மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் இனி இல்லை

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் தளமான ஸ்கை ட்ரைவ் இனி வேறு பெயரில் அழைக்கப்படும். இந்த பெயர் குறித்த வழக்கு ஒன்றில்,மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் நிலையைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை. 

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் நிறுவனத்தின் பெயரில் பாதியை ஸ்கை ட்ரைவ் என்பதில் வைத்துக் கொண்டுள்ளது என்றும், மைக்ரோசாப்ட் தன் காப்புரிமையில் தலையிடுவதாகவும் பிரிட்டிஷ் ஸ்கை ப்ராட்காஸ்டிங் (BSkyB) நிறுவனம் வழக்கு தொடுத்தது. 

தன் பெயரில் உள்ள Sky என்பது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கை ட்ரைவ் என்பதுடன் குழப்பத்தை ஏற்படுத்தி, மக்களால் அறியமுடியாமல் போய்விடும் என பிரிட்டிஷ் ஸ்கை ப்ராட்காஸ்டிங் நிறுவனம் வழக்கு தொடுத்தது. 

மைக்ரோசாப்ட் இந்த வழக்கை எதிர் கொண்டு,தான் வைத்துள்ள ஸ்கை ட்ரைவ் என்ற பெயர் யாருடைய உரிமையிலும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என வாதிட்டது. 

ஆனால், வழக்கில், சென்ற ஜூன் மாதம், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பினை மறுபரிசீலனை செய்திடக் கோரும் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுமா? இழப்பு என ஒன்றும் ஏற்படாது. மைக்ரோசாப்ட் தன் ஸ்கை ட்ரைவ் பெயரை மாற்றி அமைக்க வேண்டியதிருக்கும். 

வழக்கு செலவிற்காக, பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டியதிருக்கும். வழக்கு முடிவினால், முதல் முதலாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் சேவைக்கான டூல் பெயரினை மாற்ற வேண்டியதுள்ளது. என்ன பெயர் சூட்டப்படுகிறது எனப் பார்க்கலாம்

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க