விண்டோஸ் 7 இன் லைப் டைம் ?


மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பிக்கு தரும் உதவியை நிறுத்தப்போவதாக காலக்கெடு கொடுத்து அறிவித்த பின்னர், விண்டோஸ் பயன்படுத்தும் அனைவரும், இது போல அறிவிப்பு அடுத்தடுத்த விண்டோஸ் பதிப்புகளுக்கும் வருமா என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்.


குறிப்பாக, இப்போது பரவலாகப் பரவி வரும் விண்டோஸ் 7 பயனாளர்கள், தங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கும் இது போல சப்போர்ட் நிறுத்தப்படுமா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
இது குறித்து மைக்ரோசாப்ட் ஏற்கனவே அறிவித்துவிட்டது. விண்டோஸ் 7 தொகுப்பிற்கான முதன்மையான, முழுமையான சப்போ
ர்ட், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 15 வரை மட்டுமே கிடைக்கும். இதற்கு அடுத்தபடியாக, இரண்டாம் நிலை சப்போர்ட் 2020 ஆம் ஆண்டு, ஜனவரி 14 வரை மட்டுமே கிடைக்கும்.


முழுமையான சப்போர்ட் என்பது, பாதுகாப்பு மற்றும் சிஸ்ட வசதிகள் மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். பாதுகாப்பில் சிக்கல்கள் ஏற்படுகையில், அவற்றிற்கான பேட்ச் பைல்களும், சிஸ்டம் வசதிகள் மேம்பாடு மற்றும் பிற புரோகிராம்களுடன் இணைந்த செயல்பாடு ஆகியவற்றிற்கான அப்டேட் பைல்களும் தரப்படும்.


இரண்டாம் நிலை உதவி என்பது அடிப்படை செயல்பாடு மட்டுமே கொண்டதாக இருக்கும். பாதுகாப்பு தொடர்பான பேட்ச் பைல்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் பாதுகாப்பு தொடர்பு இல்லாத சிக்கல்கள் மற்றும் வசதிகளுக்கான பைல்கள், கட்டணம் செலுத்தினாலே தரப்படும். 

சிஸ்டத்தில் புதிய வசதிகள் எதுவும் இணைக்கப்பட மாட்டாது. எடுத்துக் காட்டாக, விண்டோஸ் எக்ஸ்பிக்கான முதன்மை மற்றும் முழுமையான உதவி, 2009 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 அன்று முடிந்தது. விஸ்டாவிற்கான உதவி 2012, ஏப்ரல் 12 அன்று முடிந்தது.


எக்ஸ்பி மற்றும் விஸ்டாவிற்கு, இரண்டாம் நிலை சப்போர்ட் முடிவடையும் நாட்களை, உங்களுக்கு நினைவூட்டவா! எக்ஸ்பி சப்போர்ட் 2014, ஏப்ரல் 8ல் முடிகிறது. விஸ்டாவிற்கான சப்போர்ட், ஏப்ரல் 11, 2017ல் முடிகிறது.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க