இந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா?
இந்தியாவைப் பொறுத்தவரை, கூகுள் தளங்களி ல் உள்ள சில ஆட்சேபகரமான செய்திகள் மற்றும் தகவல்களை நீக்குமாறு, இந்திய நீதிமன்றங்கள் தொடர்ந்து ஆணைகளை வழங்கி வருகின்றன. இவை பெரும்பாலும் தனிநபர் குறித்த தகவல்கள் மற்றும் மத சம்பந்தமான தகவல்களே ஆகும். சென்ற ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், 20 கோர்ட் ஆணைகள் மூலம் 487 தகவல்கள், கட்டுரைகள் நீக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த அளவிற்கு தடை ஆணை வழங்கப்படவில்லை. தனி நபர்கள் தொடுத்த வழக்குகளின் அடிப்படையிலேயே இந்த ஆணைகள் வழங்கப்பட்டன. சென்ற 2011 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஐந்து ஆணைகள் மூலம் ஒன்பது தகவல் கட்டுரைகள் நீக்கப்பட, நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. கூகுள் இந்த ஆணைகளை நிறைவேற்றியதா? இந்த ஆண்டு தரப்பட்ட ஆணைகளில் இதுவரை 33% மட்டுமே நீக்கப்பட்டதாகத் தெரிகிறது. நீதிமன்றங்கள் மூலம் கூகுள் பெறும் தடைகளின் எண்ணிக்கையில், இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. அமெரிக்க நீதிமன்றங்கள் இதே காலத்தில் 209 ஆணைகளை வழங்கி உள்ளன. அடுத்த இடங்களில், ஜெர்மனி, பிரேசில், துர...