சில விஷயம் தெரிந்துகொள்ளவும்...

கண்டிப்பா இதை தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை இருந்தாலும் இது என்ன வென்று தெரிந்து கொள்ள்ளலாம்மே ஏதோ ஒரு பதிவை தேற்ற வேண்டும் என கொஞ்சம் அங்க கொஞ்சம் இங்க என்று எடுத்து போட்டு உள்ளேன். தொழில்நுட்பத்தில் சில விசயத்தினை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...


ENCRYPT :- ENCRYPT என்பதை தமிழ் மறையாக்கம் என சொல்லலாம். கம்ப்யூட்டரில் அனுப்பப்படும் டேட்டாவினை அனுப்புபவரும் பெறுபவரும் மட்டுமே ரகசியமாகக் கையாள உதவும் தொழில் நுட்பம். டெக்ஸ்ட், ஆடியோ மற்றும் வீடியோ ஆக எதுவானாலும் இந்த முறையில் மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பின்னர் மாற்றியவர் துணையின்றி யாரும் படித்தறிய முடியாது.இந்த என்கிரிப்ட் ஆனது ராணுவத்தின் ரகசிய தகவல்,மற்றும் அரசாங்கம் முக்கியமான தகவல்களை பாதுகாப்பை பகிர்ந்து கொள்ள பயன்படுகிறது.கணக்கு எடுப்பின் படி இந்த Encrypt வசதியை 71 சதவித நிறுவனங்கள் பயன்படுத்துகின்றனர்...நம்முடைய தகவல்கள் மாற்றபடும் பொது அதை பாதுகாக்க இந்த ENCRYPT பயன்படுககின்றனர்...இதை பற்றி நிறைய சொல்லலாம் இருந்தாலும் எனக்கு தெரிந்தது(கிடைத்தது) இவ்வளவு தான்...

SI UNIT:- NUMBERS குறிப்பிடும் போது அதை ஓன்று பத்து நூறு ஆயிரம் லட்சம் கோடி மில்லியன் பில்லியன் என குறிப்பிடுவோம் அதற்கு மேல் எப்படி எண்களை அழைப்பது தமிழ் இது வரை மட்டுமே உள்ளது அதற்கு மேல் தான் SI UNIT ல் உள்ள அலகு(INTERNATIONAL SYSTEM OF UNIT) முறைகள் பயன்படுகிறது...குவாட்ட்ரில்லியன் (1 000 000 000 000 000),குவின்ட்டிலியன்(1 000 000 000 000 000 000),இது தாங்க எந்திரன் சூப்பர் ஸ்டார் மெமரி 1 ZETTA BYTE என சொல்லுவாரே அது தாங்க செக்ஸ்டில்லியன்(1 000 000 000 000 000 000 000),செப்டில்லியன்(1 000 000 000 000 000 000 000 000)

LINUX:- ஆமாம் லினக்ஸ் பத்தி எங்களுக்கு ஒன்னும் தெரியாது இவர் சொல்ல வந்துட்டார்...இது ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம். பெர்சனல் கம்ப்யூட்டர் உட்பட அனைத்து வகை கம்ப்யூட்டர்களிலும் இது இயங்கும். இதனை யாரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைக்கலாம். அதற்கான சோர்ஸ் கோட் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.இது மற்ற OPERATING SYSTEMல் இருந்து முற்றிலும் வேறு பட்டது...WINDOWS போல பணம் கட்டி பெற வேண்டியது இல்லை...லினக்ஸ் ஆனது செயல் படும் வேகம் மிகவும் அதிகம்.MALVERE(மால்வேர்),VIRUS(வைரஸ்) அனுப்புவர்கள் விண்டோஸ் நோக்கி தான் அனுப்புவார்கள் லினக்ஸ் இந்த விசயத்தில் ரொம்ப பாதுகாப்பு.இன்னும் நிறைய கூறலாம் ஆனால் முடியலை இப்படி இலவசம்மாய் கொடுத்தே எவனும் பயன்படுத்த மாட்டேன் என்கிறான்(அய்யோ நிறைய பேர் லினக்ஸ்,உபுண்டு காதலர்கள் உள்ளார்கள்) பணம் கட்டி விண்டோஸ் பயன்படுத்ரோம்...நான் எல்லாம் சிஸ்டம் வாங்கிய போது மட்டும் தான் அதன் பின்னர் நீங்க எப்படி USE செய்கின்றீர்களோ அப்படியே...

GSM (GLOBAL SYSTEM FOR MOBILE COMMUNICATION ):- உலகிலேயே அதிக அளவில் பயன்படுத்தும் மொபைல் சர்வீஸ் இது மூன்று பில்லியன்கும் மேலானோர் இந்த சர்வீஸ் பயன்படுத்துகின்றனர்...இந்த தொழில்நுட்பத்தின் முலம் மொபைல் போன்கள் தங்களுக்கு மொபைல் சர்வீஸ் தரும் சர்வீஸ் நிறுவனத்துடன் இணைத்து கொள்ளலாம் அல்லது உலகின் எந்த ஒரு சர்வீஸ் புரைவைடர் உடன் இணைத்து கொள்ளலாம்.

CDMA(CODE DIVISION MULTIPLE ACCESS):- இதுவும் ஒரு மொபைல் இணைப்பு தொழில்நுட்பம் ஆகும்.GSM அதிகமாய் பயன்படுத்தபட்டாலும் CDMA தான் மிக சிறந்த தொழில்நுட்பம் ஆகும்.CDMA வசதி இரண்டாம் உலக போரின் போது முதன் முதலாய் பயன்படுத்த பட்டது.தற்போது அனைத்து நாடுகளிலும் இந்த சர்வீஸ் உள்ளது.ஆரம்பத்தில் CDMA மொபைல் போனில் SIM CARD போனில்லேயே அமைத்து தரபட்டது.இப்ப தனியாய் கிடைக்கிறது...


எம்.டி.ஏ. (Mail Transfer Agent):- இதைச் சுருக்கமாக MTA என அழைக்கின்றனர். நாம் நம்முடைய இமெயில் கடிதத்தைத் தயார் செய்து அதனை அனுப்புவதற்கு Send பட்டனை அழுத்தியவுடன் கடிதத்தை இதுதான் தன் வசம் எடுத்துக் கொள்கிறது. MTA என்பது ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம் அல்லது சாப்ட்வேர் ஏஜண்ட். உங்களுடைய கம்ப்யூட்டரிலிருந்து இமெயில் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படுகையில் பல கம்ப்யூட்டர்களை, சர்வர்களை அது தங்கி தாண்டிச் செல்கிறது. இந்த பயணத்தை இந்த MTAதான் கவனித்துக் கொள்கிறது. இது Mail Submission Agent மற்றும் Mail User Agent என்பவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.

ஒவ்வொரு நாளும் நீங்கள் தயார் செய்திடும் இமெயில்களை வகைப்படுத்தி அனுப்புவது இதுதான். இமெயில்கள் வகைப்படுத்தப் பட்டவுடன் அவற்றிற்கு ஒரு ஹெடர் கொடுத்து Mail Delivery Agent (MDA)க்கு அனுப்புகிறது. இந்த இமெயில்கள் அனைத்தும் சரியாக உரிய கம்ப்யூட்டருக்குச் செல்கின்றனவா என்பதனை இந்த Mail Delivery Agentதான் பார்த்துக்
கொள்கிறது

Comments

Rubina said…
அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று தகவல்களை சேர்த்திருந்தாலும், தந்திருக்கும் தகவல்கள் அதனையும் தங்கம்.

அடிப்படை தகவல்கள் ஆனாலும் உருப்படியான தகவல்கள்.

என்க்ரிப்டை பற்றி தெரிந்தால் இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள்

நன்றி.
GG said…
க்ரிப்டோகிரப்ஹி பற்றிய தெளிவான ஒரு தகவலை விரைவில் பதிவில் பார்க்கலாம் நண்பரே....!

நீங்கள் உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.....!

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க