நீங்கள் எங்கு சேமிக்கப்பட வேண்டும் (Destination folder) என தேர்வு செய்த இடத்தில் மாற்றப்பட்ட கோப்பு இருக்கும்.
மிக எளிதான வழிமுறை என்பதால் இப்பதிவிற்கான படங்கள் இணைக்கவில்லை. ஏதேனும்
சந்தேகம் எனில் உடன் தொடர்புகொள்ளுங்கள். நன்றி நண்பர்களே..!
Comments