விண்டோஸ் 7 ன் - சில தொந்தரவுகள்
விண்டோஸ் 7 சிஸ்டம்,
பயன்படுத்த நமக்கு மிகவும் எளிமையானதாகவும், வேகமாக வேலைகளை முடிப்பதற்கான
வசதிகள் கொண்டதாகவும் உள்ளது. ஆனால், நாம் பணியாற்றுகையில், சின்ன சின்ன
இடைஞ்சல்களை இது தருவதாக, நாம் அனைவரும் உணர்கிறோம்.
இவை நம் பணிக்கு
கூடுதல் வசதிகளையும், பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகளையும் தருகின்றன.
இருப்பினும் இவற்றை நாம் விரும்புவதில்லை. எனவே, அவற்றை எப்படி
தவிர்க்கலாம் என்பதை இங்கு காணலாம்.
1. அழிக்கவா வேண்டாமா?
எந்த ஒரு பைலை நாம்
அழிக்க முற்பட்டாலும், அதனை அழிக்கவா? வேண்டாமா? என்ற கேள்வியினை விண்டோஸ் 7
கேட்கிறது. நாம் அடிக்கடி பைல்களை நீக்கும் பணியை மேற்கொள்வதாக இருந்தால்,
இது குறுக்கீடாகத்தான் இருக்கும்.
இது தேவையே இல்லை.
ஏனென்றால், தெரியாமல் நாம் ஒரு பைலை நீக்கிவிட்டாலும், அதனை ரீ சைக்கிள்
பின்னிலிருந்து அல்லது விண்டோஸ் எக்ஸ் புளோரர் பிரிவில் அன் டூ
செயல்பாட்டினை மேற்கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த கேள்வியினை
விண்டோஸ் தராமல் இருக்க, ரீசைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும்.
கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இங்கு Display delete
confirmation என்று இருக்கும் இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை
எடுத்துவிடவும்.
2. கேப்ஸ் லாக் கீ:
நமக்கு கேப்ஸ் லாக்
கீ தேவையா? எத்தனை பேர் இதனை அடிக்கடி பயன்படுத்துகிறோம். தொடர்ந்து பெரிய
எழுத்துக்களில் யாரும் டைப் செய்யப் போவதில்லை. ஓரிரு எழுத்துக்களை பெரிய
எழுத்தாக டைப் செய்திட ஷிப்ட் கீ அழுத்தி பெறுகிறோம்.
கேப்ஸ் லாக் கீயினை ,
நம்மை அறியாமல் அழுத்தி அது இடைஞ்சல் தரும் ஒன்றாகவே நமக்குக் காட்சி
அளிக்கிறது. இது அழுத்தப்படுவதையும், செயலுக்கு வருவதனையும் நிறுத்தலாம்.
disable_caps_ lock.reg file என்ற பைலை http://clicks.aweber.om/y/ct/? l=5GGRE&m=IsYk1pJpHuUKNK&b= g3Urkd2hC6UiLgO_fcxysw என்ற தளத்திலிருந்து டவுண்லோட் செய்திடவும்.
இந்த பைலில் டபுள்
கிளிக் செய்துவிட்டால், இது இயங்கி, கேப்ஸ் லாக் கீ செயல்படுவதனை
நிறுத்திவிடும். இதனால், எந்த பாதிப்பும் இருக்காது. இதற்குப் பின்னர்,
கேப்ஸ் லாக் கீயினை நீங்கள் அழுத்தினால், ஒன்றும் நிகழாது.
3. விண்டோஸ் அப்டேட்:
விண்டோஸ்
இயக்கத்திற்கான அப்டேட் பைல்கள் தானாக உங்கள் சிஸ்டத்தில் டவுண்லோட்
ஆனவுடன், ஓவ்வொரு 4 மணி நேரத்திற்கு ஒருமுறை, தரவிறக்கம் செய்யப்பட்ட
அப்டேட் பைல்களை இன்ஸ்டால் செய்திடவா எனக் கேட்டு ஒரு பாப் அப் விண்டோ
கிடைக்கும்.
போனஸாக நான்
இன்ஸ்டால் செய்கிறேன். நீங்கள் உங்கள் வேலையைத் தொடரலாம் என்றும் ஒரு
டிப்ஸ் தரப்படும். அடுத்து, உங்கள் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்கினால் தான்
இவை செயல்பாட்டிற்கு வரும், இயக்கவா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும்.
அப்புறம் பார்த்துக்
கொள்ளலாம் என்று நீங்கள் பதில் கொடுத்தாலும், மறுபடியும் மறுபடியும் இந்த
பாப் அப் விண்டோ கிடைக்கும். இது நமக்கு நல்லது என்றாலும், நம் தொடர்
பணியில் இது ஒரு குறுக்கீடுதான். எனவே இதனை நம் வசதிப்படி அமைக்க
விரும்புவோம். அதாவது, எப்போது நமக்கு ரீஸ்டார்ட் செய்வதில் பிரச்னை இல்லை
என்று எண்ணுகிறோமோ, அப்போது டவுண்லோட் செய்து கொள்ள விண்டோஸ் சிஸ்டத்திற்கு
நாம் சொல்கிற வகையில் செட் செய்து கொள்ளலாம்.
இதற்கு Windows
Update control panel திறக்கவும். இடது பக்கமாக உள்ள Change settings
என்பதனை அடுத்து பெறவும். இங்கு அதற்கான மாற்றங்களை மேற்கொள்ளவும்.
“Download updates but let me choose whether to install them” என்பதனைத்
தேர்ந்தெடுக்கவும்.
4. விண்டோஸ் சத்தம்:
மாறா நிலையில்,
விண்டோஸ் இயங்கத் தொடங்கியதில் இருந்து, செயல்படும் போதும் மற்றும்
முடிக்கும் போதும் பலவகையான ஒலிகளை ஏற்படுத்தும். ஒரு சிலர், இதனை மிகவும்
ரசிப்பார்கள். சிலரோ, இவற்றை ஒரு தொல்லையாகவே எடுத்துக் கொள்வார்கள்.
இவர்கள், மிக
அமைதியான சூழ்நிலையிலேயே தங்கள் பணியைத் தொடர விரும்பு வார்கள்.
மற்றவர்களுக்கும் இந்த ஒலிகள் தொல்லையாக இருக்கக் கூடாது என
விரும்புவார்கள். இந்த ஒலியை நிறுத்தலாம். உங்கள் சிஸ்டம் ட்ரேயில் உள்ள
ஸ்பீக்கர் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும்.
கிடைக்கும் மெனுவில்
Sounds என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து கிடைக்கும் Sound Scheme
boxல் No Sounds என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த பிரிவில், விண்டோஸ்
இயக்க பணிகள் ஒவ்வொன்றுக்குமாக, ஒலி கிடைப்பதனை நிறுத்தலாம். நாம்
விரும்பும் பணிக்கு மட்டுமான ஒலி மட்டும் கிடைக்கும்படி அமைக்கலாம்.
5. ஆக்ஷன் சென்டர் மெசேஜ்:
நம் கம்ப்யூட்டர்
சிஸ்டம், சில குறைபாடான அமைப்பில் இருந்தால், விண்டோஸ் அதனைச் சுட்டிக்
காட்டி எச்சரிக்கை வழங்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் கம்ப்யூட்டரில்,
ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இல்லை என்றால், விண்டோஸ் பேக் அப் வேலையைச் செயல்
படுத்தவில்லை என்றால் இது போன்ற செய்திகள் காட்டப்பட்டுக் கொண்டே
இருக்கும்.
இவற்றை நிறுத்த
எண்ணினால், சிஸ்டம் ட்ரேயில் உள்ள ப்ளாக் ஐகானில் (flag icon) கிளிக்
செய்து, பின்னர் Open Action Center என்பதில் கிளிக் செய்து ஆக்ஷன்
சென்டரைத் திறக்கவும். அடுத்துள்ள சைட் பாரில், Change Action Center
settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு எந்த மாதிரியான
செயல்பாட்டிற்கு இந்த எச்சரிக்கை செய்தி காட்டப்படக் கூடாது என
விரும்புகிறீர்களோ, அவற்றை முடக்கிவைக்கலாம்.
6. ஸ்டிக்கி கீகள்:
ஒரு சிலருக்கு
ஸ்டிக்கி கீகள் செயல்பாடு தேவைப்படும். ஆனால், பலர் அதனை விரும்புவதில்லை.
இடது புறமாக இருக்கும் ஷிப்ட் கீயை ஐந்து முறை அழுத்தினால், உடனே ஸ்டிக்கி
கீ செயல்பாடு கிடைக்கும். Go to the Ease of Access Center என்பதில் கிளிக்
செய்திடவும்.
அடுத்து “Turn on
Sticky Keys when SHIFT is pressed five times” என்பதில் உள்ள டிக்
அடையாளத்தினை எடுத்துவிடவும். என் சிஸ்டத்தில் ஸ்டிக்கி கீ செயல்பாடே
இல்லையே என்று எண்ணு கிறீர்களா? அப்படியானால், இது ஏற்கனவே
முடக்கப்பட்டிருக்கும். கவலையை விடுங்கள்.
7. பில்டர் கீகள்:
ஸ்டிக்கி கீகள்
போலவே, பில்டர் கீகளும் செயல்படுகின்றன. வலது புறம் உள்ள ஷிப்ட் கீயை சில
நொடிகள் அழுத்தினால், இவற்றிற்கான மெனு கிடைக்கும். மேலே காட்டியது போலவே
இவற்றையும் செயல்படாமல் வைக்கலாம்.
Comments