விண்டோஸ் 8 ல் படத்தினை கொண்டு பாஸ்வேர்டு உருவாக்குதல்

இதற்கு முன் இருந்த விண்டோஸ் இயங்குதளங்களில் எல்லாம் சாதாரணமாக யூசர் அக்கௌண்ட்-ஐ பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டுமெனில்  பாஸ்வேர்டை கொண்டு யூசர் அக்கௌண்ட்-ஐ காப்போம். அதற்கும் மேலாக என்ன செய்வோம் என்றால் Voice Recognizer கொண்டு பாஸ்வேர்டு உருவாக்குவோம். ஒரு சிலர் மூன்றாம் தர Face Recognition மென்பொருளை பயன்படுத்தி விண்டோஸ் யூசர் அக்கௌண்ட்-ஐ பாதுகாப்போம். தற்போது விண்டோஸ் 8 இயங்குதளத்தில் படத்தினை கொண்டு பாஸ்வேர்டை உருவாக்க வசதி உள்ளது அதனை எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம். 

முதலில் உங்களுடைய விண்டோஸ்  யூசர் அக்கௌண்ட்ற்கு பாஸ்வேர்டை வழக்கம் போல் அதே முறைமையை பயன்படுத்தி உருவாக்கி கொள்ளவும். பின் Control Panel யை ஒப்பன் செய்யவும்.


அதில் User Accounts னை கிளிக் செய்யவும். அடுத்ததாக ஒப்பன் ஆகும் விண்டோவில் Make changes to my account in PC settings என்பதை கிளிக் செய்யவும்.


பின் அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Create a picture password என்ற பட்டனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Choose picture என்ற லிங்கை அழுத்தி விருப்பமான படத்தை தேர்வு செய்யவும்.





பின் அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Use this picture என்னும் பட்டனை  அழுத்தவும். அதில் மூன்று அடையாளங்களை உருவாக்கி கொள்ள முடியும். குறிப்பிட்ட படத்தில் மூன்று இடங்களில் கிளிக் செய்யலாம் , இல்லையெனில் ட்ராக் செய்து விசை குறியீடுகளை உருவாக்கலாம் எப்படி வேண்டுமோ விருப்பபடி இந்த பாஸ்வேர்டை உருவாக்க முடியும். மீண்டும் ஒருமுறை பாஸ்வேர்டை கிளிக் செய்யவும்.

இரண்டு முறை தொடர்ந்து ஒரே மாதிரியாக பாஸ்வேர்டை கிளிக் செய்யவும். அப்போது Start Over 1 2 3 என்று வரிசையாக காட்டும். அதற்கேற்ப பாஸ்வேர்டை  உருவாக்கி கொள்ள முடியும்.


தற்போது பாஸ்வேர்டு உருவாக்கப்பட்டு விட்டது Finish பட்டனை அழுத்தவும். அவ்வளவுதான் அனைத்து விண்டோவையும் மூடிவிட்டு கணினியை ஒருமுறை  ரீ ஸ்டார்ட் செய்யவும் தற்போது அந்த படத்தினை கொண்டு பாஸ்வேர்டை கிளிக் செய்யுமாறு தோன்றும். இவ்வாறு படத்தினை கொண்டு உருவாக்கப்படும் பாஸ்வேர்டு மறந்தாலும் சாதரணமாக உருவாக்கிய பாஸ்வேர்டை கொண்டும் பயனர் கணக்கில் நுழையலாம்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?