பல வியூக்கள் பவர்பாய்ண்ட்டில்..
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் சாப்வேர் நாம் பணியாற்ற பல்வேறு தோற்றங் களில் ஸ்லைடுகளைத் தருகிறது. அவை குறித்து இங்கே காணலாம்.
இந்த
வியூக்களைக் காண View மெனுவில் கிளிக் செய்து கிடைக்கும் வியூ பட்டியலில்
உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
Normal: இந்த வியூவைத் தேர்ந்தெடுத்தால் ஸ்லைட், அதன் அவுட்லைன் மற்றும் நோட்ஸ் டெக்ஸ்ட் பாக்ஸ் காட்டப்படும்.
Slide Sorter:
அனைத்து ஸ்லைட்களின் சிறிய தோற்றத்தினை இந்த வியூவில் பார்க்கலாம். அதிக
ஸ்லைட்கள் உள்ள பிரசன்டேஷன் ÷ஷாவில் இது மிக உதவியாய் இருக்கும். குறிப்பாக
ஒரு குறிப்பிட்ட ஸ்லைடைத் தேடிப் பெறுவதில் இந்த வியூ நம் பணியை
எளிதாக்கும்.
Notes Page:
அப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்லைடின் தோற்றத்தினை
சிறிதாகவும் அதற்கான நோட்ஸ் பேஜினைப் பெரிதாகவும் காட்டும். இது ஏறத்தாழ
நார்மல் வியூ போலத்தான் செயல்படும். ஆனால் ÷ஷா அவுட்லைன் கிடைக்காது.
Slide Show: வியூ மெனுவில் இந்த மெனுவினைத் தேர்ந்தெடுத்தால் அதன் மூலம் ஸ்லைட் ÷ஷாவினை இயக்கலாம்.
Black and White:
அப்போதைய ஸ்லைடின் கருப்பு வெள்ளைத் தோற்றத்தை பெரிய அளவிலும் வண்ணத்
தோற்றத்தை சிறிய விண்டோவிலும் இந்த வியூவில் பார்க்கலாம். பிரசன்டேஷனின்
அனைத்து வண்ணங்களையும் நாம் பார்க்க வேண்டாம் என்று எண்ணுகையில் இந்த வியூ
உதவும்.
(குறிப்பு: இவற்றில் சில வியூக்கள் பவர்பாய்ண்ட் 98ல் கிடைக்காது)
Comments