நோக்கியா லூமினா 820 விலை குறைப்பு
இழந்த
சந்தைப் பங்கினைத் திரும்ப எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என நோக்கியா
நிறுவனம் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இதன் கவனம், இப்போது
ஸ்மார்ட் போன்களில் நிலைத்துள்ளது.
தன் லூமியா 820 ஸ்மார்ட் போனின் விலையை ரூ.23,499 எனக் குறைத்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
(டீலர்கள் இன்னும் விலை குறைத்து விற்பனைச் செய்திடும் வாய்ப்புகளும் உள்ளன)
சென்ற செப்டம்பரில் இந்த ஸ்மார்ட் போன் விலைக்கு வந்த போது, இந்திய விலை ரூ. 27,559 என நிர்ணயிக்கப்பட்டது.
4.3
அங்குல AMOLED வண்ணத்திரை, சுத்த கருப்பு நிறப் பின்னணியில் காட்சி, 1.5
கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால்காம் ஸ்நாப்ட்ரேகன்
எஸ்4 ப்ராசசர் கொண்டு, நவீன விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன்
இந்த போன் கிடைக்கிறது.
மற்ற
சிறப்பம்சங்களாக, இதன் இரண்டு கேமராக்கள், 1ஜிபி ராம், 8 ஜிபி ஸ்டோரேஜ்
மெமரி, 1650 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
Comments