இந்தியாவைத் தேடுங்கள் - கூகுள் அழைக்கிறது
கூகுள்
இந்தியா நிறுவனம் அண்மையில், ‘Start Searching India’ என்னும்
இயக்கத்தினைத் தொடங்கியுள்ளது. சென்ற ஜூலை 30 அன்று, போபால் நகரில் இது
தொடங்கி வைக்கப்பட்டது.
கூகுள்
தரும் தேடல் சாதனம் மூலம், இணையத்தின் அதிக பட்ச பலனை, இணையம்
பயன்படுத்துவோருக்குத் தருவதற்காக, இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
“இணையம் என்பது இப்போது படித்தவர்களும், பணி செய்பவர்களுக்கானது மட்டுமல்ல.
பலதரப்பட்ட நிலைகளில் வாழ்க்கையை நடத்தி வரும் மக்களின், மாறுபட்ட தேவைகளை
நிறைவேற்றி, அனைவரின் வாழ்க்கையைச் சிறப்பாக மேம்படுத்தும் ஒரு சாதனமாக
மாறி வருகிறது.
எனவே, அதற்கெனச் சிறப்பாகச் செயல்படும் வகையில் கூகுள் தன் தேடல்
சாதனத்தினைச் செம்மைப் படுத்தித் தருகிறது” என, கூகுள் இந்தியா
நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குநர் சந்தீப் மேனன்
அறிவித்துள்ளார்.
மேம்படுத்தப்பட்ட தேடல் சாதனம், தேடலுக்கான முடிவுகளைத் தருவதில் செலவிடும் நேரத்தைக் குறைத்துள்ளது.
தேடலுக்கான சரியான துல்லியமான முடிவுகளைக் காட்டுகிறது. தேடுபவரின் தேவைகளைச் சரியாகப் புரிந்து செயல்படுகிறது.
இது தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்
Comments