Desktop-இல் Right Click செய்தால் Safely Remove Hardware வசதி


இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் உபயோகபடுத்தாதவர்கள் இருப்பது கடினம் என்றாகிவிட்டது, கல்லூரியிலோ ,  கம்ப்யூட்டர் சென்டரிலோ , அலுவலகத்திலோ நாம் கணினியை பயன்படுத்துகிறோம் , அதே சமயம் நம்மில் பலர் பென்டிரைவ் உபயோகித்துதான் கோப்புகளை எடுத்து செல்கிறோம் , ஆனால் பென்டிரைவை கணினியை விட்டு நீக்கும் போது "Safely Remove Hardware" என்பதை கிளிக் செய்து விட்டு தான் நீக்க வேண்டும் , ஆனால் நாம் சில முறை இதை மறந்து விடுவோம் இதனால்  பென்டிரைவ் பழுதடைவதற்கான வாய்ப்பு அதிகம். அதுமட்டுமில்லாமல் முக்கியமான சில கோப்புகளை இழக்கவும் வாய்ப்பு உள்ளது .

இதற்கான காரணம் என்று பார்த்தால் , அந்த "Safely Remove Hardware" Option ஆனது டாஸ்க் பாரின் வலது மூலையில் ஒளிந்திருக்கும் எனவே நாம் அதை கவனிப்பதில்லை .

அது உங்கள் Desktop-இல் நீங்கள் ரைட் கிளிக் செய்யும் போது வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா, நீங்களும் பாதுகாப்பாக உங்களது  பென் டிரைவை கணினியை விட்டு நீக்கலாம். இது அதாவது கீழே உள்ளது போல

 

விண்டோஸ்க்கானது என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்

எப்படி இதை செய்வது

Win Button +R கொடுத்து வரும் Run விண்டோவில் "regedit" என்பதை கொடுத்து ok கொடுக்கவும்
 

பின்பு அதில் உள்ள HKEY_CLASSES_ROOT என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து பின் அதில் வரும் DesktopBackground Option - இல் Shell என்பதை கிளிக் செய்யவும், (அதாவது   HKEY_CLASSES_ROOT\DesktopBackground\Shell\ ) 

உங்களுக்கு இப்போது கீழ்கண்ட திரை கிடைக்கும் 


இப்பொழுது Shell ரைட் கிளிக் செய்யுங்கள் , அதில் New--> Key என்பதை கொடுத்து Safely Remove Hardware என்ற தலைப்பில் ஒரு புதிய கீ உருவாக்கி கொள்ளுங்கள் .

 

தற்பொழுது Safely Remove Hardware -இல் Right Click செய்தால் புதிதாக ஒரு string value உருவாக்கி கொள்ள Option வரும். அதற்கு தலைப்பு icon என கொடுங்கள் .


icon டபிள் கிளிக் செய்யுங்கள் அதற்கு Value Data: hotplug.dll,-100 என்று கொடுங்கள் .
 


தற்பொழுது Safely Remove Hardware -இல் மறுபடி Right Click செய்து புதிதாக ஒரு Key உருவாக்கி கொள்ளுங்கள்அதற்கு தலைப்பு command என கொடுங்கள்
 


அதன் உள்ளே வால்யு டாட்டா ஒன்று default என்ற பெயரில் இருக்கும், இதை டபுள் கிளிக் செய்து நீங்கள் அதற்கு இந்த Value கொடுக்கவேண்டும் C:\\Windows\\System32\\control.exe hotplug.dll


அட போங்கப்பா ரொம்ப நேரமா எவ்ளோ செட்டிங்க்ஸ் Change பண்ண சொல்றனு நினைக்கிறீங்களா ? டோன்ட் வொர்ரி இப்ப டெஸ்க்டாப் போயிடு ஒரு வாட்டி செக் பண்ணி பாருங்க 



இப்படி வந்துருச்சா! வாழ்த்துக்கள் 

நீங்கள் வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள்!!

ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேட்கவும்.

Comments

Hello,
I got the shortcut, but when I click on that it gives an error alert that says "The file does not have a program associated with it for performing this action...."

What could be missing?

Thanks,
Manick

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க