இன்டெக்ஸ் தரும் தொடக்க நிலை ஸ்மார்ட் போன்
இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், க்ளவ்ட் எக்ஸ் 3 (Cloud X3) என்ற பெயரில், தொடக்க நிலை ஆண்ட்ராட்ய்ட் ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
வை-பி, எப்.எம். ரேடியோ, ஜி.பி.எஸ். மற்றும் புளுடூத் உள்ளடக்கிய மீடியா டெக் நிறுவனத்தின் டூயல் கோர் ப்ராசசர் இயங்குகிறது. இந்த சிப்புடன், ஸ்மார்ட் போன் ஒன்றை முதன் முதலில் இன்டெக்ஸ் நிறுவனம் வடிவமைத்துத் தந்துள்ளது.
இந்த சிப்பில் கோர்டெக்ஸ் ஏ 7 சி.பி.யு. சப் சிஸ்டம் உள்ளது. இதனுடைய வேகம் 1.3 கிகா ஹெர்ட்ஸ். இதில் நவீன 28 என்.எம். தொழில் நுட்பம் உள்ளது. இரண்டு சிம்களை இது இயக்குகிறது.
2 மற்றும் 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்டு, பின்புறமாகவும், முன்புறமாகவும் இரண்டு கேமராக்கள் இயங்குகின்றன. ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இவற்றை இயக்குகிறது.
2G EDGE/GPRS, WiFi,Bluetooth, மற்றும் GPS ஆகியவை நெட்வொர்க் இணைப்பினை எளிதாகவும், விரைவாகவும் ஏற்படுத்தி இயக்குகின்றன. எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 256 எம்பி ராம் நினைவகம், 115 எம்பி ஸ்டோரேஜ் மெமரி, இதனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி ஆகியவை கிடைக்கின்றன.
இதன் 1,450 mAh திறன் கொண்ட பேட்டரி, தொடர்ந்து ஆறு மணி நேரம் பேசும் வசதியைக் கொடுக்கிறது. 200 மணி நேரம் மின் சக்தி தங்குகிறது.
இதன் அதிக பட்ச விலை ரூ.3,790. அனைத்து மொபைல் கடைகளிலும் மற்றும் இன்டெக்ஸ் நிறுவனத்தின் தனிப்பட்ட விற்பனை மையங்களிலும் இவை விற்பனை செய்யப் படுகின்றன. கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் இது கிடைக்கிறது.
Comments