வெளியானது Samsung Galaxy S4 - முழு விவரங்கள் மற்றும் விலை
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து
மொபைல் உலகம் காத்திருந்த ஒரு போன் என்றால் அது Galaxy S4 தான். மிக நீண்ட
காத்திருப்புக்கு பின் நேற்று வெளியானது இந்த போன். வரும் ஏப்ரல் மாதம்
முதல் 155 நாடுகளில் கிடைக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில்
இயங்கும் இது Android v4.2 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ்
படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை
கொண்டுள்ளது, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். LED
Flash, Auto Focus, Dual Shot, Simultaneous HD video and image recording,
geo-tagging, touch focus, face and smile detection, image stabilization
போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் 2 MP கேமராவை
கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.
இந்த கேமரா மூலமும் Full HD Recording செய்ய முடியும்.
இது 5 Inch Super AMOLED
Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட்
செய்கிறது. Accelerometer, RGB light, Geomagnetic, Proximity, Gyro,
Barometer Temperature & Humidity, Gesture ஆகிய சென்சார்களையும்
கொண்டுள்ளது.
இது 2 GB RAM மற்றும் 1.9 GHz
Quad-Core Processor கொண்டுள்ளது. சில நாடுகளில் இது 1.6 GHz Octa-Core
Processor உடன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் இன்டர்னல் மெமரி
16/32/64 GB அளவில் இருக்கும். 64GB வரை microSD External Memory Card
உள்ளிடும் வசதி உள்ளது. அத்தோடு இது 2600 mAh பேட்டரியுடன் வருகிறது.
இவற்றோடு 3G, 4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.
13 MP கேமரா, 4G என்பது இதன் பெரிய
பிளஸ் பாயிண்ட். அத்தோடு RAM மற்றும் Processor இரண்டும் விலைக்கு
உகந்ததாக உள்ளது. விலை 40,000 இருக்கக்கூடும். அதிக விலை கொடுத்து நல்ல
போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உகந்த போன் இது.
Comments