நிலவைத் தொடும் பில்கேட்ஸ் சொத்து மதிப்பு

னைத்து உறவுகளுக்கும் வணக்கம். உலகத்தில் தினமும் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் எத்தனை எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இவை அனைத்தையும் நம்மால் தினமும் அறிந்துகொள்ள இயலுமா என்றக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளும் நேரத்திற்குள் எத்தனையோ மில்லியன் சம்பவங்கள் நம்மை கடந்துவிடும் என்பது நம்மில் யாரும் மறக்க இயலாது ஒன்று, சரி அதற்கும் இந்த பதிவிற்கும் என்ன தொடர்பு என்று எண்ணத் தோன்றும். நாம் தினமும் நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் பற்றி அறிந்துகொள்ள இயலாவிட்டாலும் உலகத்தில் இதுவரை நிகழ்ந்து முடிந்த அல்லது இப்பொழுது நிகழ்ந்துகொண்டிருக்கும் அல்லது இனி நடக்கவிருக்கும் பல நிகழ்வுகளில் புதைந்து கிடக்கும் பல வினோத அரிய சுவாரசியமானத் தகவல்களைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் இந்த பதிவின் முயற்சி என்று சொல்லலாம் . சரி இனி நாம் வியப்புகளுடன் கூடிய சுவாரசியமானத் தகவல் உலகத்திற்குள் செல்லலாம் .



பொதுவாக நம்மில் பலர் தினமும் சலித்துக் கொள்வதுண்டு என்னடா இது வாழ்க்கை என்று இது ஒரு ரகம், இதற்கு முக்கியக் காரணம் பணம் என்பார்கள் . இன்னும் சில பிறந்தால் இவன் போல் பிறக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்வார்கள் இதற்கு காரணம் பணம் என்பார்கள். இப்படி பணத்திற்கு தினமும் பல முகங்களை பொறுத்து நம்மில் ஒவ்வொருவரும் ஒரு கோணத்தில் வாழ்க்கையை நகர்த்தி வருகிறோம் . அப்படிப்பட்ட இந்த பணம் அதிகம் இருக்கும் உலகத்தின் தலை சிறந்த சாதனையாளரைப் பற்றிய பதிவுதான் இது என்று சொல்லலாம் . இந்த மனிதரைப் பற்றி தெரியாதவர்கள் இன்று மிகவும் குறைவு என்று சொல்லலாம் இவரின் முயற்சி இல்லை என்றால் இன்று உலகமே ஒரு வேலை செயலிழந்து போய் இருக்கும். ஆம் நண்பர்களே..! அவர் வேறு யாரும் இல்லை உலகத்தின் உயர்ந்த பணக்காரகளில் பல முறை முதல் இடம் பிடித்து உலகையே இன்று தன்பக்கம் திரும்ப செய்த பில்கேட்ஸ் (Bill Gates microsoft) தான் அவர் . இவரைப் பற்றி சொல்லத் தொடங்கினால் இவரின் சொத்தின் மதிப்பை விட நீளமாக செல்லும் இந்த தகவல்.

ரி இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இன்று நான் வைத்திருக்கும் தலைப்பிற்கு வருவோம். பலர் எல்லோரும் ஆர்வத்துடன் வந்து படிக்க வேண்டும் என்று பதிவிற்கு பொருத்தம் இல்லாத தலைப்புகளை பொருத்தி வாசகர்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றி விடுகிறார்கள். ஆனால் இந்த பதிவின் தலைப்பு அந்த வகையில் அமையாது என்பதை பதிவின் இறுதியில் உங்களை உணர வைக்கும். சரி இன்னும் பில்கேட்ஸ் பற்றிய சில வியப்பான தகவல்களைப் பார்க்கலாம் .

 நம்மில் பலர் தினமும் ஒரு ரூபாய் என்று சொல்லப்படும் நாணயத்திற்காக தினமும் எப்படியெல்லாமோ உழைத்துக் கொண்டிருக்கிறோம் . ஆனால் இந்த மனிதரின் சட்டைப் பையில் இருந்து ஒரு ரூபாய் நாணயம் ஒரு வேலை தவறி கீழே விழுந்துவிட்டால் அதை குனிந்து எடுப்பதற்குள் பல மில்லியன்கள் இவருக்கு நஷ்ட்டமாகிவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுமட்டும் இல்லைங்க இன்னும் ஒரு தகவல் இருக்கு அது இவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு எவ்வளவோ என்பதை நாம் அறிந்துகொள்வதற்காக ஒரு திறவுகோல் என்று சொல்லலாம்.

மக்கு தெரிந்த வரை உலகத்தில் அதிகமான வருமானம் ஈட்டுபவர்கள் என்றால் அதிக பட்சமாக நடிகர்களைப் பற்றிதான் தெரியும் ஆனால் இவரின் ஒரு நிமிட வருமானம் பற்றி தெரிந்தாலே நமக்கெல்லாம் தலை சுற்றல் வந்துவிடும் .

பில்கேட்ஸ் (Bill Gates ) ஒரு விநாடியில் 350 அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கிறார். அதாவது இவரது ஒரு நாளைய சம்பாத்தியம் 25 மில்லியனை தாண்டும் என்கிறார்கள். அதுமட்டும் இல்லைங்க இவரின் ஒரு வருட வருமானம் 10.8 பில்லியனுக்கும் அதிகம் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

துவரை நம்மில் இப்பொழுது சொல்லப் போகும் தகவல் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. உலகத்தில் உள்ள விளையாட்டு வீரர்களில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மைக்கேல் ஜோர்டான். இவர் சற்று அதிகம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். ஒருவேளை இவர் குடிப்பதை நிறுத்த நேர்ந்தால் இவருடைய ஆண்டு வருமானம் 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள். அப்படிப்பட்ட இந்த வீரர் ஒருவேளை பில்கேட்ஸ் இப்பொழுது இருக்கும் நிலையை எட்டவேண்டும் என்று எண்ணினால் இதே சம்பளத்தில் இன்னும் 230 வருடங்கள் உழைக்கவேண்டும் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

த்துடன் மட்டும் நின்று விடவில்லை இந்த மனிதனைப் பற்றிய பிரமிப்புகள் இன்னும் இருக்கிறது. ஒருவேளை பில்கேட்ஸ் வைத்திருக்கும் மொத்தப் பணத்தையும் ஒரு டாலர் அளவில் உருவாக்கினால் அதை வைத்து பூமியில் இருந்து நிலவு வரை பாதை அமைத்து பத்திற்கும் அதிகமானவர்கள் சுதந்திரமாக வந்து போகலாம். அப்படி இந்தப் பாதை அமைப்பது என்றால் இதற்கு 2000 ஆண்டுகளுக்கும் அதிகம் ஆகலாம் என்று ஒரு கருத்துக் கணிப்பு சொல்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள் ,

ப்பொழுது ஒவ்வொரு நாடும் தனது பொருளாதாரத்தில் தன்னை உயர்ந்த தரவரிசையில் கொண்டுவர பல விதமான முயற்சிகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு வேலை பில்கேட்ஸ் தனக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கினால் இப்பொழுது இருக்கும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் பணக்கார நாடுகளின் பட்டியலில் பத்து இடங்களுக்குள் பில்கேட்ஸ் வந்துவிடுவார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .

ப்படி இன்னும் இவரின் சொத்து மதிப்பைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் பதிவின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டு இருப்பது போல் அவரின் சொத்தின் மதிப்பை தாண்டும் என்பது உண்மை. சரி உறவுகளே முயற்சி செய்து நம்பிக்கை இழக்காமல் உழைத்தால் நாளை நாம் ஒவ்வொருவரும் ஒரு பில்கேட்ஸ் தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

Comments

Gopinath.E said…
i m also a பில்கேட்ஸ்
GG said…
Thank you for your kind valuable comment Nandhakumar...! :-)
GG said…
கவலை இல்லாதவனும் இந்த உலகத்தில் பில்கேட்ஸ் தாங்க கோபிநாத்... :-)
GG said…
Thank you for your kind valuable comment Vigneshwaran...! :-)

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க