இன்டெலின் (Intel) பிறந்தநாள் மற்றும் வரலாறு...


intel-office
1968 இல் நேற்றைய நாளில்(18/07/1968), இன்டெல் (Intel) நிறுவனம் சாண்டா கிளாராவில் (Santa Clara)  நிறுவப்பட்டது. இன்று இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய குறைக்கடத்தி சிப் (semiconductor chip)  உற்பத்தியாளராக அபரித வளர்ச்சி கண்டுள்ளது.
உலகம் முழுவதும் 80,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள்  மற்றும் 2011 இல் $ 54 பில்லியன் நிகர வருவாயுடைய மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. இன்டெல்  பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக.

இன்டெலுக்கு அதன் பெயர் கிடைத்தது எப்படி?
இன்டெல் (Intel) நிறுவனம், கோர்டன் இ மூர் (Gordon E. Moore) மற்றும் ராபர்ட் என் நாய்ஸ் (Robert N. Noyce)  என்ற இரு முன்னாள் ஃபேர் சைல்ட் (Fairchild) நிறுவன ஊழியர்களால் 1968 இல் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில்  இந்நிறுவனம் “NM எலெக்ட்ரானிக்ஸ்” (N M Electronics) என்றே அழைக்கப்பட்டது. மூர் நாய்ஸ்  எலெக்ட்ரானிக்ஸ் (Moore Noyce Electronics) என்பதே அதன் விரிவாக்கமாகும். இன்டிகிரேடட் (ஒருங்கிணைந்த)  எலெக்ட்ரானிக்ஸ் (Integrated Electronics) என்ற பெயரே விரும்பப்பட்டது. ஆனால் அது ஏற்கனவே இன்னொரு  நிறுவனத்தால் எடுக்கப்பட்டுவிட்டது. அதனால் ஒவ்வொரு வார்த்தையின் முதல் ஓலிக்குறிப்புக்கள் சேர்த்து இன்டெல் (Int + El) பெயரிடப்பட்டது. இதன் நிறுவனர் இருவரும் “இன்டெல்” முத்திரையை இன்டெல்கோ ஹோட்டலிலிருந்து (Intelco hotel ) வெறும் $ 15,000 க்கு வாங்கினர்.

இன்டெல் தயாரித்த கைக்கடிகாரம் 
1972 இல் டிஜிட்டல் கைக்கடிகார உற்பத்தியாளரான மைக்ரோமா நிறுவனத்தை வாங்கியதன் மூலம் (Microma) ஆபரண சந்தையில் இன்டெல் கால் பதித்தது. அந்த நேரத்தில், டிஜிட்டல் கைக்கடிகாரங்கள் தீவிர உயர் தொழில்நுட்பமாகக் கருதப்பட்டன. இந்த உயர் தொழில்நுட்ப நேரங்காட்டிக்கு எதிர்பார்க்கப்பட்ட நுகர்வோர் சந்தை 200 மில்லியன் யூனிட்கள் ஆகும்.
 
 http://www.iniyathu.com/wp-content/uploads/2012/07/microma-watch.jpg
 
எனினும், 1978 இல் போட்டி காரணமாக கைக்கடிகாரத்தின் விலை $10 குறைந்த போது மைக்ரோமா பிராண்ட் (Microma brand) மற்றும் சொத்துக்கள் விற்பனை செய்ய இன்டெல் முடிவு செய்தது. கோர்டன் மூர் தற்போதும் மைக்ரோமா டிஜிட்டல் கைக்கடிகாரத்தையே அணிகிறார்.

இன்டெலின் BunnyPeople 
 
1997 இல் இன்டெல் வேடிக்கையான உருவக விளம்பரமொன்றைத் தயாரித்தது. அதில் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வண்ணமயமான ஆடைகளில் இன்டெல் தொழில்நுட்ப வல்லுனர்கள் நடனமாடுவதாக காட்டப்பட்டது. இதற்கு BunnyPeople என புனைப்பெயர் (வர்த்தக முத்திரையிடப்பட்டு) வழங்கப்பட்டது. இந்தப் பாத்திரங்கள் அன்றிலிருந்து பென்டியம் நுண்செயலியின் தொடர் விளம்பர பிரச்சாரங்களிலும் (Pentium microprocessor series) பங்கேற்றுள்ளனர்.

எனினும் இந்த BunnyPeople இன் தோற்றம் 1973 இலேயே தோன்றியுள்ளது புலனாகின்றது. அன்றைய  இன்டெலின் துப்பரவாளரின் ஆடையே BunnyPeople இன் ஆடைக்குரிய மூலமாகும். ஒரு இன்டெல்  பணியாளர்கள் புதுமையான ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துகிறார்கள். அன்று Fab ஆய்வகங்களைப் பார்க்கச் செல்பவர்கள் Bunny ஆடையை அணிந்தார்கள். இந்த Bunny ஆடை இன்று இன்டெல் நிறுவன கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

இன்டெலின் விசேஷமான ஷாம்பெயின் பாரம்பரியம் (Customized Champagne Tradition)
நிறுவன பாரம்பரியமாக, விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஷாம்பெயின் போத்தல்கள் இன்டெல் சிறப்பு வைபவங்களில் பயன்படுகின்றன. இந்த வழக்கம் இன்டெலின் ஆரம்ப காலம் முதலே இருந்து வருகிறது. இன்டெலின் கணினி அருங்காட்சியகம் தனது சேகரிப்பில் இத்தகைய போத்தல்களையும்  கொண்டுள்ளது.

8080 இன்டெல் மைக்கிரோ ப்ராஸசர் (8080 Intel Asteroid)
பல ‘முதல்’ களை இன்டெல் அறிமுகப்படுத்தியிருந்தாலும், அவற்றில் மிகப் புதுமையான ஒன்று 1974 இல் அறிமுகமான 8080 நுண்செயலி (8080 microprocessor). முதல் 8 பிட் நுண்செயலி ( 8-bit general purpose microprocessor ). இன்று  சாண்டா கிளாராவில் (Santa Clara) அமைந்துள்ள இன்டெல் தலைமையகத்தின் தொலைபேசி எண் (408) 765-8080. இது தற்செயலாக அமைந்த ஒரு அதிசயம்.

இன்டெல் சின்னம் ( Intel Logo Evolution)
பல ஆண்டுகளாக சிறுசிறு மாற்றங்களுடன் அதன் நிறுவன முத்திரையை வைத்துள்ளது.



இதன் அசல் சின்னமாக விடுபட்ட “E” உடனான இது 37 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டு ஆப்பிள் இன்டெல் செயலிகளை (Intel processors) தமது உற்பத்திகளில் பயன்படுத்த முடிவு செய்தது. இதனை ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs), இன்டெல் சின்னம் (Intel Logo) மூலம் புத்திசாலித்தனமாக இரண்டு வார்த்தைகளில் வெளியிட்டார். “It’s true!” என்பதிலுள்ள ’e’ இன்டெல் சின்னத்திலுள்ள ’e’ போல சற்று கீழிறங்கி இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
http://www.iniyathu.com/wp-content/uploads/2012/07/intel-logo.jpg 
Intel Inside Logo

 http://www.iniyathu.com/wp-content/uploads/2012/07/intel_inside_logo.jpg 
The New Intel Logo
 

அதன் பின் “இன்டெல் இன்சைடு” (Intel Inside) வடிவமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அது தற்போதைய லோகோ உருவாகும் வரை 15 ஆண்டுகள் இருந்தது.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க