இந்தியாவில் ஸ்கைப் வழி வைரஸ்
தகவல்
தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கம்ப்யூட்டர் அவசர கால உதவிக் குழு
(Computer Emergency Response Team (CERTIn)), இந்தியாவில் ஸ்கைப்
பயன்படுத்துவோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில்
குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்தது. தற்போது இந்த ஸ்பாம் வேகமாகப் பரவி
வருவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் மட்டுமே இது வேகமாக இயங்கி வருகிறது. ஸ்கைப் பயன்படுத்துவோரின்
காண்டாக்ட் முகவரிகளிலிருந்து மெசேஜ் கிடைப்பது போல செய்தி வருகிறது.
இதில் ஏதேனும் ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால்,
கெடுதல் விளைவிக்கும் வைரஸ் புரோகிராம், கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து
கொள்கிறது.
பின்னர் இந்த புரோகிராம், கம்ப்யூட்டரில் தரப்படும் பெர்சனல் தகவல்களை,
இணையம் மற்றும் வங்கி அக்கவுண்ட்களுக்கான யூசர் நேம் மற்றும்
பாஸ்வேர்ட்களை, தொலைவில் உள்ள இன்னொரு சர்வருக்கு அனுப்புகிறது.
அதனை இயக்குபவர், அங்கிருந்தே, பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரைத் தன்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இந்த வைரஸ் புரோகிராம்
செயல்படுகிறது.
இதனைத் தவிர்க்க, அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்கைப் புரோகிராமினை
டவுண்லோட் செய்து பயன்படுத்தவும். ஸ்கைப் காண்டாக்ட் முகவரியில் உள்ள
நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வரும் இன்ஸ்டண்ட் மெசேஜில் உள்ள
லிங்க்கில் கிளிக் செய்திடக் கூடாது.
இன்ஸ்டண்ட் மெசேஜில் அனுப்பப்படும் பைல்களை டவுண்லோட் செய்திடக் கூடாது.
ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை அப்டேட் செய்து, எப்போதும் இயக்கியபடி வைக்கவும்
என தகவல் தொடர்பு அமைச்சகத்தின் மேற்சொல்லப்பட்ட அமைப்பு எச்சரிக்கை
தந்துள்ளது.
Comments