ஆண்ட்ராய்ட் மொபைல் யூசர்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி..!

ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் நண்பர்களுக்கு வணக்கம். ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் நபர்கள் கூகிள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து நிச்சயம் அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்து இருப்பீர்கள். 
Alert Message for Android users
அவ்வாறு தரவிறக்கம் செய்து பயன்படுத்தும்போது உங்களுடைய Samsung Galaxy, LG, HTC போன்ற ஆண்ட்ராய்ட் வகை போன்களில் மால்வேர் புரோகிராம்களும் தரவிறங்கிக்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

பேட்நியூஸ் (Badnews)  என்ற இந்த மால்வேர் செய்யும் பணி உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனிலிருந்து தானாகவே தொடர்ச்சியாக குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டே இருப்பதுதான். 
இதனால் என்ன கெடுதல் என்கிறீர்களா? உங்களுடைய மொபைல் பேலன்ஸ் வெகு விரைவாக காலியாகிவிடும். மற்றபடி உங்களுடைய Smart Phone-க்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. 
ஒரு கோடி நபர்களுக்கும் அதிகமானவர்களின் ஆண்ட்ராய்ட் போனில் (Android Phone) இத்தகைய தீங்கிழைக்கும் மால்வேர்கள் புகுந்துள்ளதாக தெரியவருகிறது. கூகில் பிளே ஸ்டோர் (Google Play) அல்லது வேறு தளங்களின் மூலம் அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்து நிறுவும்பொழுது அதனுடைய நம்பகத்தன்மையை உறுதி செய்த பின்னரே தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.  
இந்த மால்வேர் புரோகிராம் இதுவரைக்கும் என்பது லட்சத்திற்கும் அதிகமான போன்களை பாதித்துள்ளதாகவும், எந்த அப்ளிகேஷன் மூலம் இத்தகைய மால்வேர் புரோகிராம் நுழைகிறது என்று அறியப்படவில்லை என்றாலும், கேம்ஸ் (Games android apps) போன்ற குறிப்பிட்ட 32 வகையான அப்ளிகேஷன்கள் மூலமே அதிகமாக பரவியுள்ளதாக ஒரு தகவலும் உண்டு.  ஐரோப்பிய நாடுகளில் விரைவாக பரவிவரும் மால்வேர் நம்நாட்டிலும் பரவ அதிக வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்படவும். 
நன்றி.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?