மொபைல் தொழில் நுட்பம்
GSM Global System for Mobile communications (originally from Groupe Spécial Mobile):
இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மொபைல் போன்கள் தங்களுக்கு மொபைல் சர்வீஸ் தரும் சர்வீஸ் நிறுவனங்களுடன் இணைத்துக் கொள்ள முடியும்.
அல்லது உலகின் எந்த
ஒரு சர்வீஸ் புரவைடருடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். ஜி.எஸ்.எம்.
மொபைல் போன்கள் சிம் கார்டுடன் பயன்படுத்தப்படுகின்றன.
Android:
இது கூகுள்
நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட போன். Open Handset Alliance என்னும்
அமைப்பின் ஆஸ்தான போன் மாடலாக உள்ளது. இது போன் மட்டுமின்றி ஒரு
ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஆகும்.
இது லினக்ஸ் கெர்னல் கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்டது. இது ஏறத்தாழ ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் தொகுப்பினை ஒத்ததாகும்.
ஜாவா வுடன் இந்த
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் குறியீடுகளை இணைத்து இதற்கான கூடுதல் பயன் தரும்
புரோகிராம்களை, புரோகிராம் எழுதத் தெரிந்த யாவரும் அமைக்கலாம் என்பது இதன்
சிறப்பு.
முதன் முதலாக இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வந்த மொபைல் போன் எச்.டி.சி. நிறுவனத்தின் G1 போனாகும்.
Comments